Thursday, January 12, 2012

புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கியவை....




மக்களிடம் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது..என யார் சொன்னது...

அவர்களையெல்லாம் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து வாருங்கள்...மக்கள் ஆர்வமாக தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை..மாத குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழுவது பற்றிகூட கவலைப்படாது ஆயிரக் கணக்கில் செலவு செய்து புத்தகமாய் வாங்கிக் குவிக்கிறார்கள்.கண்டிப்பாக வாங்கியவற்றில் சிலவற்றையாவது ஜனவரியில் படித்திருப்பர்.

சென்னையில் உள்ள பதிவர்களில் யாராவது புத்தகக் கண்காட்சிப் பற்றி பதிவிடாமல் இருந்தால்..அவர்களை பதிவர்கள் சேர்ந்து விலக்கி வைக்கப் போவதாக ரகசியத் தகவல் கிடைத்ததால்..அவசர அவசரமாக ..கையில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு கண்காட்சிக்கு விரைந்தேன்.அந்தப் பணத்தில் கணிசமான தொகை பேருந்திற்கும்..ஆட்டோவிற்கும் செலவானது தனிக்கதை.

இம்முறை நான் வாங்கிய சில புத்தகங்கள்..

1) சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் - தமிழினி ரூ. 90

2)மரப்பசு -தி ஜா ரா-ஐந்திணை ரூ 100

3)லா.ச.ரா.  கதைகள் (முதல் தொகுதி) - உயிர்மை -ரூ 300

4)பெற்ற மனம் -மு.வ.,   -பாரி நிலையம் -  ரூ 120

5) வட்டத்தின் வெளியே - நீல.பத்மனாபன் - திருவரசு - 70

6) மருக்கொழுந்து மங்கை (சரித்திர நாவல்) சல்லிசான விலையில் கிடைத்தது. 463 பக்கங்கள் விலை 32

தவிர்த்து சில விலை குறைவு புத்தகங்கள் வாங்கினேன்..அதைப் பற்றி பிறகு.

நாஞ்சில் நாடனின் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்.அருமை..கண்டிப்பாக படிக்க வேண்டிய, படித்த பின் கருத்துகளை ஒத்த கருத்துள்ளவருடன் பகிர்ந்து கொள்ள வெண்டும்.புத்தகம் பற்றிய விமரிசனம் விரைவில்.

6 comments:

ராமலக்ஷ்மி said...

முதல் புத்தகம் நானும் வாங்கி வைத்திருக்கிறேன். நீங்கள் முன்னர் போட்ட கவிதைக்குப் பொருந்தும் விதமாக, இன்னும் வாசிக்க ஆரம்பிக்கவில்லை:(! விரைவில் செய்கிறேன். உங்கள் விமர்சனப் பகிர்வுகளுக்குக் காத்திருக்கிறோம்.

Vadielan R said...

தல மரிக்கொழுந்து மங்கை எந்த ஸ்டாலில் கிடைக்கிறது எங்கே என்று சொன்னால் நானும் வாங்கிக் கொள்வேன். நன்றி

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராமலஷ்மி..
புத்தகத்திற்கான உங்கள் விமரிசனமும் அறிய அவா..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி vadivelan
மீனாக்ஷி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Rathnavel