சில முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் உணவு பொருட்கள் மற்றும் நொறுக்குத்தீனிகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கலப்படங்களின் அளவு அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுக்குறித்து, டெல்லியில் உள்ள அரசு சாரா அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஒன்று மிகவும் பிரபலமான சில நிறுவனங்களின் தயாரிப்புக்களை ஆய்வக சோதனைக்கு தேர்ந்தெடுத்து சோதனை செய்தது.
அந்த ஆய்வில், குறிப்பாக மேகி, டாப் ராமன் நூடுல்ஸ், மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கே.எப்.சி பிரைட் சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த உணவுப் பொருட்களை சோதனை செய்த போது, அதில் அளவுக்கு அதிகமாக ’டிரான்ஸ்’ என்ற கொழுப்பு வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாக தெரிந்திருக்கிறது.
ஆனால், விளம்பரத்திற்காக இந்த நிறுவனங்கள் கூறும் முதல் வார்த்தை கொழுப்பற்றது, எந்த வித கலப்படமும் இன்று இயற்கையான மற்றும் 100% இயற்கையானது என்று பல்வேறு தகவல்களை கூறி விற்பனை செய்கிறது.
மேலும், இந்த பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு என்பது இதயத்தில் உள்ள வால்வுகளின் பாதையை குறுகலாக்குகிறது. இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவற்கான வாய்ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது.
இளம் வயதிலேயே நிறைய பேர் எடை அதிகமாவது, நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு ஆளாவதில் இந்த கலப்படங்கள் பங்கு வகிப்பதால் இயன்ற வரை இது போன்ற உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று அந்த நிறுவனம் அறிவுரை கூறியிருக்கிறது.
தகவல் வெப்துனியா
செய்திகள்
 
 
2 comments:
"நொறுக்குத்தீனிகள் உடலுக்குக் கேடு... உஷார்"
பயனுள்ள பகிர்வுகள்..
உருளைக்கிழங்கு சிப்ஸ் ருசியோ ருசி.அவ்வளவும் உடலுக்குக் கேடு.இதுபோல அநேகமான எல்லா நொறுக்குத்தீனிகளுமே நஞ்சுக்கு ஒப்பாம் என்கிறார்கள் !
Post a Comment