இடைத்தேர்தல்கள் அவசியமா..இல்லையா என்ற கேள்விகள் அவ்வப்போது எழுந்தாலும்...இடைத்தேர்தல்கள் தான் ஆளும் கட்சியின் பால் மக்கள் கொண்டுள்ள கருத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி என்பாரும் உண்டு.
அதே நேரம்..இந்நாட்களில் இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிகள் தனது செல்வாக்கு,அரசு இயந்திரங்கள் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்வதுடன்...மக்களுக்கும்..அவர்கள் சார்ந்த தொகுதிகளுக்கும் மேம்பாடுகள் செய்யப்படுவதால்..ஆளும் கட்சிகளுக்கே இடைத்தேர்தல்களில் வெல்லும் வாய்ப்பு அதிகம் என்ற எண்ணத்தை அனைவரிடமும் ஏற்படுத்தி விட்டது.
இந்நிலையில்..இவை மாற வேண்டுமாயின் ..அதற்கு முன் மாதிரியாய் சங்கரன்கோவில் வாக்காளர்கள் இருக்கட்டும்..
தவிர்த்து..
அவர்கள் ஆளும் கட்சி வாக்காளருக்கு ஓட்டு போடுவதால்..ஆளும் கட்சிக்கு பயன் ஏதுமில்லை.ஏனெனில் ஏற்கனவே அது பெரும்பான்மை பலத்துடன் உள்ளது.
எதிர்கட்சியான தேமுதிக வாக்களித்தால் அதன் 29 எம் எல் ஏ க்கள் 30 ஆகலாம் ..அவ்வளவுதான்
திமுக விற்கு வாக்களித்தால்..இந்த ஒரு எம் எல் ஏ வினால்..திமுக அங்கீகரிக்கப் பட்ட எதிர்க் கட்சியாய் மாற வாய்ப்பில்லை.
மதிமுக விற்கு வாக்களித்தால்...அந்த கட்சியின் எம் எல் ஏ ஒருவர் சட்டசபைக்கு செல்ல வாய்ப்பு உண்டு. இதுவே பின்னாட்களில் அக்கட்சி ஒரு மாற்றாக உருவாகும் சந்தர்ப்பம் ஏற்படலாம்.மேலும் இவ் வெற்றி..அதன் தலைவருக்கு உற்சாகத்தை அளிக்கும்.
இவற்றை கருத்தில் கொண்டு வாக்காளர்கள் மதிமுக வை இத் தேர்தலில் ஆதரிக்கலாம் என்றே தோன்றுகிறது.
6 comments:
நினைத்ததைச் சொல்லியிருக்கிறீர்!!!
வாழ்த்துக்கள்!!!
ஆணவத்தின் பிடியில் இருக்கும் அம்மையார் எப்பாடு பட்டாவது ஜெயித்து விடுவார் என்றே தோன்றுகிறது போதாக்குறைக்கு பல்முனை போட்டி வேறு...
நல்ல கனவு... பலிக்க வாழ்த்துக்கள்..
http://anubhudhi.blogspot.in/
VaIKo must win, he is a true Tamil leader
எனக்கும் அதான் சரினு படுது
எனக்கும் அதான் சரினு படுது
Post a Comment