.
அண்ணா அவர்கள் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்ததும்..லாட்டிரிச் சீட்டை தமிழக அரசு ஆரம்பித்தது.சீட்டின் விலை ஒரு ரூபாய்..முதல் பரிசாக ஒரு லட்சம்..ஒவ்வொரு பத்துலட்சம் சீட்டுகளில் ஒரு சீட்டுக்கு ஒரு லட்சம் ..தவிர்த்து..இரண்டாம், மூன்றாம்..பரிசுகள் எல்லாம் உண்டு.
இது பற்றி அண்ணாவிடம் கேட்ட போது..ஒரு ரூபாய்க்கு பரிசு விழுந்தால் லட்சாதிபதி..பரிசு விழாவிடின் அந்த ஒரு ரூபாய் நாட்டுக்கு..என்றார்.
அப்படி பரிசு சீட்டு உள்ளே நுழைந்தாலும்..பின் பல மாநில பரிசு சீட்டுகள் மக்களை அடிமையாக்கின.போதும் போதாதற்கு சுரண்டல் லாட்டிரி வேறு..
ஒரு கட்டத்தில்..மக்கள் இதற்கு அடைமையாகிவிட...பரிசுச் சீட்டிற்கு ..தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது..(இந்த நேரத்தில்..மக்கள், டாஸ்மாக், அடிமை..இது எல்லாம் நினைவிற்கு வரக்கூடாது)
ஆனால்..இப்போது மக்களிடம் எஸ் எம் எஸ் ஆர்வம் அதிகமாக்கிவிட்டது.இதற்கு டி.வி., தனியார் சேனல்கள் காரணம்..தூண்டிலில் புழுவைப் போட்டு மீனை பிடிப்பது போல ஏதேனும் பரிசை திரையில் காட்டி...தனியார் சேனல் களும்...ஏர்டெல் போன்ற நிறுவனங்களும் நோகாமல் கோடி கணக்கில் பணம் பண்ண ஆரம்பித்துள்ளன.
உதாரணமாக...கோடிஸ்வரன் நிகழ்ச்சியில். பங்கு பெற ஒரு வாரம் மக்களிடம் ஏழு கேள்விகள் கேட்கப்படும்..அதற்கான பதிலை எஸ் எம் எஸ் பண்ண வேண்டும்.குறைந்த பட்ச ரேட் இதற்கு ஐந்து ரூபாய் ஆகும் என வைத்துக் கொள்ளலாம்.எவ்வளவு லட்சம் மக்கள் அனுப்புகிறார்கள்.சென்ற வாரம் இந்நிகழ்ச்சி ஆரம்பித்த போது எஸ் எம் எஸ் மூலம் வந்த பணமே 30 கோடியைத் தாண்டியதாம்.அநியாயமாக மக்களின் பணம் 30 கோடி தனியார் நிறுவனங்களுக்கு வசூல்.(தவிர்த்து..நிகழ்ச்சிக்கு விளம்பரதாரர்கள் வேறு..நொடிக்கணக்கிற்கு லட்சக் கணக்கில்).லட்சக்கணக்கில் மக்கள் எஸ் எம் எஸ் அனுப்பியிருந்தாலும் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சில பத்துகளே!
இந்த நிகழ்ச்சி என்று இல்லை..இப்படி நிறைய நிகழ்ச்சிகளில் மக்களின் ஆசையைத் தூண்டி எஸ்.எம்.எஸ்., அனுப்பச்சொல்கிறது சேனல்கள்.(உம்- சூபர்சிங்கர்)
லாட்டிரிச் சீட்டால் மக்கள் ஏமாறக்கூடாது என்று எண்ணிய அரசு..இப்போது டிவி நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் தனியார் நிறுவனங்கள் கவர்ச்சிகரமாக கோடிக் கணக்கில் சுரண்டுகிறார்களே..அதை ஏன் கண்டு கொள்ளவில்லை.
No comments:
Post a Comment