Friday, November 16, 2012

பிரதமர் அலுவலகமும்..கடிதங்களும்...




அலுவலகத்தில் நுழைந்த பிரதமர் வாசலில் சிலர் நிற்பதைப் பார்த்து, தன் செயலரிடம்,'அவர்கள் எல்லாம் யார்?' என வினவ..

அதற்கு செயலர், 'அவர்கள் பழைய பேப்பர்களை எடுக்கும் வியாபாரிகள்' என்கிறார்.

"ஓகோ..அப்படியா..ஆமாம் ..அதிலும் சில்லறை வர்த்தகத்திற்கு அந்நிய முதலீடை பயன்படுத்தலாமா?' -பிரதமர்.

'அந்த அளவு...வியாபாரம்.." என செயலர் இழுக்க..

'அலுவலகத்திற்கு உள்ளே வந்து பாரும்...தமிழக முதல்வர், மற்றும் கலைஞரிடம் இருந்து வந்த கடிதங்கள் மலை போல குவிந்திருக்கு' - பிரதமர்.

செயலர் உடன், 'ஐயா ..மறந்து விட்டேன்..இன்று கூட நாடார் சமுகத்தை இழிவுபடுத்தி சி.பி.எஸ்.இ., பாடத்தில் உள்ளதை நீக்க வேண்டும்..என தமிழகத்திலிருந்து மூன்று கடிதங்கள் வந்திருக்கு.

'மூன்றா..ஒன்று முதல்வர், மற்றொன்று கலைஞர்..மூன்றாவது யாரிடமிருந்து..?"

"அந்த மூன்றாவது கடிதம்..இன்று வரை தமிழக  சட்டசபையில்  எதிர்க்கட்சி தலைவராய் இருக்கும் விஜய்காந்த் என்பவரிடமிருந்து'

'அப்படியா..அப்போ..இனி தமிழகத்திலிருந்து இனி வரும் கடிதங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்....நான் சொன்னது சரி..அதிலும் அந்நிய முதலீட்டுக்கு ஏற்பாடு பண்ணவும்'

செயலர் என்ன செய்வது என அறியாது..வெளிநாட்டில் பழைய காகிதங்கள் வாங்கும் நிறுவனம் உள்ளதா? என ஆராயத் தொடங்கினார்.


2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

சமகால சமூக நிலையையும் அரசின் செயல்பாட்டையும் சிந்திக்கும்விதமாகச் சொன்னீர்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி முனைவர்.இரா.குணசீலன்