Sunday, March 25, 2012

குடியரசுத் தலைவர் பயணச்செலவு ரூ.205 கோடி




வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் எண்ணிக்கையில் கோல்மால் தகவல்களை வெளியிடும் மத்திய அரசு ஒரு புறமிருக்க, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் அயல்நாட்டுப் பயணச் செலவு மட்டும் ரூ.205 கோடி என்று தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் திரட்டப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் இவர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்திற்காக இந்த செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாடு சென்ற ஜனாதிபதிகளில் இவர் தான் அதிக முறை நாடுகளுக்கு சென்று சாதனை (!) படைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீல் பதவியேற்றார்.இவரது பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இவர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் குறித்தும் அதற்காக அரசு செலவிட்ட தொகை குறித்தும் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்டது.

இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் ‌அளிக்கப்பட்டுள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 5 ஆண்டுகளில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் 79 நாட்கள் என இதுவரை 12 முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டு 22 நாடுகளுக்கு அரசு முறைப்பணயமாக சென்றுள்ளார்.

இதில் ஏர் இந்தியா வாயிலாக சென்ற வகையில் விமானச்செலவு ரூ. 169 கோடி ரூபாயும், மற்றும் ஜனாதிபதிக்கான இதர சலுகைகள் மற்றும் தங்கும் வசதி உணவு போன்ற செலவினங்களாக ரூ. 36 ‌கோடியும் என மொத்தம் ரூ.205 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ரூ.169 கோடி ரூபாயினை ராணுவ அமைச்சகம் ஏற்றுள்ளது . ரூ.153 ‌கோடி மட்டுமே ஏர்இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. பாக்கி தொக‌ை ரூ.16 கோடி நிலுவையில் உள்ளது. இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி வெப்துனியா


No comments: