Friday, November 27, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (27-11-09)

ஒரு செடியின் வேர் மண்ணுக்குள்.அதன் தாகம் நீருக்குள்..அத சுவாசம் காற்றுக்குள்..அதன் ஏக்கம் சூரியன் என்ற நெருப்புக்குள்..அதன் இலட்சியம் ஆகாயம் நோக்கி....ஒரு செடிக்குள் ஐந்து பூதங்களும்.

2)உலகம் முழுதும் மதுபானங்கள் வாங்க ஒரு ஆண்டில் மக்கள் செலவிடும் தொகை 1,26,000 கோடி ரூபாய்.சிகரெட்,சுருட்டு என போதை வஸ்துக்களுக்காக ஒரு ஆண்டில் செலவிடும் தொகை 1,02,000 கோடி ரூபாய்.அபின்,கஞ்சா,ஓபியம் என சட்ட விரோத போதைப் பொருள்கள் வாங்க உலகம் செலவிடும் தொகை 75,000 கோடி ரூபாயாம்.

3)யார் என்ன சொன்னால் என்ன..உண்மையில் நம்மிடம் தவறு இல்லாதவரை..யாருடைய விமரிசனத்திற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.பிறர் ஒன்றைச் சொல்வார்களே என்று கவலைப்பட்டுக் கொண்டிராமல் நம் மனதிற்கு சரியென்று தோன்றுவதைத் தீர்மானமான முடிவுடன் செய்ய வேண்டும்.

4)கவிதை என்ற சொல்..பொருளுடைய சொல்.அதிலிருந்து ஒரு எழுத்தை எடுத்துவிட்டாலும் பொருள் கொடுக்கும் சொல்.'க' என்ற எழுத்தை எடுத்தால்..'விதை' கிடைக்கும்.'வி'யை எடுத்து விட்டால்
கதை கிடைக்கும்.'தை'யை எடுத்து விட்டால் கவி கிடைப்பான். - கலைஞர்

5)ஒரு ஜோக்
ஊரைச் சுற்றி கடன் வாங்கிட்டியே இனிமே என்ன பண்ணப்போறே?
ஊருக்கு நடுவே வாங்குவேன்

20 comments:

கோவி.கண்ணன் said...

//5)ஒரு ஜோக்
ஊரைச் சுற்றி கடன் வாங்கிட்டியே இனிமே என்ன பண்ணப்போறே?
ஊருக்கு நடுவே வாங்குவேன்//

:) கடவாய் ஜோக் !

அத்திரி said...

மொத மேட்டர் வித்தியசமானது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
கோவி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அத்திரி

Anonymous said...

//சட்ட விரோத போதைப் பொருள்கள் வாங்க உலகம் செலவிடும் தொகை 75,000 கோடி ரூபாயாம்.//

அம்மாடி. அதான் உலகம் உருப்படலை.

vasu balaji said...

அத்தனையும் அருமை. அதும் முதல் ஒன்னு புதுமை. :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
சின்ன அம்மிணி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
அத்தனையும் அருமை. அதும் முதல் ஒன்னு புதுமை. :)//

நன்றி வானம்பாடிகள்

இராகவன் நைஜிரியா said...

//
5)ஒரு ஜோக்
ஊரைச் சுற்றி கடன் வாங்கிட்டியே இனிமே என்ன பண்ணப்போறே?
ஊருக்கு நடுவே வாங்குவேன் //

தன்னம்பிக்கையின் உச்ச கட்டம் என்பது இதுதானோ..

// 3)யார் என்ன சொன்னால் என்ன..உண்மையில் நம்மிடம் தவறு இல்லாதவரை..யாருடைய விமரிசனத்திற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.பிறர் ஒன்றைச் சொல்வார்களே என்று கவலைப்பட்டுக் கொண்டிராமல் நம் மனதிற்கு சரியென்று தோன்றுவதைத் தீர்மானமான முடிவுடன் செய்ய வேண்டும்.//

இப்படி நினைச்சுதான் நானும் வலைப்பூ வச்சு, அதுல எழுதறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இராகவன் நைஜிரியா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இராகவன் நைஜிரியா said... இப்படி நினைச்சுதான் நானும் வலைப்பூ வச்சு, அதுல எழுதறேன்.//

:-)))

க.பாலாசி said...

//2)உலகம் முழுதும் மதுபானங்கள் வாங்க ஒரு ஆண்டில் மக்கள் செலவிடும் தொகை 1,26,000 கோடி ரூபாய்.சிகரெட்,சுருட்டு என போதை வஸ்துக்களுக்காக ஒரு ஆண்டில் செலவிடும் தொகை 1,02,000 கோடி ரூபாய்.அபின்,கஞ்சா,ஓபியம் என சட்ட விரோத போதைப் பொருள்கள் வாங்க உலகம் செலவிடும் தொகை 75,000 கோடி ரூபாயாம்.//

ஆனா பசின்னு வந்து கேட்கிறவனுக்கு கொடுக்க 1 ரூபாய் நாணயம் கூட பாக்கெட்டில் இருக்காது. (கொடுமை)

நல்ல இடுகை....கவிதையை பிரித்தெடுத்த விளக்கமும் அருமை....

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பாலாசி

மணிகண்டன் said...

கவிதையில் க மற்றும் வி எடுத்துவிட்டால் கலைஞரின் தமிழ் புத்தாண்டு கிடைக்கும் :)- நல்ல சுண்டல்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மணிகண்டன்

மங்களூர் சிவா said...

//5)ஒரு ஜோக்
ஊரைச் சுற்றி கடன் வாங்கிட்டியே இனிமே என்ன பண்ணப்போறே?
ஊருக்கு நடுவே வாங்குவேன்//

:))))))))))

மங்களூர் சிவா said...

//2)உலகம் முழுதும் மதுபானங்கள் வாங்க ஒரு ஆண்டில் மக்கள் செலவிடும் தொகை 1,26,000 கோடி ரூபாய்.சிகரெட்,சுருட்டு என போதை வஸ்துக்களுக்காக ஒரு ஆண்டில் செலவிடும் தொகை 1,02,000 கோடி ரூபாய்.அபின்,கஞ்சா,ஓபியம் என சட்ட விரோத போதைப் பொருள்கள் வாங்க உலகம் செலவிடும் தொகை 75,000 கோடி ரூபாயாம்.//

:((((

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிவா

Deepa said...

சுவையான சுண்டல்!


//உலகம் முழுதும் மதுபானங்கள் வாங்க ஒரு ஆண்டில் மக்கள் செலவிடும் தொகை 1,26,000 கோடி ரூபாய்.சிகரெட்,சுருட்டு என போதை வஸ்துக்களுக்காக ஒரு ஆண்டில் செலவிடும் தொகை 1,02,000 கோடி ரூபாய்.அபின்,கஞ்சா,ஓபியம் என சட்ட விரோத போதைப் பொருள்கள் வாங்க உலகம் செலவிடும் தொகை 75,000 கோடி ரூபாயாம்.
//

:-((((((((

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Deepa