Monday, May 28, 2012

பாக்கியராஜின் பதில்..




இந்த வார பாக்யா (ஜூன் 1-7) இதழில் பாக்யாராஜின் கேள்வி பதில் பகுதியில் என்னைக் கவர்ந்த அவரது பதில்..

கேள்வி - தங்களைக் கவர்ந்த ஒரு தத்துவம்..?

பதில் - ஒரு நல்ல மனுஷன் எப்பவும் எல்லார்க்கும் இல்லேன்னு சொல்லாம எல்லா உதவியும் செய்வாரு.அவர் திடீர்னு ஒருநாள் நோய்வாய்ப் பட்டு இறந்து போனாரு.அப்ப அந்த ஊர்ல இருந்த ஒரு குருகிட்ட ஊரே போய் 'அவருக்கு எப்படி இப்படி நடக்கலாம்னு காரணம் கேட்டாங்க. அதுக்கு குரு சிரிச்சுகிட்டே ஒரு பூத்தொட்டியக் காட்டினாரு.அது விரிசல் விட்டு உடைஞ்சிருந்தது.தான் வளரக் காரணமாயிருந்த தொட்டியவே அந்த பூஞ்செடி உடைச்சிருச்சு.

அதாவது அது வளர போதுமானதா தொட்டி இல்லை.இப்ப செடியை எடுத்து வேற இடத்துல நடணும்.அதாவது இறந்தவர் உடல் பூந்தொட்டி மாதிரி.இறந்தவர் சேவை செடி மாதிரி.அதனால அந்த உடலிலிருந்து கடவுள் அவரை அப்புறப்படுத்தி வேறு விதமாக பிறக்க வைக்கப் போகிறார்னு அர்த்தம்.கூடிய சீக்கிரம் இது நடக்கும்' னாரு.ஜனங்களுக்கு இந்த விளக்கம் நியாயமாப்பட்டது.



3 comments:

Nagasubramanian said...

1st class thought!

ஹேமா said...

பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.ஒரு நல்லவர் இறந்துவிட்டால்....ஆண்டவனுக்கும் அவரின் சேவை தேவைப்பட்டிருக்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் !

இராஜராஜேஸ்வரி said...

நியாயமான விளக்கம்