மூத்த வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஃபேஸ்புக்கில் கூறியுள்ளது..
எம்.ஜி.ஆர்., அவரிடம் ஒருநாள்..'தினமும் என் வீட்டில குறைஞ்சது ஐம்பது, அறுபது இலைங்க விழுது.புகழின் உச்சியில் இருக்கிறேன்..ஆனாலும் இரண்டு குறைகளை போக்கிக்கவே முடியல.ஒண்ணு, "குழந்தைங்க வாரிசு இல்லாத குறை' என்று சொல்ல..
இடைமறுத்த வசனகர்த்தா, ":ஏன் காமராஜருக்குக் கூட வாரிசு இல்ல"
அதற்கு எம்.ஜி.ஆர்.,' அப்படி இல்ல..அவருக்கு கல்யாணமே ஆகாத காரணத்தால் குழந்தைங்க இல்லாம போயிடுச்சு.ஆனா எனக்கு இரண்டு, மூன்று கல்யாணம் ஆகியும் ஒரு குழந்தை கூட பிறக்கல"
பெரிய பெரிய ஜோசியரை எல்லாம் ரகசியமா வீட்டுக்கு வரவழைச்சு என் ஜாதகத்தை காட்டினப்ப எல்லோரும் ஒரே மாதிரி, இது பல தார ஜாதகம்! உங்க வாழ்க்கையில பல பெண்கள் குறுக்கிடுவாங்க.அவங்களுக்கு வேண்டியதை எல்லாம் நீங்க கொடுப்பீங்க.ஆனா அவங்க யாரும் உங்களுக்கு வேண்டிய ஒரு குழந்தையைக் குடுக்க மாட்டாங்க.குடுக்கவும் முடியாது.குறை அவங்ககிட்ட இல்லை'ன்னு சொன்னாங்க.
என் அண்ணனுக்கு அத்தனைக் குழந்தைகளைக் கொடுத்த கடவுளுக்கு ஏனோ எனக்கு ஒரே ஒரு குழந்தையைக் கூட கொடுக்க மனசு வரலே!"
என்னோட அடுத்த குறை, 'நான் பெரிசா ஒன்னும் படிக்க தெரிஞ்சுக்கல.இளமையிலே பட்ட வறுமை காரணமாக அந்த வாய்ப்பு, வசதி இல்லாம போயிடுச்சு'
நடிப்பிற்கு அப்பாற்பட்டு அவரது கண்கள் நீர் நிலையானதை நேரில் அந்த வசனகர்த்தா அன்றுதான் பார்த்தாராம்.
இத்தகவலை இந்த வார பாக்யா இதழில் (மே 11-17) கேள்வி பதில் பகுதியில் பாக்கியராஜ் குறிப்பிட்டுள்ளார்.
1 comment:
பாவம் தலைவர் ஒரு டாக்டரைப் பார்த்கிருக்கலாம்; போயும் போயி ஜோசியர்களைப் பார்த்தார்; வாழ்கையை இழந்தார்.
இது எல்லோருக்கும் ஒரு பாடம்!
Post a Comment