Friday, March 2, 2012

என் தரப்பு வாதங்களையும் கேளுங்கள்- ஆ.ராசா உச்சநீதிமன்றத்தில் மனு








2ஜி அலைக்கற்றை ஊழலில் தன் பக்க வாதங்களைக் கேட்காமலேயே உச்சநீதிமன்றம் தன்னை குற்றம்சாற்றியுள்ளது, தான் நிரபராதி என்பதை நிரூபிக்க முடிவதற்கு முன்பே தன் மீது பழி சுமத்தப்படுகிறது என்று முன்னாள் தொலைத் தொடர்பு மத்திய அமைச்சர் ஆ.ராசா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்துள்ளார்.


பிப்ரவரி 2அம் தேதி நியாயமான வாதங்களின் அடிப்படைக் கொள்கைகளைப் புறக்கணித்து தன்னை மட்டும் உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டுவது ஏன் என்று ஆ.ராசா. கேள்வி எழுப்பியுள்ளார்.


122 தொலைத் தொடர்பு உரிமங்களை ரத்து செய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தன் தீர்ப்பில் ஆ.ராசாதான் முறைகேட்டிற்கு முக்கியக் காரணம் என்றும், விதிமுறைகளை மீறியுள்ளார் என்றும் திட்டவட்டமாகக் குற்றம்சாற்றியது.


உச்சநீதிமன்ற நீதிபதி தன் மீது சுமத்திய குற்றச்சாற்று நிச்சயம் சி.பி.ஐ. நீதிபதி ஓ.சைனி மீது தாக்கம் செலுத்தும் என்று ஆ.ராசா தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


சி.பி.ஐ. விசாரணையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பாதகமான விஷயங்கள் வெளிவந்தால் அதுவும் பெரும் குழப்பத்தை விளைவிக்கும், மேலும் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தற்போது அரசு அதிகாரிகளும் பின்பற்றி தங்களைத் தற்காத்துக் கொள்ளும் சாட்சியமாகவும் பயன்படுத்த நேரிடும் என்று ஆ.ராசா தனது மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


ஆ.ராசாவின் அலுவலர்கள் எஃப்.சி.எஃப்.எஸ் பரிந்துரைகளை அனுமதிக்கவில்லையெனில் அந்த அதிகாரிகள் ஆ.ராசாவின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டிருக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அன்று கூறியிருந்தது.


ஆனால் உச்ச நீதிமன்றத்தின் ஒவ்வொரு குற்றச்சாற்றிற்கும் ராசாவிடம் விளக்கம் உள்ளது என்றும் அவரது செயல்பாடுகள் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கலில் முறையானது, சட்ட ரீதியானது, மேலும் அரசின் சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்த பிறகே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் ராசாவின் மனுவில் கூறப்பட்டுள்ளது. இருந்தும் மனுதாரரின் தரப்பை விவரிக்க வாய்ப்பே வழங்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராசா தரப்பு நியாயங்களைக் கேட்டிருந்தால் அவர் மீது குற்றம்சுமத்தியிருக்க முடியாது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தகவல் தட்ஸ்தமிழ்




No comments: