Thursday, March 1, 2012

தோனி என்ன சொல்கிறது...
சாதாரணமாக நான் படங்களை விமரிசிப்பதில்லை.ஆனால்..நல்ல்படங்கள் என நினைத்து நான் பார்க்கும் படங்கள் குறித்து என் எண்ணங்களை பதிவிடுவேன்.ஆனால் அவற்றிற்கு வரும் சில அநாகரிக பின்னூட்டங்களால்..இப்பேற்பட்ட என் பதிவுகளுக்கு கமெண்ட் மாடெரேஷன் செய்வதுண்டு. இப்படமும் அந்த வரிசையில்தான் உள்ளது.

என்னால் ஒன்றை புரிந்துக் கொள்ள இயலவில்லை..

நமது நாட்டின் கல்வி கற்பிக்கும் முறையில் மாறுதல் தேவை என்பதை ஒப்புக் கொள்ளதான் வேண்டும்..ஆனால் அதே நேரத்தில் ஒரு மாணவன் , தான் இப்படித்தான் வரவேண்டும் என்று எண்ணுவதும்..அவனுக்கு படிப்பு வரவில்லை என்பதால் அவன் விரும்பும் துறைக்கு அவன் செல்ல வேண்டும் என்பதும் என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை/முதல் காரணம்..தன் எதிர்காலம் பற்றி பள்ளியில் படிக்கும் மாணவன் முடிவெடுக்கும் அனுபவத்தையும், அறிவையும் பெற்றிருக்க முடியாது.இரண்டாம் காரணம் அவன் எடுக்கும் முடிவில் அவனை விட்டு விட்டால்..அதில் அவனால் பிரகாசிக்க முடியாவிடின்..அம்மாணவனும்..சமூகமும் பின்னாளில் பெற்றோரையே குறை சொல்லும்.

தோனி படத்திலும், தந்தை பிரகாஷ்ராஜ்..மகனுக்கு விருப்பமான கிரிக்கெட் கோச்சிங்கில் சேர்க்கிறார்.மாட்டேன் என்று சொல்வதில்லை..ஆனால் பள்ளி படிப்பில் 90 மதிப்பெண் பெறச் சொல்லவில்லை..35 மதிப்பெண்ணாவது பெற்று தேற சொல்கிறார்..இதை தவறு என்று என்னால் சொல்லமுடியவில்லை.

எனது 'பாரத ரத்னா' என்ற நாடகத்தில் வரும் ஒரு வசனத்தை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்..

ஒரு ஆசிரியர் மீது மாணவனை துன்புறுத்தும் பழி சுமத்தப்பட்டு..அவர் குற்றவாளிக் கூண்டில் நிற்கும்போது கூறுவது போல அமைந்த காட்சி இது..அவர் சொல்வார்..

"நான் பெற்றோரைக் கேட்டுக் கொள்வதெல்லாம்..தவறு செய்யும் குழந்தைகளை மென்மையாகவாது தண்டியுங்கள் என்பதுதான்.

குழந்தைகள் தவறு செய்தால்..அதைத் திருத்த முயலும் ஆசிரியர்கள் மீது குற்றம் சுமத்தாதீர்கள்.நான் என் மகனை ரோஜாப்பூ போல வளர்க்கிறேன்னு சொல்லிட்டு..அவன் எதிர்காலத்தை அதிலுள்ள முள்ளைப்போல ஆக்காதீங்க..

யுவர் ஆனர்..நான் படித்த இன்னுமொரு சிறுகதையுடன் முடித்துக் கொள்கிறேன்..

தன் மகன் செய்யும் தவறுகளையெல்லாம் பெரிதாக்காமல்..அவனை செல்லம் கொடுத்து வளர்த்து வந்தனர் அவனது பெற்றோர்.அவனை ஆசிரியர் கண்டிக்கும் போதெல்லாம் தடுத்தனர்.அந்த மகன் சிறு சிறு குற்றங்களை செய்யத் தொடங்கினான்.ஒருநாள் ஒரு கொலையைச் செய்து விட்டான்.நீதிமன்றம் அவனுக்குத் தூக்குத்தண்டனையை விதித்தது.தூக்கிலிடுகையில் அவன் தன் கடைசி ஆசையாய் தன் பெற்றோர்களை பார்க்கணும்னான்.அதற்கு அனுமதி கிடைச்சது.தன் பெற்றோரைப் பார்த்ததும் அவன் "அப்பா/அம்மா..இருபது வருஷத்திற்கு முன்னால..வாத்தியார் என்னை கண்டிச்ச போதெல்லாம்..நீங்க தடுக்காம இருந்திருந்தா..இன்னிக்கு உங்க மகன் சாகறதைத் தடுத்திருக்கலாம் இல்லையா"ன்னான்"

இனி தோனி படம்..

தோனி படத்தில்..நமது கல்வி கற்கும் முறையில் மாற்றம் தேவை என்பதையும்..மாணவன் விரும்பும் செயலில் அவனை விட வேண்டும் என்பதிலும் எனக்கு ஒப்புதலே..ஆனால் அதற்காக..குறைந்த பட்ச கல்வி அவனுக்கு தேவை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.இதை அடித்துச் சொல்லாததால்.. இப்படத்தின் கதையின் கருத்திலிருந்து மாறுபடுகிறேன்


.

4 comments:

aotspr said...

மிகவும் நன்று..


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

தமிழ் உதயம் said...

உங்கள் கருத்தை ஏற்கிறேன். மாணவர்களின் விருப்பப்படி விட்டால் "எல்லோரும் சச்சின் ஆகிறேன்" என்று பேட்டை எடுத்து கொண்டு போவார்கள். நம் இயலாமையை மறைக்க, நம் தோல்விக்கு சாக்கு போக்கு சொல்ல "என் விருப்பப்படி இருக்க விடமாட்டேங்கிறாங்க" என்பது.

Sankar Gurusamy said...

சரியான கருத்துக்கள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்பச் சரியான கருத்துக்கள், முழுதும் ஏற்றுக் கொள்கிறேன்!