சென்னையில் நடந்த தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார் மேலிட பொறுப்பாளரும்,
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருமான லிஜூ,
தமிழக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராக கட்சி மேலிடம் கேரளாவைச் சேர்ந்தவரான அகில இந்திய இளைஞர் காங்கிரஸ்
பொதுச் செயலாளர் லிஜூவை நியமித்துள்ளது. இதற்கு தமிழக இளைஞர் காங்கிரஸார் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியது. இருப்பினும்
அதை காங்கிரஸ் மேலிடம் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் நேற்று நடந்த இளைஞர் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் லிஜு கலந்து கொண்டார்.
அவரை மாநில காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா உள்ளிட்டோர் சிறப்பாக வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பின்னர் சத்தியமூர்த்தி பவனில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் லிஜு கலந்து கொண்டார். அதன் பிறகு வழக்கம் போல
சத்தம், அமளி, துமளிகள், குற்றங்கள், கூப்பாடுகளுடன் கூட்டம் நடந்தது.
கூட்டத்தின் இடையே ஒரு நிர்வாகி எழுந்து, கூடங்குளம் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்துப் பேசினார்.
முல்லைப் பெரியாறு அணை குறித்த போராட்டத்தை இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்த வேண்டும். அதற்கு லிஜு தலைமை தாங்க வேண்டும் என்றார்.
அதைக் கேட்டதும் சட்டென்று எழுந்த லிஜு,முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், உங்கள் நிலைப்பாடு போராட்டமாக இருந்தால்,
அதை நடத்துங்கள். ஆனால் போராட்டத்திற்கு நான் தலைமை வகிக்க முடியாது. அது, கேரள மாநில அரசியலில் எனக்கு சிக்கலை
ஏற்படுத்திவிடும் என்றார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தினால் அதில் நான் பங்கேற்க மாட்டேன்.
உங்களுக்காக எங்களது மாநிலத்தை நான் பகைத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
இருப்பினும் லிஜூ பேசியதை அமைதியாக ஏற்றுக் கொண்டனர் தமிழக இளைஞர் காங்கிரஸார்.
8 comments:
என்னத்தை சொல்ல கடுப்பாகதான் இருக்கிறது காங்கிரஸ்'காரர்களின் நிலைப்பாடு...!!!!
kaangiraskaaranukku soranai enbadhu katrukkodukkavendum
vetkangkettavargal
என்ன சொல்ல
தமிழக காங்கிரஸ்காரனை கண்டால் உதை! கல்லால் அடி!
இனியும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் இருக்கணுமா?
http://dmk-jobs.blogspot.com/2012/01/blog-post_9486.html
மலையாளி எம்.ஜி.ஆரின் மிகப்பெரிய துரோகம் - முல்லைப்பெரியாறு???
http://dmk-jobs.blogspot.com/2012/01/blog-post_3310.html
வருகைக்கு நன்றி mano
வருகைக்கு நன்றி விழித்துக்கொள்
வருகைக்கு நன்றி Komathi jobs
வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு
Post a Comment