ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல் பதவிக் காலம் முடிகிறது.
அடுத்த ஜனாதிபதிக்கான வேட்பாளர் யார்? என முடிவெடுக்க முடியாத நிலையில் இன்னமும் காங்கிரஸ் உள்ளது.
அனைத்து கட்சிகளும் ஏற் று கொள்ளும் வகையில் வேட்பாளர் இருக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர்.
ஜனாதிபதியாக வி.வி.கிரி இருந்த சமயம்..அந்த பதவி ரப்பர் ஸ்டேம்ப் என்ற பெயர் பெற்றது.
இன்றுள்ள நிலையில் அந்த பதவிக்கு ஏற்ற நபராக மன் மோஹன் சிங் மட்டுமே தெரிகிறார்.மைய அரசுடன் ஒத்து போவார்..அதே சமயம் வெளிநாடுகளுக்கு அடிக்கடி போய் வரவும் தயங்க மாட்டார்.
பேசாமல் காங்கிரஸ் பிரணாப் முகர்ஜியை (எனக்கு ஹிந்தி தெரியாததால் பிரதமர் ஆக முடியாது என ஒரு சமயம் புலம்பியவர் இவர்) பிரதமர் ஆக்கி விட்டு..மன் மோகனை ஜனாதிபதி ஆக்கிவிடலாம்.
1 comment:
அவ்வ்வ்வ், நல்ல யோசனை .., உங்க யோசனையை காங்கிரஸ்காரர்கள் காதுகொடுத்து கேட்பார்களா ..?
Post a Comment