சாதாரணமாக எழுத்தாளர்களும், கவிஞர்களும் பெண்ணை வர்ணிக்கும் போது...
பிறை நுதல், எள்ளுப் பூ நாசி, ஆரஞ்சு சுளை உதடுகள், முத்துப் பற்கள், கயல் விழி என்றெல்லாம் வர்ணிப்பர்.
விகடனில் , மூன்றாம் உலகப் போர் தொடரில் வைரமுத்துவின் பெண் வர்ணனையைப் பாருங்கள்..
கெழங்கு ராணி மாதிரி பிறவிய யாரும் பார்த்திருக்க மாட்டீங்க.பார்த்திருந்தா கடைவாயில பாலு ஊத்தற வரைக்கும் கண்ணைவிட்டுப் போகாது அவ ரூவம்.கொஞ்சம் எக்கி நின்னா ஆறடி இருப்பா அவ.பின்னி வச்ச சடை.பின் முதுகு தாண்டிப் பிருஷ்டப் பள்ளத்தில எறங்கி, கெண்டைக்கால உரசிக் குதிக்காலத் தொட இன்னும் கொஞ்சம் வசதியில்லையேன்னு வருத்தப்படும்.
அகலமான ஒடம்பு அவளுக்கு.சொளகு மாதிரி முதுகு.அதுல - ஒரு துளி இருட்டு ஒழுகி விழுந்த மாதிரி ஒரு மச்சம்.விளைஞ்ச தேனைப் புழிஞ்சு வடிகட்டிவச்சு ரெண்டு நாளைக்குப் பெறகு தொறந்து பாத்தா- தெளிஞ்சு நிக்குமே..அப்படி ஒரு நெறம்.எண்ணால 8 எழுதினா நடுவில ஒடுங்கி நிக்குமா இல்லையா அப்படி ஒரு இடுப்பு.
விளைஞ்ச வெள்ளைப் பாறைய வாழைத்தண்டு பதத்துக்கு வழவழன்னு செதுக்கி வச்ச மாதிரி ரெண்டு காலு.ஊமை காதுல சொன்ன ரகசியம் மாதிரி உள்ளடங்கிப் போன வயிறு.'ஆம்பளையா இருந்தா அடக்கிப் பாரு' ன்னு வாரவன் போறவனை எல்லாம் வம்புக்கு இழுக்கிற மார்பு.இள வாழை இலைய நெய்யில துடச்சுவச்ச மாதிரி மினுமினுன்னு ஒரு கழுத்து.இந்தப் பொருத்தமான உடம்புக்குத் திருத்தமான மூஞ்சி.இதுதாண்டான்னு பிரம்மனே வேட்டி போட்டுத் தாண்டுற மாதிரி செதுக்கிவச்ச மொகம்.
4 comments:
காலத்துக்கு ஏத்தமாதிரி எழுத்திலயும் நாகரீகம்.அதுதான் ரசிப்பு அப்பபோலவே இருந்தாலும் வர்ணிச்ச விதம் வித்தியாசமா வந்திருக்கு !
அருமை..........
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
அழகிய வருணணை.
அழகிய வருணணை
Post a Comment