1) உலகின் நாலாவது பொருளாதார வல்லரசான இந்தியாவின் தனிநபர் வருமானம் ஆண்டொன்றிற்கு 76933 மட்டுமே (1527 டாலர்), அதே நேரம் மொத்த உற்பத்தியில் மற்ற நாடுகளை விட நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது இந்தியா..(ஏட்டுச் சுரைக்காய்...???!!!)
2) வடிவேலு, சிங்கமுத்து..இவர்களிடையே நிலத்தகராறு வழக்குகள் இருப்பது நாம் அறிவோம்.இந்த சீரியஸ் ஆன விவகாரத்தை காமெடி ஆக்கியிருக்கிறார் நடிகர் விவேக்..கந்தா என்ற படத்தில் படம் அடுத்த வாரம் வெளிவரிகிறதாம்.கேட்டால்..இந்த வழக்குகளுக்கு முன்னதாகவே..இப்படம் எடுக்கப்பட்டு விட்டது என்கிறாராம் விவேக்..(நம்புவோம்)
3)இந்திய மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருகிறதாம்.அமெரிக்கா, பிரிட்டன்,கனடா, கொரியா, சீனா, தென் ஆஃப்ரிக்கா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கல்வித்தரத்தில் இந்தியா 73ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாம். (ம்ம்ம்.....பெருமூச்சுதான் விட முடிகிறது)
4)ஐந்து கோடி மக்களுக்கு மேல் பேசப்படும் பதின்மூன்று மொழிகளில் தமிழும் ஒன்று.(இதில் பெரும்பான்மையினர் தமிழகத்தில் உள்ளனர்.தமிழகம்..இந்தியாவில் ஒரு மாநிலம்)
5)சிங்கப்பூர் போலவே..சுவீடன் நாட்டில் குடிமக்கள் அனைவரும் கண்டிப்பாக சில காலம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமாம்...
6)மனித உடலில் வியர்க்காத பகுதி உதடுகள் தானாம்.. (இது கமலுக்கு தெரியும்)
7)ஒலிம்பிக் போட்டி நாங்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்.இந்த ஆண்டு ஜூலை மாதம் 27ல் தொடங்கி ஆகஸ்ட் 12 வரை லண்டனில் நடக்கிரது.இதில் இந்தியா உட்பட 148 நாடுகள் கலந்து கொள்கின்றன.10000 க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்
8) வைரமுத்து விகடனில் எழுதி வரும் மூன்றாம் உலகப் போர் எனக்கு பிடித்த தொடர்.வைரமுத்துவின் எழுத்திற்கு ரசிகன் நான்.அத் தொடரில் வருவதை அவ்வப்போது பதிவிட்டு..மற்றவர்களை படிக்க சிபாரிசு செய்வேன்.ஆனால் இந்த இதழில் அத்தொடரின் முடிவில், வைரமுத்து அவர்கள் 'மூன்றாம் உலகப் போர் ' படைப்பில் இருந்து எந்தக் காட்சியையோ, சம்பவத்தையோ உரிய அனுமதியின்றி எவரும் எந்த வடிவத்திலும் எடுத்தாளக்கூடாது.மீறுவோர் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்' என்றுள்ளார்.
ஆகவே..இந்த வாரத்திலிருந்து அது சம்பந்தமாய் பதிவிடுவதில்லை என தீர்மானித்துள்ளேன்..ஆனால் அனைவரும் தவறாது படிக்க வேண்டிய தொடர் அது..என மீண்டும் கூறுகிறேன்.
1 comment:
அநேகமாக எல்லா ஐரோப்பிய நாடுகள் எங்குமே கட்டாய இராணுவப்பயிற்சி இருக்கிறது.வேலை இடங்களில் இந்தப் பயிற்சிக்காலத்திற்காக விடுமுறையும்,ஊதியமும் உண்டு !
உதட்டில் மட்டும்தான் வேர்க்காதென்று ஒரு பாடலில்கூட இணைத்திருக்கிறார்களே !
Post a Comment