Tuesday, May 1, 2012

"வங்கியில் கொள்ளை" பாக்கியராஜ் - பதில்
இந்த வார பாக்யா இதழில் பாக்யராஜின் கேள்வி பதில் பகுதியில்..அவரின் இந்த பதில் நகைச்சுவையாக இருந்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கேள்வி - வெளியே சொல்லமுடியாத கனவு ஒன்று?

பதில் - நியாயமா வெளியே சொல்ல முடியாத கனவுன்னு சொல்றதைவிட ஊமையின் கனவுன்னுதான் சொல்லணும்.அதுதான் வெளியே சொல்ல முடியாத கனவா இருக்கும்.ஆனால் யாரோ ஒருத்தர் கிட்ட அசிங்கமா அவமானப்பட்டா அதுவும் வெளியே சொல்ல முடியாத கனவுதான்.

ஒருமுறை டெல்லியின் திகார் சிறையிலிருந்து தப்பித்த ரெண்டு கொள்ளையர்கள் உடனடியா ஒரு கொள்ளையை அதே நைட்ல நடத்த திட்டமிட்டாங்க.அந்த திட்டப்படி வரிசையா வங்கிகள் இருந்த வீதிக்கு போனப்ப திடீர்னு தெருவிளக்குகள் எல்லாம் அணைஞ்சிருச்சு.ஒரு வழியா தேடிக் கண்டுபிடித்து வங்கியை அடைஞ்சாங்க.

வங்கி பாதுகாப்பு அமைப்பை செயலிழக்க வைச்சாங்க.கேமராவுக்கு போற ஒயரைத் துண்டிச்சாங்க.

சேஃப்டி லாக்கரைத் தேடிக் கண்டுபிடிச்சாங்க. அவங்க ஒரு பத்து சேஃப்டி லாக்கர்தான் இருக்கும்னு நினைச்சாங்க.ஆனா நூத்துக்கணக்கான சின்ன சேஃப்டி லாக்கர்கள் இருந்துச்சு.அவர்களுக்கு ஒரே சந்தோசம்.'இதுல இருக்கிற நகைகள், பணத்தைக் கொள்ளையடித்தால் போதும்.வாழ்நாள் முழுக்க வேற எதும் தேவை இல்லை'ன்னான் ஒருத்தன்.

முதல் சேஃப்டி லாக்கரின் பூட்டை உடைச்சாங்க.உள்ளே நகை, பணத்துக்கு பதிலா வெண்ணிற பால் போல ஒரு திரவம் மட்டுமே இருந்தது.மீண்டும் அடுத்த சேஃப்டி லாக்கரின் பூட்டையும் உடைச்சாங்க.ஆனா அதுலயும் அதுவே இருந்தது.மேலும் பத்து சேஃப்டி லாக்கரை உடைச்சும் ஏமாற்றமே மிஞ்சியது.

கோபத்துல மொத்தக் கண்ணாடி பாட்டில்களையும் உடைச்சாங்க.அந்த திரவத்தோட வாசத்தால குமட்டிட்டு வந்தது.ஒரு கிராம் தங்கம் கூட கிடைக்காத விரக்தியிலும், துர்நாற்றத்தாலும் தப்பினால் போதும்னு உடனே அங்கிருந்து கிளம்பிட்டாங்க.

அடுத்த நாள் செய்தித்தாள்கள்ல தலைப்பு செய்தி, 'டெல்லியின் மிகப்பெரிய விந்தணு வங்கியில் கொள்ளை"


9 comments:

T.N.MURALIDHARAN said...

நல்ல நகைச்சுவைதான். பாக்கியராஜிடம் இன்னும் சரக்கு இருக்கத்தான் செய்கிறது.

நம்பள்கி said...

ஜோக் நல்லா இருக்கு. ஆனால், தமிழ் சினிமா மாதிரி எந்த ஒரு லாஜிக்க்கும் இல்லாமல் இருக்கும் ஜோக்!

நம்பள்கி said...

பாக்யராஜ் விந்து வங்கி என்றால், கை XXXXXX-ச்சு வந்த சரக்கை பாட்டிலில் பாதுகாப்பது என்று நினைத்து விட்டார்!

இந்த ஒரு விந்து வங்கி வைக்க ஆகும் செலவில் 10000 SBI கிளைகள் ஆரம்பிக்கலாம்! Body Fluids - Sperms பாதுகாப்பது சாதாரண விஷயம் அல்ல.

பாக்யராஜ் எனக்கு பிடித்த நம்பர் ஒன் காமெடியன், நடிகனாக இருந்தாலும்...தமிழ் படத்தை எடுக்கும் எவனுக்கும் அடிப்படை அறிவு கூட கிடையாது, இருக்காவும் என்ற கோணத்தில் இது நல்ல சூப்பர் ஜோக்!

வவ்வால் said...

டீ.வி சார்,

விந்தணு வங்கினா அங்கும் லாக்கர்ல தான் வச்சு இருப்பாங்க என நினைத்து விட்டாரா பாக்யராஜ், அவரை விட நம்பள்கி புத்திசாலியா இருப்பார் போல :-))

-270 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் கீழே திரவ நைட்ரஜனில் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும்.இதுவும் கிரையோஜெனிக் டெக்னாலஜி தான். பெரிய உலோக குடுவைபோல ஒரு அமைப்பில் முழுக்க சீல் செய்யப்பட்ட நிலையில் இருக்கும் ,யாராவது உடைத்து திறந்தால் திறந்தவன் மேலோகம் போக வேண்டியது தான் திரவ நைட்ரஜன் highly corrosive in nature தசைகள் எல்லாம் வினாடிகளில் கரைந்து போய்விடும்.தஞ்சை அருகே கால்நடை உரை விந்தணு வங்கி இருக்கு அங்கேயே இப்படித்தான் இருக்கும்.

ஜோக் சொன்னா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது இவன் என்னடா என்றால் ரொம்ப ஆராயுரானேனு நொந்துக்காதிங்க. :-))

Joseph George said...

வௌவால் அய்யா... ஜோக் ஆராய்ச்சியில் ஆராய்ச்சி. ஸ்பெர்ம் வைத்திருக்கும் வெப்பம் −196 °C . லிக்குஇட் நைற்றோஜென் போயளிங் பாயிண்ட் −196 °C . -270 டிகிரி செல்சியஸஇல் மிகவும் அதிக குளிர். எடுத்துகாற்றிற்காக -274 டிகிரி செல்சியஸ இயற்பியல்லில் இயலாது

வவ்வால் said...

ஜோசெப்.

ரொம்ப ஆராய்ச்சி செய்ய வேண்டாம், டிகிரி பாரன்ஹீட், டிகிரி செல்சியஸ் என எழுதுவதால் வந்த குழப்பம், ஃபாரன்ஹீட்டில் சொல்லி இருப்பதை செல்சியசில் சொல்லிவிட்டென்...

சரியான வெப்ப நிலை -320 ஃபாரன்ஹீட் என நினைக்கிறேன், எனக்கு சொன்னது கால் நடை மருத்துவ மனையில் அவர்கள் பொதுவா -270எஃப் க்கு கீழ் என்றார்கள்.

மேலும் இங்கே சொல்ல வந்தது விந்தணு வங்கி என்றால் சாதாரண வங்கி லாக்கர் போல இருக்காது என்பதே.கிரையோஜெனிக் என சொல்லியதே போதும்.

இவ்வளவு சொல்லும் ஆசாமி நான் சொல்லும் முன்னரே விந்தணு வங்கினா எப்படி இருக்கும்னு சொல்லி இருக்கணும் அப்போ எல்லாம் கண்ணு தெரியாம போய்டுச்சு போல :-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஜோக்குகளுக்கு லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது..

நம்பள்கி said...

வௌவால் அய்யா அண்ட் கம்பனி!

நம்பள்கி அறிவாளி அல்லவெ அல்ல! நான் ஒரு ஒரு அறிவிலி என்றும் வைத்துக் கொள்ளாம். ஆனால், காட்டாயம் "பாக்கியராஜ் மாதிரி ஒரு அடி முட்டாள்" அல்ல! அல்லவே அல்ல!

எந்த ஜோக் எழுதுவதறக்கும் ஒரு அடிப்பபடை அறிவு வேண்டும்; அதை பாக்யராஜிடம் எதிர்பார்த்து என் தவறு! ஏனென்றால், அவரும், தமிழ் நாட்டில் இருக்கும் 76 விழுக்காடு முட்டாளில் ஒருவர்.

மற்றும் ஒரு முட்டாள் அந்த 76 விழுக்காடு முட்டாள் மக்களுக்கு எழுதிய ஜோக் என்று நான் எடுத்துக் கொள்கிறேன்!

பெங்களூர் இரவிச்சந்திரன் said...

..விரக்தியிலும், துர்நாற்றத்தாலும்...

விந்து துர்நாற்றமா?