Saturday, October 27, 2012

நிருபர்களை நாய் எனத் திட்டிய விஜய்காந்த்...





செ‌ன்னை ‌விமான‌ ‌நிலைய‌த்‌தி‌‌ற்கு வ‌ந்த தே.மு.‌‌தி.க. தலைவ‌ர்க‌ள் ‌விஜயகா‌ந்‌த், நிருப‌ர்க‌ளை கெ‌ட்டவா‌ர்‌த்தைகளா‌ல் ‌‌தி‌ட்டிய ச‌ம்பவ‌ம் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

மதுரை மத்திய தொகுதி தே.மு.தி.க எம்.எல்.ஏ. ஆர்.சுந்தரராஜன், திட்டக்குடி தே.மு.தி.க எம்.எல்.ஏ. தமி‌ழ்அழக‌ன் ஆ‌கியோ‌ர் நே‌ற்று முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதாவை ச‌ந்‌தி‌த்து, தொகு‌தி ‌பிர‌ச்சனை கு‌றி‌த்து கோ‌ரி‌க்கை வை‌த்தன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ராதாபுர‌ம் தே.மு.‌தி.க. எ‌ம்.எல்.ஏ. மை‌க்கே‌ல் ராய‌ப்ப‌ன், பேராவூர‌ணி தே.மு.‌தி.க. எ‌ம்.எல்.ஏ. நடிக‌ர் அரு‌ண்பா‌ண்டிய‌ன் ஆ‌கியோ‌ர் கோ‌ட்ட‌ை‌யி‌ல் இ‌ன்று முத‌ல்வ‌ர் ஜெயல‌‌லிதாவை ச‌ந்‌தி‌த்து பே‌சின‌ர்.

ஜெயல‌லிதாவுட‌ன் ச‌ந்‌தி‌ப்பை தொட‌ர்‌ந்து தே.மு.‌தி.க. எ‌ம்.எ‌ல்.ஏ.‌க்க‌ள் 4 பே‌ரு‌ம் அ.‌தி.மு.க.‌வி‌ல் இணைய போ‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று அர‌‌சிய‌ல் வ‌ட்டார‌த்‌தி‌ல் பரபர‌ப்பாக பேச‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் மதுரை செ‌ல்வ‌த‌ற்காக செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌‌த்‌தி‌ற்கு மனை‌வி ‌பிரேம லதாவுட‌ன் தே.மு.‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் இ‌ன்று காலை வ‌ந்தா‌ர்.

அ‌ப்போது, ‌தினகர‌ன் ‌‌‌‌நிருப‌ர் ‌பாலு, விஜயகா‌ந்‌திட‌ம் ரெ‌க்கா‌ர்டு மை‌க்கை ‌நீ‌ட்டினா‌ர். இதனா‌ல் ஆ‌த்‌திர‌ம் அட‌ை‌ந்த ‌‌விஜயகா‌ந்‌த் அ‌ந்த ‌நிருபரை சரமா‌ரியாக கெ‌ட்ட வா‌ர்‌த்தைகளா‌ல் ‌தி‌ட்டினா‌ர்.

‌பி‌ன்ன‌ர், கூடி‌யிரு‌ந்த ‌நிருப‌ர்களை பா‌ர்‌த்து, சொ‌ல்லு‌ங்க சா‌ர் எ‌ன்று ‌விஜயகா‌ந்‌த் கூ‌றியது‌ம், முத‌ல்வ‌ர் ஜெயல‌‌லிதாவை தே.மு.‌தி.க. எ‌ம்.எ‌ல்.ஏ.‌க்க‌ள் ச‌ந்‌தி‌த்து பே‌சியது கு‌றி‌த்து ‌நிருப‌ர்க‌ள் கே‌‌ள்‌வி கே‌ட்டன‌ர்.

இத‌ற்கு ப‌தி‌‌ல் அ‌ளி‌க்காத ‌விஜயகா‌ந்‌த், ‌மி‌ன்சார‌ம், டெ‌ங்கு ப‌த்‌தி பேசுவோ‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர். அ‌ப்போது, சூ‌ரிய ‌மி‌ன்ச‌க்‌தி மூல‌ம் 3000 ஆ‌யிர‌ம் ‌மெகாவா‌ட் ‌மி‌‌ன்சார‌ம் தயா‌ரி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று முத‌ல்வ‌ர் அ‌றி‌வி‌த்து‌ள்ளாரே எ‌ன்று ஒரு ‌நிருப‌ர் ப‌தி‌ல் அ‌ளி‌த்தா‌ர்.

இதனா‌ல் மேலு‌ம் ஆ‌த்‌திர‌ம் அடை‌ந்த ‌விஜயகா‌ந்‌த், அ‌ந்த அ‌ம்மா‌விட‌ம் போ‌ய் கேளுடா எ‌ன்று கோபமாக பே‌சி‌வி‌ட்டு மன‌ை‌வியுட‌ன் நட‌ந்து செ‌ன்றா‌ர்.

‌நிருப‌ர்க‌ள் ‌பி‌ன் தொட‌ர்‌ந்து செ‌ன்று கே‌ள்‌வி கே‌ட்க முய‌ன்றா‌ல் ஆ‌த்‌திர‌‌த்‌தி‌ன் உ‌ச்‌சி‌க்கே செ‌ன்ற ‌விஜயகா‌ந்‌த், நா‌ய்... நா‌ய்... எ‌ன்று ‌நிருப‌ர்களை ‌‌தி‌ட்டி‌வி‌ட்டு ‌விமான ‌நிலைய‌த்‌திற‌்கு‌ள் ‌விஜயகா‌ந்‌த் செ‌ன்று ‌வி‌ட்டா‌ர்.

(வெப் துனியா)

டிஸ்கி- தி மு க விற்கு பிரதான எதிர்க்கட்சி ஆகும் வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளது

4 comments:

வவ்வால் said...

ஹி...ஹி இதையே விசய காந்த் டிவிட்டரில் ஒரு நிருபரைப்பார்த்து ,அதுவும் செவப்பா இருக்கிற பெண் நிருபரை பார்த்து திட்டி இருந்தால் இன்னேரம் கைது செய்து ,புழலில் சிக்கன் சாப்பிட வைத்திருப்பாங்க :-))

பேச்சு சுதந்திரம் இருக்கு அவருக்கு ,பேசுறார்ன்னு இப்போ ஒன்னியும் செய்ய முடியதே :-))

IlayaDhasan said...

விடீயோவை நன்றாகப் பாருங்கள்...வெப் துனியா செய்தி முக்கால்வாசி திரித்து எழுதப்பட்டது விளங்கும்!

மு.சரவணக்குமார் said...

http://www.youtube.com/watch?v=T1mMaevRC8M

Unknown said...

இன்றைய முக்கிய செய்தியே விஜயகாந்த் -செய்தியாளர்கள் மோதல்தான் .

விஜயகாந்த் செய்தியாளர்களை தரக்குறைவாக பேசியது மிகவும் தவறு .அதேபோல் செய்தியாளர்கள் செவ்வி தர மறுப்பவரை விடாமல் சென்று கடுப்படிப்பதும் எந்த பிரச்னை இருந்தாலும் தங்களுக்கு செவ்வி கொடுப்பதுதான் ஒருவரின் தலையாய கடமை என்பதுபோலும் விரட்டி ,நோகடிக்கும் கேள்விகளால் தாக்குவதும் அதே அளவு தவறு.
செய்தியாளர்கள் விஜயகாந்தை விரட்டி மோதியது போல் முந்தைய எதிர்கட்சித்தலைவர் ஜெயலலிதாவை தங்களுக்கு பதில் சொல்ல மோதியது உண்டா?
அவர்களும் ஆள் பார்த்துதான் செயல்படுகிறார்கள்.அல்லது ஆளுங்கட்சி க்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் .
ஏற்கனவே தனது கட்சிக்காரர்கள் ஓடியதால் கோபத்தில் ,அவமானத்தில் இருப்பவரை சீண்டுவது ,அவர் பதில் தர மறுக்கும்போது கண்டிப்பாக தந்தே ஆகவீண்டும் என்பதும் மனிதாபிமானமற்ற செயல்கள்தான்.இதில் விஜயகாந்தை கண்டித்து சாலைமறியல் வேறாம் .செய்தியாளர்கள் இன்றையை நிலையில் அதிமுக அல்லது முதல்வர் புகழ் பாடும் பஜனை கோஷ்டிகளாகிவிட்டனர் .

அது உண்மையும் கூ ட .
முன்பு ஆளுங்கட்சி திமுகவை அதன் செயல்பாடுகளை கண்டித்து பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிட்டனர்.
இரண்டு மணிநேர மின்தடையை கோபாவேசமாக கண்டித்து எழுதினர்.மின்தடைக்கு கருணாநிதியும்-ஆற்காடு வீராசாமியும்தான் காரணம் என்றனர்.
இன்று ஜெயா அரசில் ஒரு நிகழ்வுகூட கண்டிக்கும் அளவு நடக்கவே இல்லையா?15 மணி நேர மின்தடை அவர்களையோ ,மக்களையோ பாதிக்கவே இல்லையா?
சமச்சீர் கல்வி,தலைமை செயலகம் ,அண்ணா நுலகம் ,பேருந்து கட்டண உயர்வு,விலைவாசி உயர்வு,12-18 வரையிலான அரிசி வகைகள் இன்று 32-45 ஆனது எல்லாம் அவர்களை பாதிக்கவே இல்லையா?


அதை பற்றி செய்திகள் மக்களின் போராட்டங்கள் செய்திகளாக ஏன் வருவதில்லை.முக்கியத்துவம் ஏன் தரப்படவில்லை?
ஜெயா அரசில் 17 மணிநேரம் மின்தடைக்கு காரணம் ஜெயா அரசின் இயங்காமை காரணம் அல்லவாம்.மின் இல்லாமைதான் காரணமாம் இப்படி அறிய கண்டு பிடிப்பு விளக்கம் தந்தது நமது எம்.ஜி.ஆர் அல்ல.நிமிர்ந்த நடை கொண்ட தினமணி.
அதற்கும் தினமலருக்கும் இன்றுவரை திமுக தான் செய்தி கிடங்கு,கருணாநிதிதான் கருத்துப்பட[கார்டூன் ]களஞ்சியம்.
ஜெயைப் பற்றியோ -அதிமுக அரசைப்பற்றியோ இதுவரை இந்த இதழ்களில் கண்டிப்பு செய்தியோ -கார்டூன்களோ வந்ததில்லை.வரப்போவதுமில்லை.
இப்படி இயங்கும் செய்தியாளர்களுக்கு எதற்காக பிற தலைவர்கள் செவ்வி கொடுக்க வேண்டும்.?
அவர் செவ்வி கொடுத்தால் அதை அவரை கிண்டல டித்துதான் பிரசுரிப்பார்கள்.
விமான நிலையத்தில் விஜயகாந்திடம் ஒரு செய்தியாளர் கேட்ட கேள்வியே அவர்களின் இதழிய அறிவுக்கு கட்டியங்கூறும்
"உங்கள் தொகுதி ரிஷிவந்தியத்தில் மின்தடை 15 மணி நேரமாக உள்ளதே அதை தடுக்க என்ன செய்துள்ளீர்கள்?"
இது கடுப்படிக்கும் கேள்வி மட்டுமல்ல அந்த செய்தியாளரின் முட்டாள் தனமான அறிவையும் பறை சாற்றுகிறது அல்லவா?
இது யாரிடம் கேட்க வேண்டிய கேள்வி ?
யாரிடம் கேட்கிறார்?
இவர் எல்லாம் செய்தியாளராக எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
இவர் விஜயகாந்தை கோபமுறச்செய்யவே இப்படி கேட்கின்றார் .வேண்டுமென்றே கேட்கின்றார்.
இதற்கெல்லாம் சுயமரியாதை உள்ள எவருமே பதில் சொல்ல கோபமுறவே செய்வார்கள்.
இவர்கள் நடுநிலை செய்தியாலர்கலகத் தெரியவில்லை.அதிமுக அடிவருடிகளாகவே -அரசு அளிக்கும் விளம்பரத்துண்டுக்களுக்காக அலைபவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்றே தெரிகிறது.
அதற்கு விஜயகாந்தை பலிகடா ஆக்குகிறார்கள்.
உண்மையான பத்திரிகைத்தனம் காணாமல் போய்விட்டது .
செவ்வி தர மறுப்பவர்களை விரட்டி சென்று கேவலப்படுத்தும் பத்திரிகையாளர்கள் மீது விஜயகாந்துதான் வழக்கு தொடுக்கவேண்டும். -----THANKShttp://suransukumaran.blogspot.com