சீனாவைச் சேர்ந்த பணக்கார பெண் ஒருவர் அழகாக மாற 200 தடவை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். ஆனால் அத்தனை முறை அறுவை சிகிச்சை செய்ததால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது தான் மிச்சம்.
சீனாவின் நாங்ஜிங் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ந்துவிட்டனர். அவரது உடலில் ஏராளமான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருப்பது தான் அவர்கள் அதிர்ச்சிக்கு காரணம்.
அவரிடம் இது குறித்து மருத்துவர்கள் கேட்டபோது அவள் கூறியது...
நான் சில காலம் தென் கொரியாவில் இருந்தேன். அப்போது அழகாக ஆக 200 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேன். இதில் கண் இமையில் மட்டுமே 16 முறை அறுவை சிகிச்சை செய்தேன் என்று கூறினார்.
அவர் இதற்காக இதுவரை ரூ.3 கோடி செலவு செய்துள்ளார். இருப்பினும் அவர் அழகான பாடில்லை. இத்தனை முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அவரது உடல் பலவீனமாக உள்ளது. மேலும் அவரது எலும்புகள் செல்லரித்தும், இடது மார்பில் 3 செ.மீ. நீளத்துக்கு புற்றுநோய் கட்டியும் உள்ளது.
செயற்கை முறையில் அழகாய் தோன்ற அறுவை சிகிச்சை செய்து , தற்போது நோயாளி ஆகியிருப்பது தான் மிச்சம்.
1 comment:
இயற்கைதான் எப்பொழுதும் அழகு
Post a Comment