Wednesday, May 30, 2012

நான் வண்ணதாசன் அல்ல...




அழகிய கற்பனை ஒன்று

மனதில் தோன்ற

தாளை எடுத்து..வடித்தால்..

நினைத்ததில் பாதியைக் கூட

எழுத்தில் கொணர இயலவில்லை

ஆமாம்! நினைத்ததை

நினைத்தபடி எழுத

நான் வண்ணதாசனா..!!!

Monday, May 28, 2012

பாக்கியராஜின் பதில்..




இந்த வார பாக்யா (ஜூன் 1-7) இதழில் பாக்யாராஜின் கேள்வி பதில் பகுதியில் என்னைக் கவர்ந்த அவரது பதில்..

கேள்வி - தங்களைக் கவர்ந்த ஒரு தத்துவம்..?

பதில் - ஒரு நல்ல மனுஷன் எப்பவும் எல்லார்க்கும் இல்லேன்னு சொல்லாம எல்லா உதவியும் செய்வாரு.அவர் திடீர்னு ஒருநாள் நோய்வாய்ப் பட்டு இறந்து போனாரு.அப்ப அந்த ஊர்ல இருந்த ஒரு குருகிட்ட ஊரே போய் 'அவருக்கு எப்படி இப்படி நடக்கலாம்னு காரணம் கேட்டாங்க. அதுக்கு குரு சிரிச்சுகிட்டே ஒரு பூத்தொட்டியக் காட்டினாரு.அது விரிசல் விட்டு உடைஞ்சிருந்தது.தான் வளரக் காரணமாயிருந்த தொட்டியவே அந்த பூஞ்செடி உடைச்சிருச்சு.

அதாவது அது வளர போதுமானதா தொட்டி இல்லை.இப்ப செடியை எடுத்து வேற இடத்துல நடணும்.அதாவது இறந்தவர் உடல் பூந்தொட்டி மாதிரி.இறந்தவர் சேவை செடி மாதிரி.அதனால அந்த உடலிலிருந்து கடவுள் அவரை அப்புறப்படுத்தி வேறு விதமாக பிறக்க வைக்கப் போகிறார்னு அர்த்தம்.கூடிய சீக்கிரம் இது நடக்கும்' னாரு.ஜனங்களுக்கு இந்த விளக்கம் நியாயமாப்பட்டது.



முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது- நாராயணசா‌‌‌மி





''முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது'' என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

மாநில விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதாக ஏற்கனவே பல மாநிலங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே, முல்லைப் பெரியாறு தொடர்பாக தமிழக அரசும், கேரள அரசும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தால் மட்டுமே மத்திய அரசு தலையிடுவது குறித்து பரிசீலிக்கும் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.


டிஸ்கி- நல்லா சொன்னீங்க..இதைக் கேட்டும்.. தமிழக அரசை மைய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையில்தான் நடத்துகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரியவில்லையா..? மக்களே..

Friday, May 25, 2012

ஜனாதிபதிக்கான சிறந்த நபர் யார்..




ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல் பதவிக் காலம் முடிகிறது.

அடுத்த ஜனாதிபதிக்கான வேட்பாளர் யார்? என முடிவெடுக்க முடியாத நிலையில் இன்னமும் காங்கிரஸ் உள்ளது.

அனைத்து கட்சிகளும் ஏற் று கொள்ளும் வகையில் வேட்பாளர் இருக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர்.

ஜனாதிபதியாக வி.வி.கிரி இருந்த சமயம்..அந்த பதவி ரப்பர் ஸ்டேம்ப் என்ற பெயர் பெற்றது.

இன்றுள்ள நிலையில் அந்த பதவிக்கு ஏற்ற நபராக மன் மோஹன் சிங் மட்டுமே தெரிகிறார்.மைய அரசுடன் ஒத்து போவார்..அதே சமயம் வெளிநாடுகளுக்கு அடிக்கடி போய் வரவும் தயங்க மாட்டார்.

பேசாமல் காங்கிரஸ் பிரணாப் முகர்ஜியை (எனக்கு ஹிந்தி தெரியாததால் பிரதமர் ஆக முடியாது என ஒரு சமயம் புலம்பியவர் இவர்) பிரதமர் ஆக்கி விட்டு..மன் மோகனை ஜனாதிபதி ஆக்கிவிடலாம்.


Thursday, May 24, 2012

'ஏ' ற்றம் தரும் 'ஏ' காரம்..






உயிர் நீ என்றான்

உயிரே நீ என்றாள்

கற்கண்டு நீ

கற்கண்டே நீ

வாழ்வு நீ

வாழ்வே நீ

'ஏ' காரங்கள்

"ஏ"ற்றமே தரும்

'ஏ" ஞ்சலே

Wednesday, May 23, 2012

+2 வில் மதிப்பெண்கள் குறைவா..அதனாலென்ன..




+2 முடிவுகள் வெளியாகி...மதிப்பெண்கள் தெரிந்து விட்டன.மேற்கொண்டு படிக்க மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டாலும்..அது ஒன்றே நம் வாழ்நாளைத் தீர்மானிப்பதில்லை என்பதை மாணவ மாணவிகள் உணர்ந்து கொண்டு..மனம் தளராது இருக்க வேண்டும்..
அவர்களுக்காக கீழே ஒரு வாசகத்தைக் கொடுத்துள்ளேன்..






Friday, May 18, 2012

மதனும்..விகடனின் குசும்பும்..




காலில் விழும் சமாச்சாரத்தில் மதனுக்கும், விகடனுக்கும் சர்ச்சை ஏற்பட்டு விகடனில் இனி மதனின் கேள்வி பதில் பகுதியும், கார்ட்டூனும் இடம் பெறாது விகடன் அறிவித்துள்ளது.

இது சம்பந்தமாக விகடன் எழுதுகையில்..'தற்போது மதன் இருக்கின்ற சூழ்நிலையில் 'ஹாய் மதன்" பகுதியை மட்டுமல்ல..கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்கு சாத்தியம் ஆகாது என முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.குறிப்பிட்ட ஒரு தரப்பை பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங்களையோ தவிர்த்துவிட்டு..செய்திகளையும் கருத்துகளையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என விகடன் கருதுகிறான்' என்றுள்ளது.

இப்படி எழுதும் விகடனும்..நமக்கேன் வம்பு..என்றவகையில் ரகசியமாக ஒரு வேலை செய்துள்ளது..

'த்னது பொக்கிஷம்' பக்கங்களில் (பக்கம் 67) தலைவனின் ஆசி..என்று போட்டு..1999ல் பா.ஜ.க. மத்திய அமைச்சரவையில் அமைச்சர் பதவி ஏற்பதற்கு முன்..கருணாநிதியிடம் ஆசி பெறும் டி.ஆர்.பாலு..என பாலு கலைஞரின் காலில் விழும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.




Thursday, May 17, 2012

விகடனிலிருந்து விலக்கப்பட்டார் மதன்!


 ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து முற்றாக விலக்கப்பட்டார், அதில் பல ஆண்டுகள் கார்ட்டூனிஸ்டாக, கேள்வி- பதில் பகுதி எழுதும் பொறுப்பிலிருந்த மதன்.

ஆனந்த விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் மதன். கார்ட்டூனிஸ்டாக நுழைந்து, எஸ் பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், விகடன் குழும இதழ்களின் இணை ஆசிரியராக உயர்ந்தவர் மதன்.

அந்த பத்திரிகைகளில் மதன் எழுதிய தொடர்கள், கேள்வி பதில்கள் அவரை கார்ட்டூனிஸ்டிலிருந்து எழுத்தாளராக உயர்த்தின.

ஆனால் ஒரு கட்டத்தில், விகடனுக்கு வெளியிலும் பணியாற்ற முனைந்தார் மதன். அன்றைக்கு விஜய் மல்லையா நிர்வாகத்தில் இருந்த விஜய் டிவியில் இவர் நிகழ்ச்சிகள் செய்தார். மேலும் சினிமா படங்களுக்கும் வசனம் எழுத ஆரம்பித்தார்.

இந் நிலையில் விகடன் நிர்வாகத்துக்கும் அவருக்கும் பிரச்சனை வெடிக்க, 'golden handshake' என்ற முறையில் விகடனை மதன் சுமூகமாகவே பிரிந்தார்.

ஆனாலும் மதனின் கார்ட்டூன்கள் மற்றும் கேள்வி பதில் பகுதி மட்டும் தொடர்ந்து இடம்பெறும் என விகடன் அறிவித்திருந்தது. கடந்த இதழ்வரை மதனுக்காக இந்த இரு பகுதிகளும் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இவற்றுக்கு தனி வாசகர்களே உள்ளனர்.

இந்த நிலையில், 2.5.2012 விகடனில் மதன் கேள்வி பதில்கள் பகுதியில் வெளியான ஒரு புகைப்படம் விகடனிலிருந்தே மதனை வெளியேற்றியுள்ளது.

அந்தக் கேள்வியும் அதற்கு மதன் பதிலும்:

கேள்வி: உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்?

பதில்: ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு 'எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப் படுத்தான். பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் ('பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. 'நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு!

மேற்கண்ட கேள்வி- பதிலுக்குப் பொருத்தமாக, இன்றைய முதல்வர் ஜெயலலிதா காலில், ஒரு அமைச்சர் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடும் படம் இடம்பெற்றிருந்தது.

இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் நிர்வாக இயக்குனருக்கு மதன் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதில், "பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும் 'ஹாய் மதன்’ பகுதியில் வரும் என் பதில்கள் பொது அறிவு பற்றியது என்பது தங்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள் - வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், மனித இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட கேள்விகளைத்தான் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அரசியலையும் சினிமாவையும் நான் அநேகமாகத் தொடுவதில்லை.

2.5.2012 இதழில் 'காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது!

ஜெயா டி.வியில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வியின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், 'அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும்.

முக்கியமான பிரச்சனைகள் எத்தனையோ சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்து கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.

...வரும் இதழிலேயே 'புகைப்படங்கள், லே- அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று கூறியிருந்தார் மதன் தனது கடிதத்தில்.

மதன் கேள்வி- விகடனின் அதிரடி பதில்...

இந்தக் கடிதத்துக்கு விளக்கம் அளித்து இந்த வார விகடனில் அதன் ஆசிரியர் கொடுத்துள்ள விளக்கமான பதில் இது...

மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

'ஹாய் மதன்' பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத- அதே சமயம், அந்தக் கேள்வி- பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒருபோதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.

அதேபோல், 'இது பொது அறிவுப் பகுதி மட்டுமே' என்று இப்போது மதன் குறிப்பிடும் 'ஹாய் மதன்' பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது.

நடுநிலை இல்லை...

இதையெல்லாம் பார்க்கும்போது... தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், 'ஹாய் மதன்' பகுதியை மட்டும் அல்ல... கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு... செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறான்.

எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி- பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறியுள்ளார் விகடன் ஆசிரியர்.

இதன் மூலம் விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த மதன், முற்றாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பிரிவு நிச்சயம் இரு தரப்பினருக்கும் வருத்தமான விஷயம் தான்.

(நன்றி தட்ஸ்தமிழ்)

Wednesday, May 16, 2012

உங்களில் யாருக்கு நோமோபோபியா ?



உலகத்திலேயே மிகப்பெரிய பயம் என்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள்..?

ரொம்ப மூளையை கசக்காம தொடர்ந்து படிங்க...

உங்க போன் உங்க கிட்ட இல்லைனா உங்க ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்?

ஒரு நிமிடம் யோசித்து பாருங்க...

ஒரு பதற்றம், பயம், மன உளைச்சல் ...

இன்னும் சொல்லனும்னா...
அய்யயோ முக்கியமான கால் வருமே, நிறைய விஐபி காண்டாக்ட்ஸ் எல்லாம் இருக்கேன்னு நீங்கள் புலம்பூவீங்களா... கவலைப்படுவீங்களா...

இதுதாங்க உலகிலேயே மிகப்பெரிய பயம். இந்த பயத்தோடு நிறைய பேர் இருக்கிறார்களாம்.

இதை நாங்க சொல்லலைங்க... இங்கிலாந்தில் நடத்திய ஆய்வு ஒன்று இப்படி ஒரு தகவலை நமக்கு தருகிறது.

இந்த மாதிரி ஃபோன் காணாமல் போனால் பயப்படறதுக்கு பெயர் நோமோபோபியா.

அதாவது நோ மொபைல் போன் போபியா.

இந்த வியாதி உங்களுக்கு இருக்கிறதா என்று சந்தேகமிருந்தால் கீழ்காணும் சில அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா என்று சோதித்து பார்த்துக்கொள்ளுங்கள்.

* எப்பவுமே போன் சுவிட்ச் ஆப் செய்ய முடியாமை.
* மிஸ்டு கால், ஈமெயில், எஸ்.எம்.எஸ்சை அடிக்கடி பார்த்தல்
* போன் பேட்டரியை எப்பவும் முழுமையாக வைத்திருத்தல்
* பாத் ரூம் போகும் போது கூட கூடவே போனை கொண்டு செல்லுதல்

இந்த நோமோபோபியா நிறைய பேருக்கு உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
75 விழுக்காட்டினர் பாத்ரூமில் செல்போன் பயன்படுத்துகிறார்களாம். கேட்டால், மாடர்ன் செய்தித்தாள் என்று சொல்கிறார்களாம்.

தற்போது இங்கிலாந்தில் 1000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 66 விழுக்காட்டினரிடம் இந்த நோமோபோபியா இருப்பதாக அறிய முடிகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் இதேப்போன்ற ஆய்வை நடத்தியபோது, 53 விழுக்காட்டினர் போன் தொலைந்துபோனால் அச்சமடைய கூடிய வியாதி இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்று ஆண்கள் அதிகமாக நோமோபோபொயாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று பெண்கள் அதிகாக உள்ளனர்
அதுவும் 18-லிருந்து 24 வயது வரை உள்ளவர்கள் தான் மொபைல் போனுக்கு அதிகம் அடிமையானவர்களாக உள்ளனர். இவர்களில் 77 விழுக்காட்டினர் சில நிமிடம் கூட போனை பிரிந்து இருக்க முடியவில்லையாம்.

இதேப்போன்று, 25-இருந்து 34 வயது வரை உள்ளவர்களில் 68 விழுக்காட்டினர் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.

இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், 75 விழுக்காட்டினர் பாத்ரூமில் செல்போன் பயன்படுத்துகிறார்களாம். கேட்டால், மாடர்ன் செய்தித்தாள் என்று சொல்கிறார்களாம்.

இதேப்போன்று, சராசரியாக ஒரு நாளைக்கு 34 முறை தங்கள் போனை எடுத்து சும்மாவே பார்த்து வைக்கின்றனராம்.

இதுகுறித்து ஆய்வு நடத்திய செகியூர் என்வாய் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான அன்டி கெம்ஷல் தெரிவிக்கும் போது, நாங்கள் 2008 ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல்கள் தற்போது அப்படி தலைகீழாக உள்ளதாக கூறியுள்ளார். அதாவது, அன்று ஆண்கள் அதிகமாக நோமோபோபொயாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று பெண்கள் அதிகாக உள்ளனர் என்றார்.

தனது மெசேஜ்களை, பார்ட்னர் பார்த்துவிட்டால் அப்செட் ஆவோர் எண்ணிக்கை 49 விழுக்காடு உள்ளது. அதேசமயம், தனது போன் பாதுகாப்பு பற்றி பெரும்பாலானோர் கவலை படுவது இல்லையாம். வெறும் 46 விழுக்காட்டினர் மட்டுமே ரகசிய லாக் கோட் பாயன்படுத்துவதாகவும், 10 விழுக்காட்டினர் தனது தகவல்களை குறியீட்டு சொற்கள் மூலம் மறைத்து அனுப்புவதாக ஆய்வு கூறுகிறது.

இது இங்கிலாந்து நிலவரம்...
நம்ம ஊரில் இதுப்போன்ற வியாதி உள்ளவர்கள் எத்தனைப்பேரோ....?

தகவல் வெப்துனியா


பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர ராஜீவ்காந்தி விரும்பினார்-- கருணாநிதி






இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விரும்பினார் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் எழுதிய 5 நூல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:

தமிழன் தலைகுனிந்து கிடப்பது ஜனநாயகத்தின் பெயரால் அல்ல. கடந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட முடிவுகளால் அல்ல. தேர்தல் தோல்வியைப் பற்றி கவலைப்படுகின்ற கட்சி அல்ல திராவிட முன்னேற்ற கழகம். நமக்குள்ளே இன ஒற்றுமை இல்லை. நமக்குள்ளே மொழி ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. இதை மறுத்தும் பயனில்லை.

இலங்கை தமிழர்களுக்காக, ஈழத்தமிழர்களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்பதை இந்த நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக வைத்துக் கொண்டு வீரமணியிடமும், சுப.வீரபாண்டியனிடமும் உரையாடினேன். அவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டப்பட்ட நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்துவிட்டு, எனக்கும் ஒரு தோதான தேதியில் சென்னையில் அமர்ந்து பேசி தமிழ் ஈழ, தனி ஈழ விடுதலைக்கான, டெசோ அமைப்பு மாநாட்டை சென்னையில் விரைவில் நடத்த இருக்கிறோம்.

திமுக சார்பில் ஆட்சியமைக்கப்பட்டு நான் முதல்வரானதும் மரியாதை நிமித்தமாக ராஜீவ் காந்தியை சந்தித்தேன். இப்போது ஒரு ரகசியத்தை நான் உங்களிடம் சொல்கிறேன். என்னிடம் ராஜீவ் காந்தி, பிரபாகரன் எப்படி இருக்கிறார்? என்று கேட்டார். பிரபாகரன் தலைமையில் தனித்தமிழ் ஈழம் உருவாக என்னால் ஆன உதவிகளை செய்வேன் என்று கூறினார். அதற்குள் ஏதேதோ தமிழ்நாட்டில் நடந்துவிட்டது. இதன் காரணமாக அந்த முயற்சி தொடரவில்லை. அந்த முயற்சி தொடர்ந்திருந்தால் ராஜீவ் காந்தியே தனித் தமிழ் ஈழத்தை பெற்றுத் தந்திருப்பார் என்றார் கருணாநிதி.


Tuesday, May 15, 2012

அவ்வை சண்முகம் நூற்றாண்டும்...நானும்..





திருவனந்தபுரத்தில் 1912 ஏப்ரல் 26-ல் பிறந்தவர் அவ்வை சண்முகம். தந்தையார் கண்ணுசாமிப் பிள்ளை. தாயார் சீதையம்மாள். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை இவருக்கு மாமன் முறை.
சிறந்த குணச்சித்திர நடிகராக உலா வந்தவர் அவ்வை. அவர் நடித்த கதாபாத்திரங்களில் மறக்கமுடியாதவை பிரகலாதந், ராசேந்திரன், மாமல்லன், மதுரகவி, சித்தர் சிவா, போக்கிரி ராஜா, முரட்டு முத்தையன்.
"நடிப்புத் திறமையைப் பொறுத்தவரையில் அவ்வை நாடகத்தில் அவ்வைப் பாட்டியாக நடிக்கும் டி.கே.சண்முகம் அவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்று சிபாரிசு செய்கிறேன். வேஷம், பேச்சு, நடையுடை பாவனை எல்லாம் அவ்வளவு பொருத்தம். நடிப்போ அபாரம். அவ்வையாரின் முகத் தோற்றங்கள் நடிப்புக் கலையின் உன்னத சிகரமாக விளங்கின..'' இப்படிப் பாராட்டியவர் எழுத்தாளர் கல்கி.
நாடக அரங்கம் தவிர, வெள்ளித் திரையிலும் முத்திரை பதித்தார் அவ்வை. 1935-ஆம் ஆண்டு வெளிவந்த "மேனகா' முதல் சமூகத் திரைப்படம். அந்தப் படத்தில் இவரின் நடிப்பு பாராட்டப் பட்டது. இதுதவிர, மனிதன், பில்ஹணன், ஓர் இரவு, பெண் மனம், பாலாமணி, பூலோக ரம்பை, கப்பலோட்டிய தமிழன் போன்ற பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
அறிஞர் அண்ணா முதலமைச்சரான பிறகு சட்டமன்ற மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.) நியமிக்கப்பட்டார் அவ்வை.
நடிப்பு மேதையான அவ்வை, சிறந்த பாடகர், நல்ல கவிஞர். அண்ணாவின் "ஓர் இரவு' திரைப்படத்தில் ஜமீன்தாராக நடித்ததுடன், ஒரு பாடலையும் எழுதியுள்ளார்.
"எங்க நாடு - இது எங்க நாடு
எங்கும் புகழ் தங்கும் நாடு'
- என்று தொடங்கும் அந்தப் பாடல்.
ஒருசமயம் கடற்கரையில் நடைபெற்ற கூட்டமொன்றில், திடீரென்று அவ்வையை மேடைக்கு அழைத்து, "ஜெய பேரிகை கொட்டடா' என்ற பாரதியார் பாடலைப் பாடச் செய்து மகிழ்ந்தார். அன்றைய முதலமைச்சர். அவர்
காமராஜர்.
தன் முதல் மனைவி நோயுற்று திடீரென இறந்துபோக, அந்த உடலை வைப்பதற்குக் கூட இடம் கிடைக்காமல் தவித்தார் சண்முகம். அப்போது காலியாக இருந்த தன் புதிய வீட்டைத் தந்து உதவி செய்தார் ஒரு பிரமுகர். அவர் தந்தை பெரியார்.
தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளராக நான்கு ஆண்டுகள் பதவி வகித்தார் அவ்வை.
இயக்குநர் ஸ்ரீதர் எழுதித் தந்த "ரத்த பாசம்' நாடக எழுத்துப் பிரதியை ஒரே மூச்சில் படித்து முடித்து, அதை நாடகமாகத் தயாரித்தார் அவ்வை. அதுமட்டுமல்ல.. மேடையிலேயே ஸ்ரீதரை நிற்க வைத்து, "இந்த நாடகத்தின் எழுத்தாளர் இவர்தான்' என்று அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர் அவ்வை.
"சிவலீலா' நாடகத்தில் பாண்டியனாக நடித்தார் அவ்வை. அப்போது தன் குழுவில் புதியதாக இணைந்த நடிகர் ஒருவர் விரும்பிக் கேட்டதற்காக, தனது வேடத்தை அவருக்குக் கொடுத்து வாழ்த்தினார். அந்தப் புதிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.
பத்திரிகைத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவர், நாடகத்தில் ஆர்வம் கொண்டார். அவரை "முள்ளில் ரோஜா' நாடகம் எழுதவைத்து, மக்களிடையே பிரபலமாக்கினார் அவ்வை. நாடகம் எழுதியவர் பின்னாளில் பிரபல இயக்குநர் ஆனார். அவர் ப.நீலகண்டன்.
கதர், கைத்தறி தவிர வேறு எந்த வகை ஆடைகளையும் அவர் அணிந்ததில்லை. சிவப்புக் கறை போட்ட கதர் வேட்டிதான் அவர் எப்போதும் அணிந்தார்.
நாடக விழாக்களுக்குத் தலைமை தாங்க ஒப்புக்கொண்டால், அழைப்பிதழ் தமிழில் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் இருந்தால், கிழித்துவிட்டு "விழாவுக்கு வர இயலாது' என்று விழா அமைப்பாளருக்குத் தகவல் தெரிவித்து விடுவார். அந்த அளவிற்கு தமிழ்ப் பற்று அவ்வைக்கு.
அவரது மணிவிழாவின் போது அன்பளிப்புத் தொகையாகச் சுமார் ஏழாயிரம் ரூபாய் கிடைத்தது. அந்தத் தொகை மூலம் பம்மல் சம்பந்த முதலியார் அறக்கட்டளையைச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் உருவாக்கினார் டி.கே.எஸ்.
அவ்வை சண்முகம் அவர்களுக்கு வாரிசுகளாக நான்கு புதல்வர்கள். ஒரு புதல்வி. இவர்களில் மூத்தவர் டி.கே.எஸ்.கலைவாணன்.

15-2-73 அன்று அவ்வை சண்முகம்.காலமானார். சென்னையில் அவர் வாழ்ந்த தெருவிற்கு அவ்வை சண்முகம் சாலை என்றே பெயர் சூட்டப்பெற்று, இன்றளவும் அது வழக்கத்தில் உள்ளது. (தகவல்- தினமணி)




அவ்வை சண்முகம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் 26-5-12 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.டி.கே.எஸ்., கலைவாணன் அவர்கள்..நாடகமேடையில் இன்று உள்ள பிரபலங்களை அன்று கௌரவித்தார்.நாடகம் எழுதி, தயாரித்து, இயக்கி,நடித்து வரும் நானும் கௌரவிக்கப்பட்டதை பெரும் பேறாக எண்ணுகிறேன்.



Monday, May 14, 2012

2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!




விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் எழுதிய ‘ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க!’ என்ற புத்தகம் விற்பனையில் சாதனை படைத்து, 2 லட்சம் பிரதிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஊடகத்துறையில் கோபிநாத் என்ற பெயரை விட நீயா நானா கோபிநாத் என்ற பெயர்தான் பிரபலம். அந்த அளவிற்கு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது அந்த நிகழ்ச்சி. ஒரு டாக் ஷோ எப்படி இருக்க வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார்.

தான் நிகழ்ச்சி நடத்துநர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளர் என்பதையும் தனது நூலின் வாயிலாக நிரூபித்துள்ளார் கோபிநாத். அவர் தனது அனுபவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் தனது எழுத்துக்களில் வடித்துள்ளார்.

2007ம் ஆண்டு தனது முதல் புத்தகமான ‘ தெருவெல்லாம் தேவதைகள்’ என்ற நூலை எழுதினார். அதைத் தொடர்ந்து எழுதிய ‘ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க !’ என்ற நூல் வாசகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலில் பதிப்பிக்கப்பட்டது.

தற்போது அந்த நூல் 16வது முறையாக பதிப்பிக்கப்பட்டு 2 லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. அந்த புத்தகம் அனைவரும் கவர முதல் காரணம் அதன் தலைப்பே அதை வாங்கத் தூண்டுவதாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தை வாசித்தால் மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

தகவல் தட்ஸ்தமிழ்


Saturday, May 12, 2012

யானைக்கு உதவிய ஈ




ஒரு காட்டில் யானை ஒன்று..குறுகிய பாலத்தைக் கடக்க முயற்சித்தது.பாலம் குறுகலாக இருந்ததால்..அது அதைக் கடக்க பயந்து என்ன செய்வது எனத் தெரியாமல் யோசித்தது.அப்போது அதன் முதுகில் சில கொசுக்கள் அமர்ந்திருந்தன.இந் நிலையில் ..ஒரு ஈ வந்து அதன் மீது அமர்ந்து..'யானையாரே..நான் இருக்கிறேன்..தைரியமாக பாலத்தைக் கடங்கள்' என்றது.

யானையும் ஈயின் நகைச்சுவையை ரசித்தபடியே..பாலத்தை அதி எச்சரிக்கையாகக் கடந்தது.

பின் ஈ. எல்லோரிடமும்..'என் பலத்தால்தான் யானையால் பாலத்தைக் கடந்தது' என பீற்றிக் கொண்டு திரிய ஆரம்பித்தது.


அன்னையர் தினம்...இப்பாடலைக் கேட்டீர்களா?



இதைவிட அன்னையின் பெருமைச் சொல்ல வேறு என்ன இருக்கிறது.
பாடலின் ஒரிஜினலும்..பிரகதி பாடிய (சூபர் சிங்கர் ஜூனியர் 2012)தும்.






Friday, May 11, 2012

வழக்கு எண் 18/9..- நீதிமன்ற விசாரணை




வழக்கு எண் 18/9 நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

நீதிமன்ற சிப்பந்தி - (குரலிடுகிறார்)வழக்கு எண் 18/9..பொதுஜனம் vs பாலாஜி சக்திவேல்

நீதிபதி- வழக்குரைஞர்கள் தங்கள் வாதத்தை ஆரம்பிக்கலாம்

பொதுஜன வக்கீல் - யுவர் ஹானர்..இந்த படம் சில தவறான உதாரணங்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக ..தனியார் பள்ளி கரஸ்பாண்டண்ட் ஒரு பெண்..அவர் ஒரு பிம்ப் ஆகவும்..அவரது குணத்தால் அவரது கணவர் விட்டுவிட்டு ஓடியதாகவும்..அவர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது போலவும்..அமைச்சர்கள் தொடர்பால் இப்படி நடப்பதாகவும் கூறப்படுவது ..பொதுமக்களிடையே...தேவையில்லாமல்...தனியார் பள்ளி நிர்வாகிகள் எல்லாமே இப்படியோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது.
அடுத்ததாக..காவல்துறை...இவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை? இந்த படத்திலும்..காவல்துறை அதிகாரி..ஏழைகளின் புகாரை வெகு அக்கறையுடன் வாங்குவது போல காட்டினாலும்...சொந்த நலனுக்காகவும்,அமைச்சரின் கட்டளைபடியும், ஜாதிக்காகவும் துரோகம் இழைப்பதாகக் காட்டப்படுகிறது..இதுவும் கண்டிக்கத்தக்கது.
+2 படிக்கும் செமிஸ்ட்ரி மாணவன்..தன் விருப்பத்திற்கு இணங்காத மாணவி மீது ஆசிட் கொட்டுவதாகக் காட்சியைப் பார்த்து...ஆண்டவா..இனி வரும் நாட்களில், ஏதேனும் பள்ளியில், யாரேனும் மாணவன் இது போன்ற செயலில் ஈடுபட்டு..இந்த படத்தைப் பார்த்து தான் கற்றுக் கொண்டதாக நடக்கக்கூடாது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள பாலாஜி சக்திவேல்... தன் முந்தைய "காதல்" படத்திலும்..பள்ளி மாணவி..படிக்காத மெக்கானிக் ஷாப் பையனுடன் ஓடுவதாகக் காட்டினார்..இப்படத்திலும்..பள்ளி மாணவி..பள்ளி மாணவனிடம் சிக்குவதாகச் சொல்லியுள்ளார்.இது..மாணவப்பருவத்தினடையே நஞ்சை விளைவிப்பதாகும்..இக்குற்றச்சாட்டுகளை ஏற்று படத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

நீதிபதி - எதிர்தரப்பு தன் வாதத்தை தொடங்கலாம்.

பாலாஜி வக்கீல்- யுவர் ஹானர்...நாட்டில் நடக்காத எதையும் என் கட்சிக்காரர் படத்தில் காட்டவில்லை.படம் பார்ப்போர் அனைவரையும் கவர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.ஃப்ளாட்ஃபாரக்கடை, வட இந்தியா முறுக்கு கம்பெனிக்கு விற்கப்படும் சிறுவர்கள்,கந்து வட்டி, உடலைவிற்று பிழைப்போர் திருந்துவது போன்ற பல விஷயங்களை இப்படம் சொல்கிறது.படத்தில்..எடிடிங் அருமையாக உள்ளது.எதிர்பாராத கிளைமாக்ஸ்.ஊடகங்கள் பாராட்டுகின்றன.இதையெல்லாம் கருத்தில் கொண்டு மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
நீதிபதி - இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, இந்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது..
         நாட்டில் நடப்பதைத் தான் கூறுகிறோம் என குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் கூறினாலும்..சமுதாயத்தில் உங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.பள்ளியின் கரஸ் என காட்டப்பட வேண்டிய அவசியம் என்ன? விடலைப் பருவத்தினர் மீது பெற்றோர் ஒரு கண் வைத்திருக்க வேண்டும், பாக்கெட் மணி தாராளமாய் கொடுத்தாலும்..கணக்கு பார்க்க வேண்டும்..என்றெல்லாம் பெற்றோருக்கு அறிவுரையை மறைமுகமாகக் கூறியுள்ளதை இந் நீதி மன்றம் பாராட்டுகிறது.
மனுதாரரைப் பொறுத்தவரை..படத்தின் முன் பாதியில் இருந்த சமூக அக்கறை இயக்குநருக்கு பின் பாதியில் இல்லை என்பதை ஓரளவு உண்மையாய் இருந்தாலும்...வாழ்க்கையின் மறுபாதியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதை மறக்கக் கூடாது.

இப்படிப்பட்ட படம் எப்போதோ ஒன்று தான் வருகிறது.அதற்கும் தடை விதிக்க வேண்டும் என்பதை ஏற்கமுடியாது.

இது போன்று தேவையில்லாமல் வழக்கு போட்ட பொதுஜனம்..நீதிமன்ற நேரத்தை வீணாக்கியதால்..இப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என இந்  நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
 

Wednesday, May 9, 2012

100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியா




100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்து இந்தியா எப்படி இருந்திருக்கும்? உங்களிடம் திடீரென 200 கறுப்பு-வெள்ளைக் கால புகைப்படங்களைக் கொடுத்தால்....எப்படி துள்ளுவீர்கள்?

இந்த மகிழ்ச்சிதான் பழமை விரும்பிகளுக்கும் வரலாற்று ஆர்வர்களுக்கும் இப்போது! ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் உள்ள ராயல் கமிஷன் அலுவலகத்தில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு ஷூ பெட்டியை எதேச்சையாக திறந்திருக்கிறார்கள்..

அதில் கட்டுக்கட்டாக கிளாஸ் பிளேட் நெகட்டிவ்கள்.. பிரிண்ட் போட்டுப் பார்த்தால் அந்தக் காலத்து இந்தியா...

பெரும்பகுதி புகைப்படங்கள் கொல்கத்தா நகரில் எடுக்கப்பட்டவை.. சென்னை புகைப்படங்களும் கூட இதில் அடக்கம்! அனேகமாக இந்த புகைப்படங்கள் 1912-ம் ஆண்டு எடுக்கப்பட்டவை என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ், ராணி மேரி ஆகியோர் கொல்கத்தா வந்தபோது எடுக்கப்பட்ட படங்களும் இருக்கின்றன. அவர்கள் கொல்கத்தாவுக்கு வந்தது 1912தான்!

எடின்பரோ நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் தற்போது இந்த அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

இது குறித்த மேலும் விவரங்களுக்கு

http://canmore.rcahms.gov.uk/en/publication/?publication=indianegatives


Tuesday, May 8, 2012

கழுகு




காதலித்தான்

காதலித்தாள்

காத்திருந்தாள்

காதலனுக்கு

இலவு காத்த கிளியாய்

கழுகொன்று பறந்தது மேலே


Monday, May 7, 2012

எம்.ஜி.ஆருக்கு இருந்த மனக்குறைகள்...




மூத்த வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஃபேஸ்புக்கில் கூறியுள்ளது..

எம்.ஜி.ஆர்., அவரிடம் ஒருநாள்..'தினமும் என் வீட்டில குறைஞ்சது ஐம்பது, அறுபது இலைங்க விழுது.புகழின் உச்சியில் இருக்கிறேன்..ஆனாலும் இரண்டு குறைகளை போக்கிக்கவே முடியல.ஒண்ணு, "குழந்தைங்க வாரிசு இல்லாத குறை' என்று சொல்ல..

இடைமறுத்த வசனகர்த்தா, ":ஏன் காமராஜருக்குக் கூட வாரிசு இல்ல"

அதற்கு எம்.ஜி.ஆர்.,' அப்படி இல்ல..அவருக்கு கல்யாணமே ஆகாத காரணத்தால் குழந்தைங்க இல்லாம போயிடுச்சு.ஆனா எனக்கு இரண்டு, மூன்று கல்யாணம் ஆகியும் ஒரு குழந்தை கூட பிறக்கல"

பெரிய பெரிய ஜோசியரை எல்லாம் ரகசியமா வீட்டுக்கு வரவழைச்சு என் ஜாதகத்தை காட்டினப்ப எல்லோரும் ஒரே மாதிரி, இது பல தார ஜாதகம்! உங்க வாழ்க்கையில பல பெண்கள் குறுக்கிடுவாங்க.அவங்களுக்கு வேண்டியதை எல்லாம் நீங்க கொடுப்பீங்க.ஆனா அவங்க யாரும் உங்களுக்கு வேண்டிய ஒரு குழந்தையைக் குடுக்க மாட்டாங்க.குடுக்கவும் முடியாது.குறை அவங்ககிட்ட இல்லை'ன்னு சொன்னாங்க.

என் அண்ணனுக்கு அத்தனைக் குழந்தைகளைக் கொடுத்த கடவுளுக்கு ஏனோ எனக்கு ஒரே ஒரு குழந்தையைக் கூட கொடுக்க மனசு வரலே!"

என்னோட அடுத்த குறை, 'நான் பெரிசா ஒன்னும் படிக்க தெரிஞ்சுக்கல.இளமையிலே பட்ட வறுமை காரணமாக அந்த வாய்ப்பு, வசதி இல்லாம போயிடுச்சு'

நடிப்பிற்கு அப்பாற்பட்டு அவரது கண்கள் நீர் நிலையானதை நேரில் அந்த வசனகர்த்தா அன்றுதான் பார்த்தாராம்.  

இத்தகவலை இந்த வார பாக்யா இதழில் (மே 11-17) கேள்வி பதில் பகுதியில் பாக்கியராஜ் குறிப்பிட்டுள்ளார்.


விஜய் தம்மடிக்கும் காட்சி நீக்கம் - இயக்குநர் முருகதாஸ்




 பாமகவின் அமைப்பான பசுமைத் தாயகம் கடும் எதிர்ப்பு காரணமாக துப்பாக்கி படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி நீக்கப்பட்டது.

துப்பாக்கி படத்தில் விஜய் ஸ்டைலாக புகைபிடிப்பது போல சென்னை நகர் எங்கும் சமீபத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பத்திரிகைகளிலும் விளம்பரங்கள் வெளியானது. இதற்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்தது. பசுமை தாயகம் அமைப்பு மத்திய அரசுக்கு இது குறித்து கடிதம் எழுதியது.

நடிகர்கள் புகை பிடிப்பது போன்ற போஸ்டர்கள் ஒட்ட மத்திய அரசு தடை விதித்துள்ளது என்றும், அதையும் மீறி இவை ஒட்டப்பட்டு உள்ளது என்றும் அந்த அமைப்பு தன் கடிதத்தில் குற்றம்சாட்டியது.

முகப்ரேரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகை பிடிக்கும் போஸ்டர்களை அகற்றும்படி புகார் அளித்தார்.

"புகை பிடிப்பதால் இளைஞர் சமுதாயத்தினர் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பிரபல நடிகர்களின் புகைபிடிக்கும் போஸ்டர்கள் அவர்களை தவறாக வழி நடத்தும்", என்றும் புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

ஆரம்பத்தில் இந்தக் காட்சிகளை நீக்கமாட்டேன் என இயக்குநர் முருகதாஸ் பிடிவாதமாக இருந்தார்.

ஆனால் இப்போது நீக்கிவிட சம்மதித்துள்ளார். இதுகுறித்து முருகதாஸ் கூறுகையில், "விஜய் புகைபிடிப்பது போன்று ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் படத்தின் விளம்பரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுபோன்று புகை பிடிக்கும் சீன்கள் எதுவும் படத்தில் இல்லை. விஜய் புகை பிடிப்பது போல் ஒரு காட்சியை மட்டும் போட்டோ ஷூட்டில் எடுத்தோம். அதையும் படத்தில் இருந்து நீக்கிவிட்டோம். இனிமேல் விஜய் புகை பிடிப்பது போன்ற போஸ்டர்களை விளம்பரத்துக்கு பயன்படுத்த மாட்டோம்," என்றார்.

தகவல் தட்ஸ்தமிழ்


Sunday, May 6, 2012

தாயும் கோயிலாகிறாள்..




கோயில்

கருவறையில் இறைவன்

தாயின் கருப்பையில்

குழந்தை

குழந்தையும், இறைவனும் ஒன்றெனில்

கருப்பையும், கருவறையும் ஒன்றல்லவா..?

கருவறை கோயிலில்

கருப்பை தாயிடம்

தாயும் கோயிலாகிறாள்..


Thursday, May 3, 2012

புதுக்கோட்டை இடைத் தேர்தலை திமுக புறக்கணிக்கும் -தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.




புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த முத்துக்குமரன் சாலை விபத்தில் பலியானதைத் தொடர்ந்து அங்கு ஜூன் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இம்முறை போட்டியிடவில்லை. பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தது.

அதிமுக மட்டுமே போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளராக கார்த்திக் தொண்டமானையும் களமிறக்கி அமைச்சர்கள் படை கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் அமைத்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா என்று சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் கேட்டதற்கு, மே 17-ந் தேதிதான் திமுக நிலை அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார். இடைத்தேர்தல் தேதியை தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் தீர்மானித்திருப்பதால் யார் போட்டியிட்டாலும் தோற்பது உறுதி என்ற நிலையில் திமுக தேர்தலை புறக்கணிப்பதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களையும் அதிமுக புறக்கணித்திருந்தது. அண்மையில் நடைபெற்ற சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிட்ட திமுக டெபாசிட்டையே பறிகொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

(தட்ஸ்தமிழ்)


Wednesday, May 2, 2012

நடிகர் கட்சித் தலைவர் ஆனது தவறு...??!!




1)கற்பனை மிக்கவங்க தேவைன்னு தலைவர் கேட்கிறாரே ஏன்?
அவங்க கற்பனையை வைச்சு புதுசு புதுசா ஆளும் கட்சி மேல தப்பு சொல்லலாமாம்

2)ஆளும் கட்சி மாறினாலும் மக்கள் மாறல்லைன்னு எப்படி சொல்ற
ஆளும் கட்சி கூட்டம் முடிந்ததும்..அப்படியே அந்த கூட்டம் எதிர்க் கட்சி கூட்டத்திற்கும் போகுதே

3)சமச்சீர் கல்வியால மாணவர்களுக்கு எந்த பயனும் இல்ல
ஏன் அப்படி சொல்ற
அப்பவும் அவங்க பாடங்களை படிக்க வேண்டியிருக்கே

4)அந்த பேஷன்ட் பொழைச்சுட்டாரா எப்படி
கடைசி நேரத்துல டாக்டர் ஆபரேஷன் வேணாம்னு தீர்மானம் பண்ணிட்டாரு

5)234 தொகுதிக்கும் இடைத் தேர்தல் வந்தா நல்லா இருக்கும்
ஏன் அப்படி சொல்ற
ஒவ்வொரு தொகுதியும் ராஜ உபசாரம் பெறும்

6) அந்த ஆட்சியில இருக்கிற 70 அமைச்சர்ல 35 பேருக்கு ஒரே இலாகாவாமே அப்படியா?
ஆமாம்..
அப்படி என்ன இலாகா
இடைத்தேர்தல் இலாகா..இடைத்தேர்தல் வந்த அந்த தொகுதிக்கு இவங்க போய் பிரசாரம் செய்யணுமாம்

7)ஒரு டிரைவர் - இது வரைக்கும் நான் ஒரு போலீஸ்காரரிடமும் மாட்டியதில்லை
மற்றவர் - எப்படி
முதல் டிரைவர்- எந்தக் கட்சி ஆட்சிக்கு வருதோ..அந்தக் கட்சிக் கொடியை கார் முன்னால பறக்கவிட்டுடுவேன்

8)நடிகரை கட்சித் தலைவர் ஆக்கியது தவறாய் போச்சு
.என்னவாயிற்று
பொதுக்கூட்டம் நடத்த லொகேஷன் பாக்கச் சொல்றார்


Tuesday, May 1, 2012

"வங்கியில் கொள்ளை" பாக்கியராஜ் - பதில்




இந்த வார பாக்யா இதழில் பாக்யராஜின் கேள்வி பதில் பகுதியில்..அவரின் இந்த பதில் நகைச்சுவையாக இருந்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கேள்வி - வெளியே சொல்லமுடியாத கனவு ஒன்று?

பதில் - நியாயமா வெளியே சொல்ல முடியாத கனவுன்னு சொல்றதைவிட ஊமையின் கனவுன்னுதான் சொல்லணும்.அதுதான் வெளியே சொல்ல முடியாத கனவா இருக்கும்.ஆனால் யாரோ ஒருத்தர் கிட்ட அசிங்கமா அவமானப்பட்டா அதுவும் வெளியே சொல்ல முடியாத கனவுதான்.

ஒருமுறை டெல்லியின் திகார் சிறையிலிருந்து தப்பித்த ரெண்டு கொள்ளையர்கள் உடனடியா ஒரு கொள்ளையை அதே நைட்ல நடத்த திட்டமிட்டாங்க.அந்த திட்டப்படி வரிசையா வங்கிகள் இருந்த வீதிக்கு போனப்ப திடீர்னு தெருவிளக்குகள் எல்லாம் அணைஞ்சிருச்சு.ஒரு வழியா தேடிக் கண்டுபிடித்து வங்கியை அடைஞ்சாங்க.

வங்கி பாதுகாப்பு அமைப்பை செயலிழக்க வைச்சாங்க.கேமராவுக்கு போற ஒயரைத் துண்டிச்சாங்க.

சேஃப்டி லாக்கரைத் தேடிக் கண்டுபிடிச்சாங்க. அவங்க ஒரு பத்து சேஃப்டி லாக்கர்தான் இருக்கும்னு நினைச்சாங்க.ஆனா நூத்துக்கணக்கான சின்ன சேஃப்டி லாக்கர்கள் இருந்துச்சு.அவர்களுக்கு ஒரே சந்தோசம்.'இதுல இருக்கிற நகைகள், பணத்தைக் கொள்ளையடித்தால் போதும்.வாழ்நாள் முழுக்க வேற எதும் தேவை இல்லை'ன்னான் ஒருத்தன்.

முதல் சேஃப்டி லாக்கரின் பூட்டை உடைச்சாங்க.உள்ளே நகை, பணத்துக்கு பதிலா வெண்ணிற பால் போல ஒரு திரவம் மட்டுமே இருந்தது.மீண்டும் அடுத்த சேஃப்டி லாக்கரின் பூட்டையும் உடைச்சாங்க.ஆனா அதுலயும் அதுவே இருந்தது.மேலும் பத்து சேஃப்டி லாக்கரை உடைச்சும் ஏமாற்றமே மிஞ்சியது.

கோபத்துல மொத்தக் கண்ணாடி பாட்டில்களையும் உடைச்சாங்க.அந்த திரவத்தோட வாசத்தால குமட்டிட்டு வந்தது.ஒரு கிராம் தங்கம் கூட கிடைக்காத விரக்தியிலும், துர்நாற்றத்தாலும் தப்பினால் போதும்னு உடனே அங்கிருந்து கிளம்பிட்டாங்க.

அடுத்த நாள் செய்தித்தாள்கள்ல தலைப்பு செய்தி, 'டெல்லியின் மிகப்பெரிய விந்தணு வங்கியில் கொள்ளை"