சுழன்றும் ஏர் பின்னது உலகம்..
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்..
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
ஏர் முனைக்கு நேர் எதுவுமே இல்லை..
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் விவசாயி
இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா? அந்த விவசாயி நமக்கு உணவு படைத்துவிட்டு அவன் வறுமையில் வாடலாமா?
அவன் நிலங்களை பறித்துக் கொண்டு காங்கிரீட் கட்டிடங்களாகவும்..தொழில் நகரங்களாகும் உருவாகும் நிலை தொடரலாமா?
வறுமை தாங்காது..மக்களுக்கு உணவு வழங்கிய ஒரே காரணத்திற்காக அவன் தற்கொலை செய்து கொள்ளலாமா?
மென் பொருள் துறையினரால்..அரசுக்கு அந்நியச் செலவாணி வருவாய் இருந்தாலும்...தொழில்களால் வேலை வாய்ப்புகள் கூடினாலும் அடிப்படை எது என எண்ணினால்..விவசாயியின் கைகள் தான்.
அரசு இலவச மின்சாரம், மானியம் என்று வழங்கினாலும்..அதெல்லாம் அவனுக்குப் போய் சேருகிறதா?
இயற்கையின் சீரழிவுகள் அவனை எவ்வளவு பாதிக்கின்றன...ஒரேயடியாக..அவன் வாழ்வாதாரமே பாதிக்கப் படுகிறதே...
இந்தியா விவசாய நாடு என்பது சிறிது சிறிதாக மாறிவரும் நிலை தோன்றுகிறதே!
என்று விவசாயிகள் வறுமை மறைகிறதோ..அன்றுதான் நாடு சிறக்கும்..
அதுவரை ஏட்டளவிலே தான் அவன் பெருமையை பேசிக்கொண்டிருக்க வேண்டும்..
நிலைமை மாறுமா???
மாறும்..மாற வேண்டும் என்னும் நம்பிக்கையுடன் பொங்கலிடுவோம்..
அனைவருக்கும் மங்கலம் நிறைந்த இனிய பொங்கல்தின நல்வாழ்த்துகள்
12 comments:
எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .
/என்று விவசாயிகள் வறுமை மறைகிறதோ..அன்றுதான் நாடு சிறக்கும்../
உண்மை.
இனிய உழவர் திருநாள் வாழ்த்துகள்!!
நல்ல பதிவு.
வாழ்த்துகள்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்
தமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்.
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
நண்டு @நொரண்டு
இனிய உழவர் திருநாள் வாழ்த்துகள் ராமலக்ஷ்மி
உழவர் திருநாள் வாழ்த்துகள் Ratnavel
உழவர் திருநாள் வாழ்த்துகள் அப்பு
மனம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் வாழ்த்து உங்களுக்கும் காஞ்சனா அன்ரிக்கும் !
தங்களுக்கும் தங்கள் இல்லத்தினர் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்
நன்றி ஹேமா..வாழ்த்துகள்
நன்றி கோவி.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தினர் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்
Post a Comment