Saturday, March 31, 2012

நொறுக்குத்தீனிகள் உடலுக்குக் கேடு... உஷார்




சில முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் உணவு பொருட்கள் மற்றும் நொறுக்குத்தீனிகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கலப்படங்களின் அளவு அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுக்குறித்து, டெல்லியில் உள்ள அரசு சாரா அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஒன்று மிகவும் பிரபலமான சில நிறுவனங்களின் தயாரிப்புக்களை ஆய்வக சோதனைக்கு தேர்ந்தெடுத்து சோதனை செய்தது.

அந்த ஆய்வில், குறிப்பாக மேகி, டாப் ராமன் நூடுல்ஸ், மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கே.எப்.சி பிரைட் சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த உணவுப் பொருட்களை சோதனை செய்த போது, அதில் அளவுக்கு அதிகமாக ’டிரான்ஸ்’ என்ற கொழுப்பு வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாக தெரிந்திருக்கிறது.

ஆனால், விளம்பரத்திற்காக இந்த நிறுவனங்கள் கூறும் முதல் வார்த்தை கொழுப்பற்றது, எந்த வித கலப்படமும் இன்று இயற்கையான மற்றும் 100% இயற்கையானது என்று பல்வேறு தகவல்களை கூறி விற்பனை செய்கிறது.

மேலும், இந்த பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு என்பது இதயத்தில் உள்ள வால்வுகளின் பாதையை குறுகலாக்குகிறது. இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவற்கான வாய்ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது.

இளம் வயதிலேயே நிறைய பேர் எடை அதிகமாவது, நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு ஆளாவதில் இந்த கலப்படங்கள் பங்கு வகிப்பதால் இயன்ற வரை இது போன்ற உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று அந்த நிறுவனம் அறிவுரை கூறியிருக்கிறது.

தகவல் வெப்துனியா

செய்திகள்

Friday, March 30, 2012

பறக்குது..பறக்குது..பணம்...





மின்கட்டண உயர்வு..பால், பேருந்து கட்டண உயர்வு, பெட்ரோல்/டீசல் விலை உயர்வு, வாடகை உயர்வு
..அடேங்கப்பா..

ஆனாலும் 28 ரூபாய் செலவு செய்யறவன் வறுமைக் கோட்டிற்குள் அல்ல..

என்ன உலகமடா..இது....

'இரும்புத்திரை' படத்தில் பட்டுக்கோட்டையார் எழுதிய இப்பாடல் தான் நினைவிற்கு வருகிறது..இதில் சில வரிகள் மாற்றப்பட்டால்/சேர்க்கப்பட்டால் இன்றைய நிலைக்கும் பொருந்தும். தீர்க்கதரிசி அந்தக் கவி.


கையிலே வாங்கினேன் பையிலே போடலே
காசுபோன இடம் தெரியலே _ என்
காதலிப் பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்வதென்றும் புரியலே
ஏழைக்கும் காலம் சரியில்லே

மாசம் முப்பது நாளும் ஒளைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசை வாங்கினாக் கடன்கார னெல்லாம்
கணக்கு நோட்டோட நிக்கிறான் _ வந்து
எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான் (கையிலே…)

சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா
பட்டினியால் பாடுபட்டா
கட்டுக்கட்டா நோட்டுச் சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே _ அது
குட்டியும் போடுது வட்டியிலே (கையிலே…)

விதவிதமாய்த் துணிக இருக்கு
விலையைக் கேட்டா நடுக்கம் வருது
வகைவகையா நகைகள் இருக்கு
மடியைப் பார்த்தா மயக்கம் வருது
எதைஎதையோ வாங்கணுமின்னு -அண்ணே        -எதை
எண்ணமிருக்கு வழியில்லே _ இதை
எண்ணாமிலிருக்கவும் முடியல்லே (கையிலே…)

கண்ணுக்கு அழகாப் பொண்ணைப் படைச்சான்
பொண்ணுக்குத் துணையா ஆணைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்
என்னைப் போலே பலரையும் படைச்சு _ அண்ணே
என்னைப் போலே பலரையும் படைச்சு
இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்
ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்? (கையிலே…)

நிகழ்வு- வறுமைக்கோடு

Thursday, March 29, 2012

சிதைந்த முகத்திற்கு பதில் புதிய முகம்:



பதினைந்து ஆண்டுகளுக்கு முன் துப்பாக்கி குண்டு விபத்தில் பாதிக்கப்பட்டு முகம் சிதைந்த விர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு தற்பொழுது அறுவை சிகிச்சை மூலம் புதிய முகம் கிடைத்துள்ளது. 15 ஆண்டுகளாக தன்னுடைய முகத்தை வெளியில் காட்டவே பயந்த அந்த இளைஞர் தற்போது தனது புதிய முகத்தைக் கண்டு மகிழ்சியடைந்துள்ளார்.

தெற்கு அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா மாகாணம் ஹில்ஸ் வில்லி பகுதியை சேர்ந்தவர் ரிச்சாட் லீ நாரிஸ்.15 வருடங்களுக்கு முன் ஒரு துப்பாக்கி குண்டு விபத்தில் தாக்கப்பட்டார். இதில் அவரது முகத்தில் மூக்கு மற்றும் வாய் பகுதி முற்றிலும் சிதைந்தது. இதில் முகம் நிறைய தையல் போட்ட தழும்புகள் நிறைந்தும், சிதைந்தும் இருந்ததால் அவர் முகமூடி ஒன்றை அணிந்தே வெளி இடங்களுக்கு செல்வார். அவரை எல்லோரும் விநோதமாக பார்ப்பதை தவிர்க்க அவர் பெரும்பாலும் வெளியே செல்வது இல்லை. இரவு நேரங்களில் மட்டுமே வெளியே வருவார்.

பற்களை இழந்த அவருக்கு நாக்கின் ஒரு பாகம் மட்டுமே உள்ளதால் அவருக்கு ருசி பார்க்க முடியும். ஆனால் வாசனைகளை நுகர்ந்து பார்க்க முடியாத நிலையில் இருந்தார். மேலும் நெற்றியில் கூடுதலாக தையல்கள் போடப்பட்டுள்ளதால் அவரது கண் பார்வையிலும் குறைபாடு இருந்தது. மூக்கும், உதடுகளும் முற்றிலும் உருக்குலைந்து போனது. தனது நுகர்வு சக்தியையும் அவர் இழந்துவிட்டார்.

15 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தற்போது முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் புதிய ஒரு முக வடிவம் கிடைத்துள்ளது. மேரிலாண்ட் மருத்துவ மையத்தில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் அவருக்கு மூக்கு மற்றும் உதடுகள் சீர்செய்யப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளாக அவர் தொலைத்த நுகர்வு தன்மையை திரும்ப பெற்றுள்ளார்.

இந்த முக மாற்று அறுவை சிகிச்சை உறுப்பு தானம் செய்யப்பட்ட ஒருவரிடன் முகத்தில் இருந்து இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனினும் அவரது முகச்சாயல் இவரிடம் இல்லை. ஒரு புது முகச்சாயலைப் பெற்றுள்ளார்.

இந்த அறுவை சிகிச்சையில் அவருக்கு வேறொருவருடைய மேல் மற்றும் கீழ்தாடை, பற்கள், மூக்கு, நாக்கின் எஞ்சிய பகுதி மற்றும் முக திசுக்கள் பொறுத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை 36 மணி நேரம் வரை நீடித்தது. தற்போது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது லீ நாரிஸ் தனது முகத்தை உணரத் தொடங்கியிருக்கிறார். அவரால் இப்போது முகச்சவரம் செய்யவும் பல் துலக்கவும் முடிகிறது. அதிக செலவுடன் அதிக நேரம் நடந்த நடத்தப்பட்ட முதல் அறுவை சிகிச்சை இதுதான் என்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்த தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் ரோட்ரீகெஸ் தெரிவித்துள்ளார்.

தகவல் - தட்ஸ்தமிழ்


செய்திகள்

Wednesday, March 28, 2012

இடிந்தகரை போராட்டத்தில் பங்கேற்க வரும் அச்சுதானந்தன்...




 இடிந்தகரையில் நடந்து வரும் அணு உலை எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மற்றும் சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே குழுவைச் சேர்ந்த பிரஷாந்த் பூஷன் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்று கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட எங்கள் குழுவைச் சேர்ந்த 200 பேர் கைது செய்யப்பட்டு சிறையி்ல் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வெளியே கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதுவரை இடிந்தகரையில் அமைதியான முறையில் போராடிக் கொண்டிருப்போம்.

அவர்கள் சிறையில் இருந்து வெளியே வரும் வரை கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள். குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மாட்டார்கள்.

மேலும் எங்கள் போராட்டத்தில் பங்கேற்க சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே குழுவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷனின் மகன் பிரசாந்த் பூஷன் வரும் 31ம் தேதி இடிந்தகரை வருகிறார். இதே போல் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் வரும் ஏப்ரல் மாதம் 11ம் தேதி எங்களை வந்து சந்திக்கவிருக்கிறார் என்றார்.

டிஸ்கி - அச்சுதானந்தன் முல்லை பெரியாறு அணை விஷயத்தில் தமிழகத்திற்கு எதிராக..அணை கட்டியே தீருவோம் என சொல்லி வருபவர். மேலும்..அணு உலைக்கு இங்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில்..அவர் எப்படி???? ஒன்னுமே புரியலே உலகத்திலே


Sunday, March 25, 2012

குடியரசுத் தலைவர் பயணச்செலவு ரூ.205 கோடி




வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் எண்ணிக்கையில் கோல்மால் தகவல்களை வெளியிடும் மத்திய அரசு ஒரு புறமிருக்க, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் அயல்நாட்டுப் பயணச் செலவு மட்டும் ரூ.205 கோடி என்று தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் திரட்டப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் இவர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்திற்காக இந்த செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாடு சென்ற ஜனாதிபதிகளில் இவர் தான் அதிக முறை நாடுகளுக்கு சென்று சாதனை (!) படைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீல் பதவியேற்றார்.இவரது பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இவர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் குறித்தும் அதற்காக அரசு செலவிட்ட தொகை குறித்தும் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்டது.

இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் ‌அளிக்கப்பட்டுள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 5 ஆண்டுகளில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் 79 நாட்கள் என இதுவரை 12 முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டு 22 நாடுகளுக்கு அரசு முறைப்பணயமாக சென்றுள்ளார்.

இதில் ஏர் இந்தியா வாயிலாக சென்ற வகையில் விமானச்செலவு ரூ. 169 கோடி ரூபாயும், மற்றும் ஜனாதிபதிக்கான இதர சலுகைகள் மற்றும் தங்கும் வசதி உணவு போன்ற செலவினங்களாக ரூ. 36 ‌கோடியும் என மொத்தம் ரூ.205 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ரூ.169 கோடி ரூபாயினை ராணுவ அமைச்சகம் ஏற்றுள்ளது . ரூ.153 ‌கோடி மட்டுமே ஏர்இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. பாக்கி தொக‌ை ரூ.16 கோடி நிலுவையில் உள்ளது. இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி வெப்துனியா


Friday, March 23, 2012

கொலைகாரனும்..நீதிபதியும்..இந்திய அரசும்..


கொலைகாரனும்..நீதிபதியும்..இந்திய அரசும்..

ஒரு ஊரில் ஒரு கொலைகாரன் இருந்தான்.அவன் சகட்டுமேனிக்கு அப்பாவி மக்களைக் குன்று குவித்தான்.அவன் மீது நீதிமன்றத்தில் வழக்கு வந்தது.அவனுக்கு வாதாட மாட்டேன் என்றார் ஒரு பிரபல வழக்கறிஞர்.

பின் அவர் நீதிபதியைப் பார்த்து..'யுவர் ஹானர்...இந்த வழக்கில் பல கொலைகளை குற்றவாளி செய்திருக்கிறான்.ஆனாலும் அவனை விசாரிக்கலாமா? என அவனையே கேட்க வேண்டும்.கொலை நடந்த இடங்களை ஆராய நீதிமன்றம் அமைக்கும் கமிட்டியையும் அவன் ஒப்புதல் பெற்றே அமைக்க வேண்டும்' என்றார்.

அவனை ஏன் கைது செய்ய வேண்டும்..பின் அரசு வழக்கறிஞர் உள்பட அனைவரும் ஏன் இப்படி பேச வேண்டும்? இதற்கு பதில் அவன் மீது எந்த விசாரணையும் தேவையில்லை என்றே அறிவித்திருக்கலாமே..என நீதிமான்கள் தலையைப் பிய்த்துக் கொண்டனர்.

மேலே சொன்ன கதைக்கும்..ஐ.நா., வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிப்பதாகச் சொல்லிவிட்டு..திருத்தங்களைக் கொணர்ந்த இந்திய அரசிற்கும் சம்மந்தமில்லை.  

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையை ஆதாரத்துடன் மெய்ப்பிக்க வாய்ப்பளிக்கும் ஒரு நியாயமான விசாரணைக்கு வழிவகுக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு சாதகமான இரண்டு திருத்தங்களைச் செய்துள்ள இந்திய அரசு, அதன் மூலம் நேர்மையான விசாரணைக்கு முட்டுக்கட்டையை உருவாக்கி உள்ளது.

தீர்மானத்தின் 3-வது பிரிவில், பன்னாட்டு மனிதா பிமானச் சட்டங்களின் கீழ் நடத்தப்பட வேண்டிய விசாரணையில் ஐ.நா.மனித உரிமை மன்றத்தின் ஆலோசனையையும், விசாரணையை மேற்கொள்வது தொடர்பான சட்ட ரீதியான தொழில் நுட்ப உதவிகளையும் இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருந்தது.

இதனை, இலங்கை அரசுடன் ஆலோசனை நடத்தி அதன் ஒப்புதலைப் பெற்று நிறை வேற்றவேண்டும் என்று இந்தியா திருத்தம் செய்துள்ளது. இது கொலைக்காரனின் ஆலோசனையுடன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.

இது மட்டுமின்றி, விசாரணைத் தொடர்பாகவும், அங்கு போரினால் அனைத்தையும் இழந்த தமிழ் மக்களுக்கு செய்யப்படும் மனிதா பிமான நடவடிக்கைகளையும் ஆராய வரும் ஐ.நா. குழுவினர் இலங்கை அரசின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அந்நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றும் இந்திய அரசு வலியுறுத்தி, ஏற்றுக் கொள்ளச் செய்துள்ளது.

Thursday, March 22, 2012

ச‌த்‌தியபாமா க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் 8 பே‌ர் கைது




சத்தியபாமா கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்களிடமிருந்து 2 துப்பாக்கி, 8 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

செ‌ன்னை அடு‌த்த ஈ‌ஞ்ச‌ம்பா‌க்க‌த்‌தி‌ல் உ‌ள்ள ஒரு த‌னி ‌வீ‌ட்டி‌ல் வடமா‌நில‌‌த்தை சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் இரு‌ப்பதாக ‌நீல‌ா‌ங்கரை காவ‌ல்துறை‌க்கு ரக‌சிய தகவ‌ல் வ‌ந்தது.

இதையடு‌த்து ந‌ள்‌ளிர‌வி‌ல் அ‌ந்த ‌வீ‌ட்டை த‌னி‌ப்படை‌யின‌ர் சு‌ற்‌றி வளை‌த்து அ‌திரடி சோதனை நட‌த்‌தின‌ர். அ‌ப்போது அ‌ங்‌கிரு‌ந்த 8 பேரை ‌பிடி‌த்த கா‌வ‌ல்துறை‌யின‌ர் அவ‌ர்க‌ளி‌ட‌ம் இரு‌ந்து 2 து‌ப்பா‌க்‌கி, 8 தோ‌ட்டா‌‌க்களை ப‌றிமுத‌ல் செ‌ய்தன‌ர்.

விசாரணை‌யி‌ல், ‌பீகா‌ரை சே‌ர்‌ந்த மாணவ‌ர்க‌ள் எ‌ன்று தெ‌ரியவ‌ந்தது. செ‌ன்னை ச‌த்‌தியபாமா பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரி‌யி‌ல் அவ‌ர்க‌ள் படி‌த்து வருவதையு‌ம் கா‌வ‌ல்துறை‌யின‌ர் உறு‌தி செ‌ய்து‌ள்ளன‌ர்.

‌பிடி‌ப்ப‌ட்ட 8 பே‌ரிடமு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர ‌விசாரணை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன‌ர்.

Wednesday, March 21, 2012

திருமங்கலம் ஃபார்முலாவும்...சங்கரன்கோவிலும்...




சங்கரன் கோவிலில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

சாதாரணமாக பார்த்தால்..இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.ஆளும் கட்சிதான் இடைத்தேர்தல்களில் வெற்றி பெறும் வாய்ப்புகளை அதிகம் உடையது.தவிர்த்து பணமும் இது போன்ற தேர்தல்களில் இறைத்துவிடப்படுகிறது கட்சிகளால்.

சமீபகாலமாக..இது போல பணத்தால் வெல்லப்படுவதை 'திருமங்கலம் ஃபார்முலா' என்கிறார்கள்.

இச்சமயத்தில் ஒன்றை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்...பணம் கொடுக்கப்படும் வழக்கத்தை ஆரம்பித்ததே..இந்த இரு திராவிடக் கட்சிகள்தான்..இவர்கள் ஒருவரை ஒருவர்..வெல்லும்போது...பணத்தால் வென்றார்கள் என ஒரு கட்சி மற்ற கட்சியின் மீது புகார் சொல்வது..வேடிக்கையானது..பழகிப்போன ஒன்று.

சங்கரன்கோவிலைப் பொறுத்தவரை..அதிமுக பற்றி அனைத்து கட்சிகளும்..'அதிமுக அமைச்சர்கள் அனைவரும் அங்கு முகாம் இட்டிருந்தனர்..ஆடு, மாடு,மிக்ஸி,கிரைண்டர்,பணம் ஆகியவை கொடுக்கப்பட்டன' என்றுள்ளன.(திமுக மத்திய அமைச்சர்களும் அங்குதான் இருந்தனர்..முக்கியமாக பட்ஜெட் அன்று பழனிமாணிக்கம் இங்குதான் இருந்தார்)

இவற்றில் உண்மை இருக்கலாம்..ஆனால் எவ்வளவு பேருக்கு இப்படிக் கொடுக்கப் பட்டிருக்கும்..ஓரளவு வெல்வதற்கு தேவையான அளவு என்றால்..அதிமுக வின் வெற்றி அபரீதமாக உள்ளதே..பெற்ற வாக்குகள் 94977 வாக்கு வித்தியாசம் 68757..இது எப்படி..

இதற்கான காரணம் என நான் நினைப்பது...

மக்களுக்கு திமுக மீதான கோபம் இன்னமும் போகவில்லை (வேட்பாளர் டிபாசிட் இழந்துள்ளார்)

காங்கிரஸுடன் திமுக கூட்டு உள்ளவரை திமுக வை மக்கள் புறக்கணிப்பர்.

அதிமுக வை மக்கள் நம்புகின்றனர்..இவர்களுக்கு அவர்கள் மேல் என்பது போலத்தான் நம்பப்படுகிறது.

ஆளும் கட்சிக்கு ஓட்டளிக்க வில்லையெனில் நம் தொகுதி கவனிக்கப்படாது என்ற பயம்...இவற்றில் ஒன்றுதான்.



Monday, March 19, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: மழுப்புகிறார் பிரதமர் - ஜெ



 அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பான பிரதமரின் விளக்கம் மழுப்பலாகவும், பயன் இல்லாததாகவும் உள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் அப்பாவித் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து இனப் படுகொலைகளை நிகழ்த்தியவர்களைப் போர்க் குற்றவாளிகள் என பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும் இலங்கை அரசு அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு வழங்கி அவர்கள் சிங்களர்களுக்கு சமமாக, கண்ணியமாக வாழ வகைசெய்யும் வரை இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பதற்கு மற்ற நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு செயல்பட வேண்டும் என்றும் தீர்மானம் ஒன்று தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசு இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய்மூடி இருந்து வந்தது.

இந்தத் தருணத்தில், ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசைக் கண்டித்து அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அந்த தீர்மானத்தின் மீது இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாகச் செயல்படும் என இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக கருத்துகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டது. உடனே அது குறித்து எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த பிப்ரவரி 29ம் தேதி கடிதம் எழுதினேன்.

இந்தக் கடித்ததுக்கு பதில் வராத நிலையில், இலங்கை அரசைக் கண்டித்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய அரசு, 'ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்காது, உலக அளவில் நடைபெறும் பிரச்னைகளுக்கு பொதுவாக ஆய்வு செய்யும் அடிப்படையில்தான் இந்தியாவின் அணுகுமுறை இருக்கும்' என்று கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

உடனே மீண்டும் இந்த மாதம் 3-ம் தேதி பிரதமருக்கு இது குறித்துக் கடிதம் எழுதி ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா உறுதிபட ஆதரிக்க வேண்டும், இலங்கை அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.


மார்ச் 19ம் தேதி மக்களவையில் பிரதமர் பேசும்போது, "அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் இறுதி வடிவம் தன்னிடம் இல்லை. தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் மனப்பாங்கில் இந்திய அரசு உள்ளது. அது இலங்கைத் தமிழர்களுக்கு சுயமரியாதை, சம அந்தஸ்து, கண்ணியம் இவற்றுடன் கூடிய எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற இந்தியாவின் குறிக்கோளுக்கு ஏற்றதாக இருக்கும்' என்றுதான் தெரிவித்துள்ளார். இந்த பதிலில் பிரதமர் மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து எதையுமே குறிப்பிடவில்லை. மனித உரிமைகள் மீறலுக்காக இலங்கை அரசு கண்டிக்கப்படும் என்றும் கூறவில்லை. இது மழுப்பான, பயனில்லாத பதில்.

இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றி எதையுமே குறிப்பிடாமல் தெளிவற்ற ஒரு பதிலை கூறியிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது என்று கண்டித்துள்ளார் ஜெயலலிதா

(நன்றி தட்ஸ்தமிழ்)

டிஸ்கி- பிரதமரின் அறிக்கையைப் பார்த்தால் நமக்கும் அது ஒரு விளக்கெண்ணெய் அறிக்கையாகவே தோன்றுகிறது.


Sunday, March 18, 2012

தினமணி தலையங்கம்...கண்டிப்பாக படிக்கவும்



இந்தியாவில் ஏறக்குறைய பாதி வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. ஆனால், பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் தொலைபேசி (பெரும்பாலும் செல்போன்) உள்ளது என்பது 2011   மக்கள்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள புள்ளிவிவரம்.
 இந்தியாவில் உள்ள வீடுகளின் வகைப்பாடு, வசிப்போரின் வாழ்க்கைத்தரம் ஆகியவைபற்றி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள புள்ளிவிவரம்: இந்தியாவில் உள்ள மொத்த வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாமல் திறந்தவெளியைப் பயன்படுத்துவோர் 49.8% பேர். ஆனால், செல்போன் வசதி பெற்ற வீடுகள் 63.2%. என்ன முரண்!
 கழிப்பறை வசதிகள் இல்லாத வீட்டில் வசிப்போர் திறந்தவெளிகளைத் தங்கள் இயற்கையின்அழைப்புக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கழிப்பறை வசதி இல்லாத வீடுகளைச் சேர்ந்த 3.2% பேர் மட்டுமே பொது கட்டணக் கழிப்பறைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
 தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டாலும், கழிப்பறையைப் பொருத்தவரை ஏறக்குறைய இதே நிலைமைதான். தேசிய அளவில் 49.8% பேர் திறந்தவெளியைப் பயன்படுத்தினால் தமிழ்நாட்டைப் பொருத்தவரை 45.7% பேரின் நிலைமை அதுதான்.
 தகவல் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு மக்களைச் சென்றடைந்துள்ளது என்பதற்காக மகிழ்ச்சிகொள்ளும் அதே நேரத்தில், சுகாதாரம் குறித்த அடிப்படை விஷயத்தில் இன்னமும் நாம் பின்தங்கிக் கிடக்கிறோம் என்பது வேதனைதான்.
 இந்தியாவில் உள்ள 47.2% வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி போய்ச் சேர்ந்துள்ளது. 63% வீடுகளுக்கு செல்போன் சென்று சேர்ந்துள்ளது. ஆனால், கழிப்பறை மட்டும் திறந்தவெளியாகவே இருக்கிறது என்றால் இதற்குக் காரணம், அரசாங்கத்தைவிட மக்களின் அறியாமை, அலட்சியம் ஆகியவைதான்.
 பெருநகரங்களில் வசிக்கும் நடைபாதைவாசிகளில் பெரும்பாலோர் கட்டணக் கழிப்பறைகளையே பயன்படுத்துகின்றனர். அதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. ஆனால், கிராமப்புறங்களில் உள்ள மக்களிடம்தான் இன்னும் கழிப்பறை குறித்த விழிப்புணர்வு சென்று சேரவில்லை.
 இந்தியாவில் உள்ள 25 லட்சம் கிராமங்களில் வெறும் 25,000 கிராமங்கள் மட்டுமே கழிப்பறை வசதிகளைக் கொண்டவையாக, திறந்தவெளியைப் பயன்படுத்தாத கிராமங்களாக உள்ளன என்பது மூக்கை மூடிக்கொள்ள வேண்டிய அவமானம்தான்.
 ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை வசதி இருப்பதைக் கட்டாயமாக்கவும், கழிப்பறை வசதிகள் இல்லாத வீட்டை, ஒரு குடியிருப்புக்குத் தகுதி இல்லாத இடமாகக் கருதி, குடும்ப அட்டைகள் வழங்கப்படாது என்று அறிவிப்பு செய்வதாலும் இந்தக் குறையை ஒரு சில மாதங்களில் மாற்றிவிட முடியும். ஆனால், கழிப்பறை இல்லாமல் இருப்பது விழிப்புணர்வு இல்லாமையால் மட்டுமல்ல, வசதி இல்லாமையும்கூடத்தான் அதற்குக் காரணம்.
 கிராமங்களில் உள்ள வீடுகளில் கழிவறைகள் அமைக்கப்பட்டால் அந்தக் கழிவுகள் தானாகவே மக்கி உரமாகும் வகையில், இரண்டு சேமிப்புத் தொட்டிகள் - ஒரு தொட்டி நிரம்பியதும் மற்றொரு தொட்டிக்குக் கழிவுகளை மாற்றிவிட்டு, நிரம்பிய கழிவுகள் மக்கி உரமாகும் - வசதி கொண்ட கழிப்பறைகளை வெறும் ரூ.5,000-க்கு மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டம் புதைசாக்கடை இல்லாத பகுதிகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டவை. இதில் 50 விழுக்காடு மானியம் வேறு. மீதமுள்ள தொகையை தவணை முறையில் உள்ளாட்சியில் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் கட்டவும் வகை செய்யப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் சரியான முறையில் கொண்டுசெல்லப்படவில்லை. அதைத்தான் இப்போதைய மக்கள்தொகை கணக்கெடுப்பில் நாம் வெளிப்படையாகக் காண்கின்றோம்.
 ஒரு வீட்டுக்கு கழிப்பறை தேவை இல்லை என்ற எண்ணம் கிராம மக்களிடம் அதிகமாகவே இருக்கிறது. காலம்காலமாக இருந்து வரும் பழக்கமாக இருந்தாலும், நவீன உலகின் போக்குக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளத் தயக்கம் காட்டுகிறார்கள். இதற்காக அரசு ஒதுக்கிய நிதி, மானியம் அனைத்தையும் சரியான முறையில் உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்தவில்லை. கிராமப்புற மக்களுக்கு மானியம் தரப்படுவது பற்றியோ, கழிப்பறையின் இன்றியமையாமை பற்றியோ விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய உள்ளாட்சி அமைப்புகள் இதில் அக்கறை காட்டவே இல்லை. வாய்ப்புகளை இன்னமும்கூட நழுவவிடுகின்றனர்.
 பொதுக்கழிப்பிடம் அல்லது இலவச சிறுநீர் கழிப்பிடங்களை எடுத்துக்கொண்டால், இதை அடுத்தவரும் பயன்படுத்துவார் என்ற எண்ணமே இல்லாமல், அதை அடுத்தவர் நுழையவும் தகுதியற்றதாக மாற்றிவிடும் வல்லமை கொண்டவர்களாக நமது மக்கள் இருக்கிறார்கள். இதை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய உள்ளாட்சித் துறைகள் இந்த பொது சுகாதார நிலையங்களை உருவாக்கிய பிறகு, அதன் ஊழியர்களை எட்டிப்பார்க்கவும்கூட செய்வதில்லை.
 ஏலம் விட்டு வருமானம் பெறவும், ஆளும் கட்சிக்கு வேண்டிய ஒருவருக்குக் குத்தகைக்கு விடுவதன் மூலம் அவருக்கு வருமானம் கிடைக்கவும் மட்டுமே பொதுக் கழிப்பறைகள் என்கிற மனப்போக்குதான் காணப்படுகிறது.
 அதனால்தான் கட்டணக் கழிப்பறைகள் அருவருப்பான சூழலில் உள்ளன. இந்தியாவில் உள்ள எந்தக் கழிப்பறை வாசலிலும், உள்ளாட்சி அறிவிப்பு இருக்கும். அதில் கட்டணம் என்பது அழிக்கப்பட்டு இருக்கும். அல்லது அதில் ரூ.1 என்று இருந்தாலும், அங்கே கட்டணம் வசூலிப்பவர் ரூ.4 வசூலிப்பார். இவ்வளவு அதிகத் தொகை செலுத்த மனமில்லாதவர்களும் வழியில்லாதவர்களும் தெருக்களை, வழியோர மறைவிடங்களைப் பயன்படுத்துகிறார்கள். அல்லது அவர்கள் அவ்வாறு கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்.
 ஓர் ஆரோக்கியமான நகரத்தின் முதல் அடையாளம் தூய்மையான கழிவறை. அது வீடு என்றாலும் சரி, சாலை என்றாலும் சரி. தெருவுக்கு ஒரு கட்டணக் கழிப்பிடம் அமைத்து அதைத் தூய்மையாகவும் குறைந்த கட்டணத்திலும் நடத்தக்கூட சுதந்திர இந்தியாவால் முடியவில்லை என்றால் வெட்கக்கேடு.
 அதைக்கூட நம்மால் தரமுடியாவிட்டால், எதற்காக மாநகராட்சிகளும், உள்ளாட்சி அமைப்புகளும்?


டிஸ்கி - இன்றைய தினசரியில் ஒரு செய்தி..
கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால்...தாய் வீடு திரும்பிய இளம் பெண்ணுக்கு கிராம சுகாதார விழிப்புணர்வு விருது...மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் விருது வழங்குகிறார்.இது போபால் அருகே ஒரு கிராமத்தில் நடந்தது.

Friday, March 16, 2012

கலைஞருக்கு ஒரு கடிதம்...




தலைவர் கலைஞர் அவர்களுக்கு

வணக்கம்..

கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர், கலைஞர் என்ற பன்முகம் கொண்ட அஷ்டாவதானியான உங்கள் மீது தமிழ் மக்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பற்று உண்டு.இந்த பற்று கட்சிகளை மீறிய ஒன்று.

ஆனால்..சமீபத்தில் தாங்கள் பேசியுள்ள பேச்சு..என்னைப் போன்று உங்கள் மீது அபிமானம் உள்ளவர்களையும்..அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் ஆகட்டும்..இலங்கை பிரச்னை ஆகட்டும்...வாலிப உள்ளங்கள் தான் அளவிற்கு அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு தீக்குளித்துள்ளன..இள ரத்தம், உணர்ச்சி வேகம்,உயிர் தியாகம் செய்யும் நோக்கு ஆகியவை தோன்றும் போது தங்களுக்கு முன்னேயுள்ள தாய், தந்தையர், இளம் மனைவி, குழந்தைகள் ஆகியோர் பற்றி எண்ணம் அவர்களுக்கு தோன்றுவதில்லை.

அதனால்தான், இப்படி ஏதேனும் நேருகையில்...தலைவர்கள் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களை, 'உணர்ச்சிவசப்படாதீர்கள்..தீக்குளிப்பது போன்ற செயல்கள் பிரச்னையை தீர்த்து வைக்காது..' என்றெல்லாம் கூறி இளைகர்கள் உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டுவருவது வழக்கம்.

இதெல்லாம் தெரிந்த நீங்களே..'அண்ணா நூற்றாண்டு நூலகம் , இடிக்கப்படுமேயாயின்...நான் தீக்குளித்தாவது அதை காப்பேன்' என்றுள்ளீர்கள்.பழுத்த அரசியல்வாதியான நீங்கள் உணர்ச்சி வேகத்தில் இதைக் கூறியிருக்க மாட்டீர்கள்..பின்..இதைக் கூற வேண்டிய அவசியம் என்ன...'மக்களின் உணர்ச்சியைத் தூண்டவா?..நீங்கள் இப்படிச் சொன்னதால் சங்கரன் கோவிலில் வாக்குகள் திமுகவிற்கு மக்கள் போடுவார்கள் என்றா? அதற்காக என்றால்...உங்களையே நம்பி..உங்கள் சொற்களையே வேதவாக்காக எண்ணும் லட்சக்கணக்கான தொண்டர்களில்..யாரேனும் ஒருவர்..தலைவரே சொல்லிவிட்டார்..அவர் உயிரே போகையில்..என் உயிரும் முதலில் போகட்டும் என தீக்குளித்தால்..அந்த உயிரை மீண்டும் நீங்கள் தரமுடியுமா?

இப்படி இளைஞர்கள் உணர்ச்சியைத் தூண்டும் வகையில்..மூத்த தமிழகத் தலைவர் நீங்கள் பேசியுள்ளது அழகல்ல...குழந்தைகள் பேசுவது போல பேசியுள்ளீர்கள்..

இதனால் தான் வயதானவர்களும் குழந்தைகளுக்கு சமமாய் நினைக்க வேண்டும் என நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனரோ?

மொத்தத்தில்...உங்களின் இப்பேச்சு கண்டிக்கத் தக்கதே..

அன்புடன்
ஒரு தமிழக குடிமகன்

வைரமுத்துவும்...மூன்றாம் உலகப்போரும்...(தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் 16-3-12)







1) உலகின் நாலாவது பொருளாதார வல்லரசான இந்தியாவின் தனிநபர் வருமானம் ஆண்டொன்றிற்கு 76933 மட்டுமே (1527 டாலர்), அதே நேரம் மொத்த உற்பத்தியில் மற்ற நாடுகளை விட நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது இந்தியா..(ஏட்டுச் சுரைக்காய்...???!!!)

2) வடிவேலு, சிங்கமுத்து..இவர்களிடையே நிலத்தகராறு வழக்குகள் இருப்பது நாம் அறிவோம்.இந்த சீரியஸ் ஆன விவகாரத்தை காமெடி ஆக்கியிருக்கிறார் நடிகர் விவேக்..கந்தா என்ற படத்தில் படம் அடுத்த வாரம் வெளிவரிகிறதாம்.கேட்டால்..இந்த வழக்குகளுக்கு முன்னதாகவே..இப்படம் எடுக்கப்பட்டு விட்டது என்கிறாராம்  விவேக்..(நம்புவோம்)

3)இந்திய மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருகிறதாம்.அமெரிக்கா, பிரிட்டன்,கனடா, கொரியா, சீனா, தென் ஆஃப்ரிக்கா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கல்வித்தரத்தில் இந்தியா 73ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாம்.  (ம்ம்ம்.....பெருமூச்சுதான் விட முடிகிறது)

4)ஐந்து கோடி மக்களுக்கு மேல் பேசப்படும் பதின்மூன்று மொழிகளில் தமிழும் ஒன்று.(இதில் பெரும்பான்மையினர் தமிழகத்தில் உள்ளனர்.தமிழகம்..இந்தியாவில் ஒரு மாநிலம்)

5)சிங்கப்பூர் போலவே..சுவீடன் நாட்டில் குடிமக்கள் அனைவரும் கண்டிப்பாக சில காலம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமாம்...

6)மனித உடலில் வியர்க்காத பகுதி உதடுகள் தானாம்..  (இது கமலுக்கு தெரியும்)

7)ஒலிம்பிக் போட்டி நாங்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்.இந்த ஆண்டு ஜூலை மாதம் 27ல் தொடங்கி ஆகஸ்ட் 12 வரை லண்டனில் நடக்கிரது.இதில் இந்தியா உட்பட 148 நாடுகள் கலந்து கொள்கின்றன.10000 க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்

8) வைரமுத்து விகடனில் எழுதி வரும் மூன்றாம் உலகப் போர் எனக்கு பிடித்த தொடர்.வைரமுத்துவின் எழுத்திற்கு ரசிகன் நான்.அத் தொடரில் வருவதை அவ்வப்போது பதிவிட்டு..மற்றவர்களை படிக்க சிபாரிசு செய்வேன்.ஆனால் இந்த இதழில் அத்தொடரின் முடிவில், வைரமுத்து அவர்கள் 'மூன்றாம் உலகப் போர் ' படைப்பில் இருந்து எந்தக் காட்சியையோ, சம்பவத்தையோ உரிய அனுமதியின்றி எவரும் எந்த வடிவத்திலும் எடுத்தாளக்கூடாது.மீறுவோர் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்' என்றுள்ளார்.

ஆகவே..இந்த வாரத்திலிருந்து அது சம்பந்தமாய் பதிவிடுவதில்லை என தீர்மானித்துள்ளேன்..ஆனால் அனைவரும் தவறாது படிக்க வேண்டிய தொடர் அது..என மீண்டும் கூறுகிறேன்.


Wednesday, March 14, 2012

சங்கரன்கோவில் வாக்காளர்களே...நீங்கள் என்ன செய்ய வேண்டும்




இடைத்தேர்தல்கள் அவசியமா..இல்லையா என்ற கேள்விகள் அவ்வப்போது எழுந்தாலும்...இடைத்தேர்தல்கள் தான் ஆளும் கட்சியின் பால் மக்கள் கொண்டுள்ள கருத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி என்பாரும் உண்டு.

அதே நேரம்..இந்நாட்களில் இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிகள் தனது செல்வாக்கு,அரசு இயந்திரங்கள் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்வதுடன்...மக்களுக்கும்..அவர்கள் சார்ந்த தொகுதிகளுக்கும் மேம்பாடுகள் செய்யப்படுவதால்..ஆளும் கட்சிகளுக்கே இடைத்தேர்தல்களில் வெல்லும் வாய்ப்பு அதிகம் என்ற எண்ணத்தை அனைவரிடமும் ஏற்படுத்தி விட்டது.

இந்நிலையில்..இவை மாற வேண்டுமாயின் ..அதற்கு முன் மாதிரியாய் சங்கரன்கோவில் வாக்காளர்கள் இருக்கட்டும்..

தவிர்த்து..

அவர்கள் ஆளும் கட்சி வாக்காளருக்கு ஓட்டு போடுவதால்..ஆளும் கட்சிக்கு பயன் ஏதுமில்லை.ஏனெனில் ஏற்கனவே அது பெரும்பான்மை பலத்துடன் உள்ளது.

எதிர்கட்சியான தேமுதிக வாக்களித்தால் அதன் 29 எம் எல் ஏ க்கள் 30 ஆகலாம் ..அவ்வளவுதான்

திமுக விற்கு வாக்களித்தால்..இந்த ஒரு எம் எல் ஏ வினால்..திமுக அங்கீகரிக்கப் பட்ட எதிர்க் கட்சியாய் மாற வாய்ப்பில்லை.

மதிமுக விற்கு வாக்களித்தால்...அந்த கட்சியின் எம் எல் ஏ ஒருவர் சட்டசபைக்கு செல்ல வாய்ப்பு உண்டு. இதுவே பின்னாட்களில் அக்கட்சி ஒரு மாற்றாக உருவாகும் சந்தர்ப்பம் ஏற்படலாம்.மேலும் இவ் வெற்றி..அதன் தலைவருக்கு உற்சாகத்தை அளிக்கும்.

இவற்றை கருத்தில் கொண்டு வாக்காளர்கள் மதிமுக வை இத் தேர்தலில் ஆதரிக்கலாம் என்றே தோன்றுகிறது.


Tuesday, March 13, 2012

காங்கிரஸ் கட்சி ஏன் இப்படி ஆயிற்று...




காங்கிரஸ்..பாரம்பரியம் மிக்க கட்சி.  தன்னலமற்ற..நாட்டு நலன் ஒன்றே குறிக்கோளாக இருந்த கட்சி..காரணம்..அதன் தலைவர்கள்..

அந்த நாள் தலைவர்கள்...எண்ணமெல்லாம்..நாடு..நாடு..நாடு தான்..

ஆகவேதான் ஒரு நூற்றாண்டு கடந்தும் ..அக் கட்சி நாட்டில் நிலைத்து இருக்கிறது..

ஆனால் சமீப காலமாக...என்னவாயிற்று கட்சிக்கு...அதன் தலைவரே (!!) சமிபத்திய உத்தர பிரதேச தேர்தல் முடிவு குறித்து வெளியிட்ட செய்தியில்..'கட்சியில் பல தலைவர்கள் உண்டாகிவிட்டனர்' என்றுள்ளார்., அவர் சொல்லியுள்ளது உண்மை..

பல தலைவர்கள் உண்டாகிவிட்டனர்..இல்லை..இல்லை..பலர் தன்னை தலைவர்களாக எண்ணிவிட்டனர்..அவர்களிடம் தேசப்பற்று காணப்படவில்லை..சுயநலம்தான் காணப்படுகிறது.

ஒரு மத்திய அமைச்சர்...தன் மனைவி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே..மக்கள் ஆதரவு பெற..சிறுபான்மையினர் ஒதுக்கீடு குறித்து...தேர்தல் கூட்டத்தில்..விதிமுறைகளை மீறி பேசுகிறார்.இதை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டினால்..அவர்கள் அதிகாரம் பற்றியும்...அதனால் தனக்கு ஏற்படும் எந்த  இடரையும் எதிர் கொள்வதாகக் கூறிகிறார்..பின்...பின்வாங்குகிறார்.

அவர் விட்ட இடத்தை..அடுத்து மத்திய அமைச்சர் தொடர்கிறார்...

அக்கட்சியின் தலைவரோ...அவரது வருமான வரி கணக்கை கேட்டால்..அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்கிறார்.

இப்படி..பொய், பித்தலாட்டம், சுயநலம், மேலிடத்தின் ஆதரவை பெறலாம் என்ற எண்ணம் எல்லாம் சேர்ந்து..இவர்கள் பேசுவதை மக்கள் ஆதரிப்பார்கள் என எண்ணுகிறார்கள்.ஆனால் மக்கள் யாரையும் நம்பத் தயாராக இல்லை.

அடுத்து....

உலக மக்கள் தொகையில்..கிட்டத்தட்ட 1/6 பங்கு மக்கள் தொகையுள்ள நாட்டில்..பிரதம பதவி வகிப்பவர்...தன் நாட்டில் என்ன நடந்தாலும்...மௌனியாய் இருக்கிறார்.தன் நாட்டு மக்கள் நலனை விட..அடுத்த சிறு நாடுகள் பற்றி கவலைப் படுகிறார்..அவர்களுக்கு பயப்படுகிறார்.

1962 சீன யுத்தமும், 1965 பாகிஸ்தானுடன் யுத்தமும், பங்களாதேசை மீட்டு அந்த மக்களிடம் ஒப்படைத்த தீரமும் கொண்ட தலைவர்கள் இருந்த கட்சி..இன்று தன் நாட்டு வம்சாவளி மக்களுக்கு ஆதரவாக பேசக்கூட இன்று பயப்படுகிறது...

இதே போக்கு நீடிக்குமேயாயின்...நாட்டில் ஒருமைப்பாடும் சீர்குலையும்...நாட்டு எதிர்காலம் கேள்விக் குறியாகும்...

இழந்த வீரத்தையும்..தீரத்தையும் ..மக்கள் நலப் போக்கையும் காங்கிரஸ் மீண்டும் பெற வேண்டும்...அது நடக்குமா?

பொறுத்திருப்பது தான் இந்தியன் குணமாயிற்றே! பொறுத்திருந்து பார்ப்போம்.

பொறுமை கடலிலும் பெரிதுதான்...அந்த கடல் அதை விழுங்காத வரை...

இல‌ங்கை‌ அரசு‌க்கு எ‌திரான ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌தியா ஆத‌ரி‌க்காது ‌- பிரணா‌‌ப் முக‌ர்‌ஜி



''இல‌‌ங்கை அரசு‌க்கு எ‌திராக ஐ.நா.‌ ம‌னித உ‌ரிமை ஆணைய கூ‌ட்ட‌த்‌தி‌ல் அமெ‌ரி‌க்கா கொ‌ண்டு வரு‌ம் ‌தீ‌‌ர்மான‌த்தை இ‌ந்‌தியா ஆத‌ரி‌க்காது'' எ‌ன்று ம‌த்‌திய ‌நி‌தியம‌ை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி கூ‌றினா‌ர்.

‌ம‌க்களவை இ‌ன்று காலை கூடியது‌ம் இல‌‌ங்கை அரசு‌க்கு எ‌திராக ஐ.நா‌.‌வி‌ல் கொ‌ண்டு வர‌ப்பட‌ம் ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌தியா ஆத‌‌ரி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌‌தி.மு.க., அ.‌தி.மு.க. உ‌ள்‌ளி‌ட்ட த‌மிழக எ‌ம்.‌பி.‌க்க‌ள் வ‌லியுறு‌த்‌தின‌ர்.

இதையடு‌த்து இல‌ங்கை‌க்கு எ‌திரான ‌தீ‌ர்மான‌ம் கு‌றி‌த்து ம‌க்களவை‌யி‌ல் ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்த ‌‌நி‌தியமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌‌ஜி, இல‌‌ங்கை அரசு‌க்கு எ‌திரான ‌தீ‌ர்மான‌ம் கு‌றி‌த்து அரசு ‌வி‌ழி‌ப்பு‌ட‌ன் உ‌ள்ளது எ‌ன்றா‌ர்.

ஜெ‌னீவா‌‌வில் ஐ.நா. ம‌‌னித உ‌ரிமை ஆணைய கூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌‌தீ‌ர்மான‌ம் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌உ‌ள்ளது எ‌‌ன்று‌ம் இது ப‌ற்‌றி த‌மிழக முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா, ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி ஆ‌கியோரு‌க்கு அரசு ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளது எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அவ‌ர்க‌ள் இருவரு‌ம் அர‌சி‌ன் ‌நிலை‌ப்பா‌ட்டை தெ‌ரி‌வி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌‌த்‌தியு‌ள்ளதாகவு‌ம் ‌பிரணா‌‌ப் கூ‌றினா‌ர்.

இ‌‌ப்‌பிர‌ச்சன‌ை‌யி‌ல் இ‌ன்னு‌ம் முடிவெடு‌க்க கால அவகாச‌ம் உ‌ள்ளது எ‌ன்று கூ‌றிய ‌பிரணா‌ப், சாதாரணமாக எ‌ந்த நா‌ட்டு ‌‌தீ‌ர்மான‌த்‌தி‌ற்கு‌ம் ஆதரவு அ‌ளி‌க்க‌ப்படுவ‌தி‌ல்லை எ‌ன்றா‌ர்.

ஆனா‌ல் இ‌ப்‌பிர‌ச்சனையை அரசு கவன‌த்‌தி‌ல் கொ‌ள்ளு‌ம் எ‌‌ன்று‌ம் இ‌ன்னு‌ம் கால அவகாச‌ம் உ‌ள்ளதா‌ல் ஆலோ‌சி‌த்து அரசு இறு‌தி முடிவு எடு‌க்கு‌ம் எ‌ன்று‌ம் ‌பிரணா‌‌ப் முக‌ர்‌ஜி கூ‌றினா‌ர்..

நன்றி வெப்துனியா


Monday, March 12, 2012

அழகாக மாற 200 முறை சர்ஜரி செய்து கொண்ட பெண்



 சீனாவைச் சேர்ந்த பணக்கார பெண் ஒருவர் அழகாக மாற 200 தடவை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். ஆனால் அத்தனை முறை அறுவை சிகிச்சை செய்ததால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது தான் மிச்சம்.

சீனாவின் நாங்ஜிங் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்  அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ந்துவிட்டனர். அவரது உடலில் ஏராளமான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருப்பது தான் அவர்கள் அதிர்ச்சிக்கு காரணம்.

அவரிடம் இது குறித்து மருத்துவர்கள் கேட்டபோது அவள் கூறியது...

நான் சில காலம் தென் கொரியாவில் இருந்தேன். அப்போது அழகாக ஆக 200 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேன். இதில் கண் இமையில் மட்டுமே 16 முறை அறுவை சிகிச்சை செய்தேன் என்று கூறினார்.

அவர் இதற்காக இதுவரை ரூ.3 கோடி செலவு செய்துள்ளார். இருப்பினும் அவர் அழகான பாடில்லை. இத்தனை முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அவரது உடல் பலவீனமாக உள்ளது. மேலும் அவரது எலும்புகள் செல்லரித்தும், இடது மார்பில் 3 செ.மீ. நீளத்துக்கு புற்றுநோய் கட்டியும் உள்ளது.

செயற்கை முறையில் அழகாய் தோன்ற அறுவை சிகிச்சை செய்து , தற்போது நோயாளி ஆகியிருப்பது தான் மிச்சம்.
 

பிரபாகரனின் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட விடியோ:




விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாரகரன் சுட்டுக் கொல்லப்பட்ட விடியோவை சேனல் 4 தொலைக்காட்சி நாளை மறுநாள் வெளியிட உள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த, கைது செய்யப்பட்ட போராளிகளும், முன்னணித் தலைவர்களும், சிறுவர்களும் கூட- இலங்கை படையினரால் திட்டமிட்ட அடிப்படையில் நீதிக்குப்புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பிரிட்டனின்‘தி இன்டிபென்டென்ட்‘ ஏடு தகவல் வெளியிட்டுள்ளது.
‘தி இன்டிபென்டென்ட்‘ ஏட்டில் சேனல்- 4 ஆவணப் படத்தை தயாரிக்கும் கேல்லம் மெக்ரே  எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தரையில் கிடக்கும் ரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகளையும் சேனல்-4 வெளியிடவுள்ளதாக கேல்லம் மெக்ரே  கூறியுள்ளார்.
இதுபற்றி ‘தி இன்டிபென்டென்ட்‘ ஏட்டில் அவர் கூறியுள்ளதாவது:
“12 வயது சிறுவன் தரையில் கிடக்கிறான். இடுப்பில் சுடப்பட்டுள்ளது.அவரது மார்பில் 5 துப்பாக்கிச் சூட்டுத் துவாரங்கள் காணப்படுகின்றன. அவரது பெயர் பாலச்சந்திரன் பிரபாகரன்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனான இவர் நீதிக்குப்புறம்பான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு அருகே ஐந்து ஆண்களின் சடலங்கள் கிடக்கின்றன. அவர்கள் அவரது மெய்க்காவலர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அவர்களைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உடைகளும் தரையில் கிடக்கின்றன. அவர்கள் கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை அது சுட்டிக்காட்டுகிறது.
ரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட பல விடுதலைப் புலிப் போராளிகளும், முன்னணித் தலைவர்களும், சிறுவர்களும் கூட, சிறிலங்கா அரசபடைகளால் முறைப்படியான கொள்கையின் அடிப்படையில் நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கு இது ஒரு சாட்சியாகிறது.
இந்த ஒளிப்படத்தில் மே-18ம் நாள் என்று குறிக்கப்பட்டுள்ளது. 12 வயதான பாலச்சந்திரன் மரணம் தொடர்பான புதிய ஆதாரங்கள் அழுத்தங்களை அதிகரிக்கும்.
பாலச்சந்திரன் அவரது மெய்க்காவலர்களின் சடலங்கள் கிடக்கும் மிகத்தெளிவான – உயர் துல்லியம் கொண்ட ஒளிபடங்களை சேனல்-4 பெற்றுள்ளது.
இவை மதிப்புமிக்க தடயவியல் நிபுணரான பேராசிரியர் டெரிக் பௌண்டர் மூலம் ஆராயப்பட்டது.
கண்கள் கட்டப்பட்டிருந்த அவரது மெய்க்காவலர்கள் பார்க்கும் படியாக பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளதாக அவர் கருத்துக் கூறியுள்ளார்.
முதலாவது சூடு சிறுவனின் மீது சுடப்பட்டிருக்க வேண்டும் என்று பேராசிரியர் பௌண்டர் நம்புகிறார்.
பொட்டுப் போன்ற துவாரப் பகுதியில் பச்சை குத்தப்பட்டது போன்ற அடையாளம் உள்ளது.அதனால், சிறுவனின் நெஞ்சில் இருந்து இரண்டு அல்லது மூன்று அடி அல்லது அதற்குக் குறைவான தூரத்திலேயே சுடப்பட்ட துப்பாக்கியின் குழல்வாய் இருந்துள்ளது.சிறுவன் கையை நீட்டித் துப்பாக்கியை தொடும் நேரத்தில் சுடப்பட்டிருக்கக் கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்காப் படையினரால் எடுக்கப்பட்ட இந்தக் காட்சிகள் முதல்முறையாக வரும் புதன்கிழமை இரவு சேனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
‘இலங்கையின் கொலைக்களங்கள் – தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்‘ என்ற பெயரில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.
இது கடந்த ஆண்டு ஒளிப்பரப்பப்பட்ட இலங்கையின்போர்க்குற்றங்கள் ஆவணப்படத்தின் தொடர்ச்சியாகும் என்று கேல்லம் மெக்ரே தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்

நன்றி தினமணி



Saturday, March 10, 2012

சங்கரன்கோவிலில் அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்கள் ??!!!




 சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து நெல்லை மாவட்ட ரஜினி ரசிகர்கள் பிரச்சாரம் செய்யவிருக்கின்றனர்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக நெல்லை மாவட்ட தலைமை ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்றம் தெரிவித்துள்ளது. ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்ற நிர்வாகிகள் அதிமுக தேர்தல் பணிக்குழுவினரை சந்தித்து தங்கள் ஆதரவு கடிதத்தை கொடுத்துள்ளனர்.

அந்த கடிதத்தில் நெல்லை மாவட்ட ரஜினி மன்ற தலைவர் பானுசேகர், நிர்வாகிகள் குணசேகர பாண்டியன், சூர்யா கணேசன், சங்கரன்கோவில் குணா, வீரபுத்திரன், கண்ணதாசன், மேலநீலிதநல்லூர் ஆப்பிள் தங்கமணி, மாரிச்சாமி உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கையெழுத்திட்டுள்ளனர். அதிமுக வேட்பாளரான முத்துசெல்விக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாகவும் அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

ரஜினி ரசிகர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக சூறாவளிப் பிரச்சாரம் செய்யப்போவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முத்துசெல்விக்கு ஆதரவாக 32 அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் -தட்ஸ்தமிழ்


Friday, March 9, 2012

மன்மோகன் கவனிப்பாரா? பட்டினியால் கிட்னியை விற்றுப் பிழைக்கும் அவலம்



மேற்கு வங்காள மாநிலத்தில் பல கிராமங்களில் வறட்சியும், பஞ்சமும் தலை விரித்தாடுகிறது, பஞ்சம், வறட்சி குறித்து எவ்வளவோ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும் மத்திய அரசும், மேற்கு வங்க அரசும் வாய்மூடி மௌனிகளாக இருந்து வந்தன. அதன் பலன் இன்று இதோ: சோற்றுக்காக கிட்னியை விற்கும் அப்பாவி மக்கள்!

சில கிராமங்களை 'கிட்னி கிராமங்கள்' என்றே அழைக்கப்படும் அவலம் நடந்துள்ளது.

வடக்கு டியாஞ்ச்பூர் மாவட்டத்தில் உள்ள பிந்தால் கிராமத்தில் உள்ளவர்கள் ஒரு கிட்னியுடன் உயிர்வாழ்வதாக அங்கிருந்து வரும் சமூக நல ஆர்வலர்கள் செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இங்குள்ள மக்களிடம் இருந்து பெறப்படும் கிட்னி மாநில தலைநகர் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கிராமத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானோர், பழங்குடியினர்.

இவர்களின் பிழைப்புக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது விவசாயம்தான். சில வருடங்களாக போதிய மழை பெய்யாததால், பூமி வறண்டு விட்டது. நெல்லோ, கோதுமையோ சாகுபடி செய்ய முடியவில்லை. விவசாயம் கைவிட்டதால், வீட்டிலேயே சாராயம் தயாரித்து விற்று வருகின்றனர். இதிலும், அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டதால் வருமானம் குறைந்து, கிட்னியை விற்கும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதில் இடைத்தரகர்கள் கொள்ளை வேறு; கிட்னி ஒன்றுக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை விலை நிர்ணயிக்கின்றனர். ஆனால், கிட்னி கொடுக்கும் கிராம மக்களுக்கு சொற்ப தொகையே தருகின்றனர். அதிகபட்சமாக 80 ஆயிரம் ரூபாய் வரைதான் கொடுக்கின்றனர்.

கிட்னியை விற்கும் இளைஞர்கள் நாளடைவில் உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலை எதுவும் செய்ய முடியாமலும் போகிறது. அப்படிப்பட்டவர்கள் பெற்றோர் அல்லது மனைவியால் புறக்கணிக்கப்பட்டு, வீட்டை விட்டு வெளியேற்றப்படுகின்றனர்.

இன்னும் சில இடங்களில் பெண்களை கிட்னியை விற்குமாறு காணவன்மார்கள் வற்புறுத்தி வரும் அவலமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தொண்டு நிறுவனம் ஒன்று சமீபத்தில் இங்கு நடத்திய ஆய்வில், கிட்னியை விற்ற பலர் சில ஆண்டுகளிலேயே இறந்து போனது தெரியவந்தது.

அயல்நாட்டு, உள்நாட்டு முதலாளிகளின் மனம் கோணாமல், அவர்களது கஜானா காலியாகாமல் காலியாகாமல் 'எப்பாடுபட்டாவது' காத்துக் கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகள், காலியாக இருக்கும் வயிற்றை நிரப்ப என்றுதான் முடிவெடுக்கப்போகிறார்களோ?

முன்னேற்றவாத பொருளாதாரக் கொள்கைகளினால் ஏற்படும் ஒட்டுமொத்த பக்க விளைவுகளையும் சமாளிக்க இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு அறிவோ, அறமோ இல்லாத நிலையில் விவசாயமழிப்பு கொள்கைகளினால் யார் பயனடைந்தால் என்ன அடையாவிட்டால் என்ன?

நன்றி வெப்துனியா



Thursday, March 8, 2012

இந்திய அரசும்..இலங்கைக்கு எதிரான தீர்மானமும்..




//சிங்கப்பூர் செல்லும் வழியில் சென்னை வந்த எஸ்.எம்.கிருஷ்ணா, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 ஜ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாவின் கடிதம் பரிசீலனையில் உள்ளது. இதில்,ஆழமாகச் சிந்தித்து முடிவு எடுக்கப்பட வேண்டும்.
 இது இரு நாடுகள் உறவு தொடர்பான விஷயம். இலங்கை சகோதர நாடு என்ற நட்புணர்வுடன் கூடிய அண்டை நாடாகும். இதில் அவசரப்பட்டு எந்தவித முடிவும் எடுக்க முடியாது. எனவே இதுவரை மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. தமிழக மக்களின் உணர்வுகளும் இதில் கருத்தில் கொள்ளப்படும்.//

இது செய்தி...

நாளை என்ன நடக்கும் என ஒரு ஆருடம்..

"இந்தியா இலங்கையை ஒரு சகோதர நாடாகவே பார்க்கிறது..அதற்காக இலங்கை தமிழர்கள் விஷயத்தில் இந்தியா இலங்கையை ஆதரிக்கும் என்பதற்கில்லை.நடந்துள்ள எல்லா விஷயங்களையும் மனதில் கொண்டு..ஓட்டெப்பில் கலந்து கொள்ளாது இந்தியா நடுநிலை வகிக்கும்.....என்கிறார் ..இந்திய அரசியல் தெரிந்த அரசியல்வாதி ஒருவர்.

Wednesday, March 7, 2012

'போர்க் குற்றவாளி இலங்கை' - அமெரிக்கா





இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக ஐநா மனித உரிமைச் சபையில் தனது தீர்மானத்தை முன்வைத்தது அமெரிக்கா. இது இலங்கைக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்த தீர்மானம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.

2009-ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிப் போரில் லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் அழிக்கப்பட்டனர். சர்வதேச போர் விதிகளுக்குப் புறம்பாக படு பயங்கர ஆயுதங்களைப் பிரயோகித்த சிங்கள ராணுவம் தமிழர்களை அழித்தது. ஏராளமான விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர்.

இலங்கையின் இந்தப் போர்க்குற்றத்துக்கு உரிய விசாரணை நடத்தி தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நாடுகளின் கோரிக்கையாக இருந்து வந்தது. ஆனால் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவு காரணமா தப்பித்து வந்தது இலங்கை.

இந்த நிலையில், ஐநாவின் மனித உரிமை அமைப்பில், இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தைக் கொண்டுவர அமெரிக்கா அதிரடியாக முடிவெடுத்தது. இதனால் இலங்கை பெரும் பீதிக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க வழக்கம் போல இந்தியா உதவும் என்பது இலங்கையின் நம்பிக்கை.

இந்த மாத இறுதியில்தான் இந்த தீர்மானம் ஓட்டெடுப்புக்கு வரும் என்று சொல்லப்பட்ட நிலையில், அமெரிக்கா அதிரடியாக இன்றே தீர்மானத்தை முன்மொழிந்துவிட்டது. இந்த தீர்மானம் குறித்து துணை மாநாட்டினையும் இன்று ஜெனீவாவில் நடத்தவிருக்கிறது அமெரிக்கா.

அமெரிக்காவின் இந்தத் தீர்மான நகல் மனித உரிமை சபையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

விவாதத்துக்குப் பின்னர் இந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும்.

தீர்மான விவரம்:

இலங்கை போரின்போது சட்டத்திற்கு முரணாக குறிப்பிட்ட இனத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் படுகொலைகள் மற்றும் காணாமற் போதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடுநிலை நீதி விசாரணை மேற்கொள்ளுதல், வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்குதல், நிலப்பகுதி ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நடுநிலையான அமைப்பினை உருவாக்குதல், தடுத்து வைத்தல் தொடர்பான கொள்கைகளை மீளாய்வு செய்தல், சுதந்திரமான சிவில் சமூக கட்டமைப்புகளை பலப்படுத்துதல், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குதல் மூலம் இனப் பிரச்சனைக்கான தீர்வைக் காணுதல், அனைவரதும் கருத்து வெளிப்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், சட்ட ஆட்சி முறை தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றில், 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' முன்வைத்துள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வரவேற்கிறோம்.

சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டமை குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவற்றின் அடிப்படையில்...

1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதுடன் நீதி, பொறுப்புப் கூறுதல், சகல இலங்கையர்க்கும் இடையிலான நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்த, பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் சட்டரீதியான கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றவும் இலங்கை அரசைக் கோருதல்.

2. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து எடுக்கப்படவுள்ள விபரங்கள் உள்ளிட்ட, விரிவான செயற்திட்டத்தை விரைந்து முன்வைக்குமாறும், சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தைக் கோருதல்

3. மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ட உதவிகளையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 22 வது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல்.

அமெரிக்காவின் இந்த தீர்மானம் இலங்கைக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்தத் தீர்மானத்தை தோற்கடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

(நன்றி தட்ஸ்தமிழ்)



Tuesday, March 6, 2012

பரிசுச் சீட்டும்.. ஒரு கோடியும்..


.

அண்ணா அவர்கள் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்ததும்..லாட்டிரிச் சீட்டை தமிழக அரசு ஆரம்பித்தது.சீட்டின் விலை ஒரு ரூபாய்..முதல் பரிசாக ஒரு லட்சம்..ஒவ்வொரு பத்துலட்சம் சீட்டுகளில் ஒரு சீட்டுக்கு ஒரு லட்சம் ..தவிர்த்து..இரண்டாம், மூன்றாம்..பரிசுகள் எல்லாம் உண்டு.

இது பற்றி அண்ணாவிடம் கேட்ட போது..ஒரு ரூபாய்க்கு பரிசு விழுந்தால் லட்சாதிபதி..பரிசு விழாவிடின் அந்த ஒரு ரூபாய் நாட்டுக்கு..என்றார்.

அப்படி பரிசு சீட்டு உள்ளே நுழைந்தாலும்..பின் பல மாநில பரிசு சீட்டுகள் மக்களை அடிமையாக்கின.போதும் போதாதற்கு சுரண்டல் லாட்டிரி வேறு..

ஒரு கட்டத்தில்..மக்கள் இதற்கு அடைமையாகிவிட...பரிசுச் சீட்டிற்கு ..தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது..(இந்த நேரத்தில்..மக்கள், டாஸ்மாக், அடிமை..இது எல்லாம் நினைவிற்கு வரக்கூடாது)

ஆனால்..இப்போது மக்களிடம் எஸ் எம் எஸ் ஆர்வம் அதிகமாக்கிவிட்டது.இதற்கு டி.வி., தனியார் சேனல்கள் காரணம்..தூண்டிலில் புழுவைப் போட்டு மீனை பிடிப்பது போல ஏதேனும் பரிசை திரையில் காட்டி...தனியார் சேனல் களும்...ஏர்டெல் போன்ற நிறுவனங்களும் நோகாமல் கோடி கணக்கில் பணம் பண்ண ஆரம்பித்துள்ளன.

உதாரணமாக...கோடிஸ்வரன் நிகழ்ச்சியில். பங்கு பெற ஒரு வாரம் மக்களிடம் ஏழு கேள்விகள் கேட்கப்படும்..அதற்கான பதிலை எஸ் எம் எஸ் பண்ண வேண்டும்.குறைந்த பட்ச ரேட் இதற்கு ஐந்து ரூபாய் ஆகும் என வைத்துக் கொள்ளலாம்.எவ்வளவு லட்சம் மக்கள் அனுப்புகிறார்கள்.சென்ற வாரம் இந்நிகழ்ச்சி ஆரம்பித்த போது எஸ் எம் எஸ் மூலம் வந்த பணமே 30 கோடியைத் தாண்டியதாம்.அநியாயமாக மக்களின் பணம் 30 கோடி தனியார் நிறுவனங்களுக்கு வசூல்.(தவிர்த்து..நிகழ்ச்சிக்கு விளம்பரதாரர்கள் வேறு..நொடிக்கணக்கிற்கு லட்சக் கணக்கில்).லட்சக்கணக்கில் மக்கள் எஸ் எம் எஸ் அனுப்பியிருந்தாலும் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சில பத்துகளே!

இந்த நிகழ்ச்சி என்று இல்லை..இப்படி நிறைய நிகழ்ச்சிகளில் மக்களின் ஆசையைத் தூண்டி எஸ்.எம்.எஸ்., அனுப்பச்சொல்கிறது சேனல்கள்.(உம்- சூபர்சிங்கர்)

லாட்டிரிச் சீட்டால் மக்கள் ஏமாறக்கூடாது என்று எண்ணிய அரசு..இப்போது டிவி நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் தனியார் நிறுவனங்கள் கவர்ச்சிகரமாக கோடிக் கணக்கில் சுரண்டுகிறார்களே..அதை ஏன் கண்டு கொள்ளவில்லை.



பாக்கியராஜ் பதில்....




இந்த 'பாக்யா' இதழில் பாக்யாராஜின் இந்த பதில் எனக்கு பிடித்திருந்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

கேள்வி - துல்லியமாக எடைப் போடுவதில் கெட்டிக்காரர் ஆண்களா..பெண்களா

பாக்கியராஜ் பதில் - ஒரு பெரிய நிறுவனத்துல வேலைபார்த்துட்டிருந்த ஒரு இளைஞன், அடிக்கடி நோய் வாய்ப்பட்டிருந்தான்.பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப் பார்த்து, மருந்து-இஞ்செக்க்ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எந்தவித பலனும் கிடைக்கலை.

கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள் சொன்னா,' நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு, ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர் (மிருக டாக்டர்) கிட்ட போய் உடம்பைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்குச் சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்கமுடியும்' ன்னாள்.

'என்னது மிருக டாக்டர் கிட்டேயா? உனக்கென்ன மூளை கெட்டுப் போச்சா?'ன்னு சீறினான் கணவன்.

'எனக்கொண்ணும் மூளை கெட்டுப் போகலே! உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்கு! காலங்காத்தாலே கோழி மாதிரி விடியறதுக்கு முன்னால எழுந்துக்கிறீங்க! அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சுட்டு, குரங்கு மாதிரி 'லபக் லபக்' னு ரெண்டு வாய் தின்னுட்டு, பந்தயக்குதிரை மாதிரி வேகமா ஓடி ஆஃபீசுக்கு போறீங்க.! அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க! உங்களுக்குக் கீழே வேலை செய்யறவங்க மேல கரடியா கத்தறீங்க! அப்புறம் ஆஃபீஸ் விட்டவுடனே, ஆடுமாடுங்க மாதிரி பஸ்ல அடைஞ்சு வீட்டுக்கு வர்றீங்க! வந்ததும் வராததுமா, நாள் பூரா வேலை செஞ்ச களைப்பில, நாய் மாதிரி என் மேல சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை 'சரக் சரக்' ன்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி போய் படுத்து தூங்கறீங்க! மறுபடியும் விடிஞ்சா அதேமாதிரி கோழி கதைதான்! இப்படி இருக்கிறவ்ங்களை மனுஷ டாக்டர் எப்படீங்க குணப்படுத்த முடியும்? அதனால தான் சொல்றேன் நாளைக்கே ஒரு கால் நடை டாக்டரைப் போய்ப் பாருங்க" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் மனைவி.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கணவன் முழிக்க, - 'கோட்டான் மாதிரி முழிக்காதீங்க" ன்னு முத்தாய்ப்பு வச்சாளாம் மனைவி.


Sunday, March 4, 2012

வைரமுத்துவும்..மேற்குத் தொடர்ச்சி மலையும்..




வைரமுத்து விகடனில் எழுதும் மூன்றாம் உலகப் போர் பற்றி..அவ்வப்போது நான் பதிவிட்டு வருகிறேன்.ஏனெனில்..என்னைக் கவர்ந்த தொடர் அது.இந்த வாரம் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பற்றி வைரமுத்துவே கூறுவது போல வந்த செய்தியில் ஒரு பகுதி.(இந்நிலையில்..தமிழ்வாணன் ஒருவர்தான் தன் கதைகளில் தானே வருவது போல எழுதுவார்..மூன்றாம் உலகப் போரில் வைரமுத்துவும் அதைச் செய்துள்ளார்.வைரமுத்து வைரமுத்தாகவே வருகிறார்)

இனி மேற்குத் தொடர்ச்சி மலைப் பற்றி...வைரமுத்து...

"இது வெறும் மலையல்ல.இந்தியாவின் மேற்கு எல்லையில் அரபிக் கடலுக்கு இணையாக 1600 கிலோமீட்டர் நீண்டிருக்கும் ஒரு தேசம் இது. நர்மதா, தபதி மலைகளை குஜராத்தில் இறக்கிவிட்டது இந்த மலைதான்.கிருஷ்ணா, கோதாவரியை ஆந்திராவில் அனுப்புவதும் இந்த மலைதான்.தமிழ்நாட்டிற்குள் காவிரியாய் பெருக்கெடுக்கும் கபினியைக் கர்நாடகத்திற்கு ஈன்று புறம் தருவதும் இந்த மலைதான்.தமிழ் நாட்டிற்குள் அமராவதியாய் விழியும் நொய்யாற்றையும் கேரளத்தில் உற்பத்தி செய்வதும் இந்த மலைதான்.தமிழ்நாட்டிற்குள் பிறந்து, தமிழ்நாட்டிற்குள் மட்டுமே பரவிப் பாயும் தாமிரபரணியைத் தருவதும் இம்மலைத்தொடர்தான். ஆனால் கங்கா,யமுனா நதிகளைப்போல இவை கவனிக்கப்படவில்லை.அசோகச் சக்கரவர்த்திக்குள்ளும்,அக்பருக்குள்ளும்..எங்கள் சேர, சோழ, பாண்டியர் மறைக்கப்படுவது போல இமயமலையின் இடுக்குகளில் எங்கள் மேற்குத் தொடர்ச்சி மலை புதைக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடல் காற்றைத் தடுத்து, மேகத்தின் மடியில் செலுத்தி மழை கறப்பது இந்த மலைதான்.மரங்களின் உயரம் குறைந்தால்..மலையின் உயரம் குறையும்.மலையின் உயரம் குறைந்தால் மழையின் அளவும் குறையும்.இந்த மலை, நதிகளையே நம்பி இருக்கும் எங்கள் தாகப்பட்ட சமூகம்.அதனால் மேற்குத் தொடர்ச்சி மலை காக்கப்பட வேண்டும்.

இம்மலைத்தொடரில் 5000 வகைத் தாவரங்கள், 520 வகைப் பறவைகள், 130 வகைப் பாலூட்டிகள், 65 வகைப் பாம்புகள், 160வகை ஈருயிரிகள் உயிர் தொடர்ச்சியாய் வாழ்ந்து வருகின்றன..

மேற்குத் தொடர்ச்சி மலைக்கு புல் தான் ஆயுதம்.1200 புல் வகைகள் மண்டிக் கிடக்கின்றன.மலைத் தரையில் அவைதாம் மழை நீரை மடியில் வாங்கி வைக்கும் வங்கிகள்.விழுந்த மழையை ஆவியாக விடாத காப்புக் கவசங்கள்.அந்தப் புல்லின் அடி மண்ணில் சேமித்து வைக்கும் அமிர்த மழையத்தான், சுனையாய்,ஓடையாய்,அருவியாய்,நதியாய் வடிகட்டி வழிய விடுகிறாள் மலை மாதா..."

வைரமுத்து..மேற்கு மலைத் தொடரைப் பற்றி எழுதியுள்ளது..ஏராளம்...ஒரு சிறு குறிப்பையே நான் தந்துள்ளேன்.முழுதும் புத்தகம் வாங்கி படியுங்கள்..இது நாள் வரை படிக்கவில்லையெனில்.  

டிஸ்கி - கள்ளிக்காட்டு கருவாச்சி வரிசையில் மூன்றாம் உலகப் போரும் இடம் பெறும் என்பது உறுதி,


Friday, March 2, 2012

என் தரப்பு வாதங்களையும் கேளுங்கள்- ஆ.ராசா உச்சநீதிமன்றத்தில் மனு








2ஜி அலைக்கற்றை ஊழலில் தன் பக்க வாதங்களைக் கேட்காமலேயே உச்சநீதிமன்றம் தன்னை குற்றம்சாற்றியுள்ளது, தான் நிரபராதி என்பதை நிரூபிக்க முடிவதற்கு முன்பே தன் மீது பழி சுமத்தப்படுகிறது என்று முன்னாள் தொலைத் தொடர்பு மத்திய அமைச்சர் ஆ.ராசா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்துள்ளார்.


பிப்ரவரி 2அம் தேதி நியாயமான வாதங்களின் அடிப்படைக் கொள்கைகளைப் புறக்கணித்து தன்னை மட்டும் உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டுவது ஏன் என்று ஆ.ராசா. கேள்வி எழுப்பியுள்ளார்.


122 தொலைத் தொடர்பு உரிமங்களை ரத்து செய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தன் தீர்ப்பில் ஆ.ராசாதான் முறைகேட்டிற்கு முக்கியக் காரணம் என்றும், விதிமுறைகளை மீறியுள்ளார் என்றும் திட்டவட்டமாகக் குற்றம்சாற்றியது.


உச்சநீதிமன்ற நீதிபதி தன் மீது சுமத்திய குற்றச்சாற்று நிச்சயம் சி.பி.ஐ. நீதிபதி ஓ.சைனி மீது தாக்கம் செலுத்தும் என்று ஆ.ராசா தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


சி.பி.ஐ. விசாரணையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பாதகமான விஷயங்கள் வெளிவந்தால் அதுவும் பெரும் குழப்பத்தை விளைவிக்கும், மேலும் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தற்போது அரசு அதிகாரிகளும் பின்பற்றி தங்களைத் தற்காத்துக் கொள்ளும் சாட்சியமாகவும் பயன்படுத்த நேரிடும் என்று ஆ.ராசா தனது மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


ஆ.ராசாவின் அலுவலர்கள் எஃப்.சி.எஃப்.எஸ் பரிந்துரைகளை அனுமதிக்கவில்லையெனில் அந்த அதிகாரிகள் ஆ.ராசாவின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டிருக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அன்று கூறியிருந்தது.


ஆனால் உச்ச நீதிமன்றத்தின் ஒவ்வொரு குற்றச்சாற்றிற்கும் ராசாவிடம் விளக்கம் உள்ளது என்றும் அவரது செயல்பாடுகள் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கலில் முறையானது, சட்ட ரீதியானது, மேலும் அரசின் சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்த பிறகே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் ராசாவின் மனுவில் கூறப்பட்டுள்ளது. இருந்தும் மனுதாரரின் தரப்பை விவரிக்க வாய்ப்பே வழங்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராசா தரப்பு நியாயங்களைக் கேட்டிருந்தால் அவர் மீது குற்றம்சுமத்தியிருக்க முடியாது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தகவல் தட்ஸ்தமிழ்




Thursday, March 1, 2012

'கின்னெஸ்' ரிகார்டில் இடம் பெறுமா இந்த அரசு..??!!!




எந்த ஒரு அரசும்..பதவி ஏற்ற நாள் முதல்..இவ்வளவு வழக்குகளில் மாட்டித் தவிக்கவில்லை..

சமச்சீர் கல்வி வழக்கு..

தலைமைச் செயலகம் மாற்றல் வழக்கு

அண்ணா நூற்றாண்டு நூலக வழக்கு

பேருந்து கட்டண உயர்வு வழக்கு

ஆவின் பால் விலை உயர்வு வழக்கு

மின் கட்டண உயர்வு

மக்கள் பணியாளர் நீக்கம் வழக்கு

எதிர்க்கட்சி தலைவர் தற்காலிக நீக்க வழக்கு (இப்பதிவும் போது என் நினைவில் வந்துள்ள வழக்குகள் இவை)

தவிர்த்து காவல்துறையினரால் மாற்று கட்சியினர் மீது நில அபகரிப்பு வழக்குகள்

முல்லைபெரியாறு வழக்கு

கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டம்

தனிப்பட்ட முறையில்..முதல்வரின்..வருவாய்க்கு அதிகமாய் சொத்து சேர்த்த வழக்கில் ஆஜரானது..

மீண்டும் சிபிஐ யின்..பிறந்த நாள் பரிசுகள் பற்றி முதல்வர் மீது வழக்கு...

இப்படி..வழக்குகள் மேல் வழக்குகளை சந்தித்த/போடப்பட்ட ஆட்சிகள் வேறு ஏதேனும் இருக்குமா என்பது சந்தேகம் தான்.உயர்நீதி மன்றத்தில் இதற்கென தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்பட முடியாது.

இன்று அரசு ஏதேனும் முக்கிய முடிவு எடுத்தால் ..அடுத்த நாள் அதன் மீது வழக்கு போடப்படுகிறது.அரசு வழக்கறிஞர்கள் பாடுதான் திண்டாட்டம்.

இந்த சோதனைகள் போதாது என...ஆட்சி அமைத்தது முதல் இதுவரை பல மந்திரிகள் மாற்றம்..இரு அமைச்சர்கள் மரணம்..அதனால் வந்த இடைத்தேர்தல்...

என்னாவாயிற்று தமிழகத்திற்கு..? முதல்வர் தன் போக்கை சற்று மாற்றிக் கொண்டால்..பெருபாலானவை தவிர்க்கப்பட்டிருக்கும்.

கின்னஸ் உலக ரிகார்ட் பற்றி அறிந்தவர்கள் ...இன்றுள்ள தமிழக அரசு கின்னஸ்ஸில் இடம் பெற வாய்ப்புள்ளதா என தெரிவிக்கவும்...


தோனி என்ன சொல்கிறது...




சாதாரணமாக நான் படங்களை விமரிசிப்பதில்லை.ஆனால்..நல்ல்படங்கள் என நினைத்து நான் பார்க்கும் படங்கள் குறித்து என் எண்ணங்களை பதிவிடுவேன்.ஆனால் அவற்றிற்கு வரும் சில அநாகரிக பின்னூட்டங்களால்..இப்பேற்பட்ட என் பதிவுகளுக்கு கமெண்ட் மாடெரேஷன் செய்வதுண்டு. இப்படமும் அந்த வரிசையில்தான் உள்ளது.

என்னால் ஒன்றை புரிந்துக் கொள்ள இயலவில்லை..

நமது நாட்டின் கல்வி கற்பிக்கும் முறையில் மாறுதல் தேவை என்பதை ஒப்புக் கொள்ளதான் வேண்டும்..ஆனால் அதே நேரத்தில் ஒரு மாணவன் , தான் இப்படித்தான் வரவேண்டும் என்று எண்ணுவதும்..அவனுக்கு படிப்பு வரவில்லை என்பதால் அவன் விரும்பும் துறைக்கு அவன் செல்ல வேண்டும் என்பதும் என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை/முதல் காரணம்..தன் எதிர்காலம் பற்றி பள்ளியில் படிக்கும் மாணவன் முடிவெடுக்கும் அனுபவத்தையும், அறிவையும் பெற்றிருக்க முடியாது.இரண்டாம் காரணம் அவன் எடுக்கும் முடிவில் அவனை விட்டு விட்டால்..அதில் அவனால் பிரகாசிக்க முடியாவிடின்..அம்மாணவனும்..சமூகமும் பின்னாளில் பெற்றோரையே குறை சொல்லும்.

தோனி படத்திலும், தந்தை பிரகாஷ்ராஜ்..மகனுக்கு விருப்பமான கிரிக்கெட் கோச்சிங்கில் சேர்க்கிறார்.மாட்டேன் என்று சொல்வதில்லை..ஆனால் பள்ளி படிப்பில் 90 மதிப்பெண் பெறச் சொல்லவில்லை..35 மதிப்பெண்ணாவது பெற்று தேற சொல்கிறார்..இதை தவறு என்று என்னால் சொல்லமுடியவில்லை.

எனது 'பாரத ரத்னா' என்ற நாடகத்தில் வரும் ஒரு வசனத்தை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்..

ஒரு ஆசிரியர் மீது மாணவனை துன்புறுத்தும் பழி சுமத்தப்பட்டு..அவர் குற்றவாளிக் கூண்டில் நிற்கும்போது கூறுவது போல அமைந்த காட்சி இது..அவர் சொல்வார்..

"நான் பெற்றோரைக் கேட்டுக் கொள்வதெல்லாம்..தவறு செய்யும் குழந்தைகளை மென்மையாகவாது தண்டியுங்கள் என்பதுதான்.

குழந்தைகள் தவறு செய்தால்..அதைத் திருத்த முயலும் ஆசிரியர்கள் மீது குற்றம் சுமத்தாதீர்கள்.நான் என் மகனை ரோஜாப்பூ போல வளர்க்கிறேன்னு சொல்லிட்டு..அவன் எதிர்காலத்தை அதிலுள்ள முள்ளைப்போல ஆக்காதீங்க..

யுவர் ஆனர்..நான் படித்த இன்னுமொரு சிறுகதையுடன் முடித்துக் கொள்கிறேன்..

தன் மகன் செய்யும் தவறுகளையெல்லாம் பெரிதாக்காமல்..அவனை செல்லம் கொடுத்து வளர்த்து வந்தனர் அவனது பெற்றோர்.அவனை ஆசிரியர் கண்டிக்கும் போதெல்லாம் தடுத்தனர்.அந்த மகன் சிறு சிறு குற்றங்களை செய்யத் தொடங்கினான்.ஒருநாள் ஒரு கொலையைச் செய்து விட்டான்.நீதிமன்றம் அவனுக்குத் தூக்குத்தண்டனையை விதித்தது.தூக்கிலிடுகையில் அவன் தன் கடைசி ஆசையாய் தன் பெற்றோர்களை பார்க்கணும்னான்.அதற்கு அனுமதி கிடைச்சது.தன் பெற்றோரைப் பார்த்ததும் அவன் "அப்பா/அம்மா..இருபது வருஷத்திற்கு முன்னால..வாத்தியார் என்னை கண்டிச்ச போதெல்லாம்..நீங்க தடுக்காம இருந்திருந்தா..இன்னிக்கு உங்க மகன் சாகறதைத் தடுத்திருக்கலாம் இல்லையா"ன்னான்"

இனி தோனி படம்..

தோனி படத்தில்..நமது கல்வி கற்கும் முறையில் மாற்றம் தேவை என்பதையும்..மாணவன் விரும்பும் செயலில் அவனை விட வேண்டும் என்பதிலும் எனக்கு ஒப்புதலே..ஆனால் அதற்காக..குறைந்த பட்ச கல்வி அவனுக்கு தேவை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.இதை அடித்துச் சொல்லாததால்.. இப்படத்தின் கதையின் கருத்திலிருந்து மாறுபடுகிறேன்


.