Wednesday, March 28, 2012

இடிந்தகரை போராட்டத்தில் பங்கேற்க வரும் அச்சுதானந்தன்...




 இடிந்தகரையில் நடந்து வரும் அணு உலை எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மற்றும் சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே குழுவைச் சேர்ந்த பிரஷாந்த் பூஷன் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்று கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட எங்கள் குழுவைச் சேர்ந்த 200 பேர் கைது செய்யப்பட்டு சிறையி்ல் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வெளியே கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதுவரை இடிந்தகரையில் அமைதியான முறையில் போராடிக் கொண்டிருப்போம்.

அவர்கள் சிறையில் இருந்து வெளியே வரும் வரை கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள். குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மாட்டார்கள்.

மேலும் எங்கள் போராட்டத்தில் பங்கேற்க சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே குழுவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷனின் மகன் பிரசாந்த் பூஷன் வரும் 31ம் தேதி இடிந்தகரை வருகிறார். இதே போல் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் வரும் ஏப்ரல் மாதம் 11ம் தேதி எங்களை வந்து சந்திக்கவிருக்கிறார் என்றார்.

டிஸ்கி - அச்சுதானந்தன் முல்லை பெரியாறு அணை விஷயத்தில் தமிழகத்திற்கு எதிராக..அணை கட்டியே தீருவோம் என சொல்லி வருபவர். மேலும்..அணு உலைக்கு இங்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில்..அவர் எப்படி???? ஒன்னுமே புரியலே உலகத்திலே


No comments: