Saturday, November 14, 2009

கம்பனும்...தமிழும்...

ஒரு முறை கம்பனால் அவமானம் அடைந்த சோழ மன்னன்..பதிலுக்கு அவரை அவமானப்படுத்த காத்திருந்தார்.தன் எண்ணத்தை பொன்னி என்ற விலைமகளிடம் சொன்னார்.உடன் அவள் 'கம்பர் கையால்..அவர் எனக்கு அடிமை என எழுதி வாங்கி விடுகிறேன்' என்றாள்.

பின் தன் வேலைக்காரியை கம்பனிடம் அனுப்பி...உடன் அழைத்து வரும்படிக் கூறினாள்.கம்பரும்...என்னவோ..ஏதோ..என அங்கு சென்றார்.

அவரை அன்புடன் வரவேற்றவள்..அவரை கட்டித் தழுவினாள். கம்பர் 'பெண்ணே..நீ அரசர்க்குரியவவள்..என்னை அணைப்பது குற்றம்" என்றார்.ஆனால் பொன்னி அதை செவிசாய்க்கவில்லை. 'இதைத் தவிர வேறு நீ எதைச் சொன்னாலும் கேட்கிறேன்' என்றார்.

அவ்வாறாயின்..தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை..என எழுதித் தாருங்கள்..என்றாள்.

கம்பனும்..அப்படியே எழுதிக் கொடுத்துவிட்டு வீடு சென்றார்.

பொன்னி அந்த ஓலையை மன்னரிடம்..தர..மன்னன் மகிழ்ந்தான்.

மறுநாள் கம்பனிடம் அவ்வோலையைக் காட்டி..இது நீர் எழுதியது தானே..என்றான் மன்னன்.

ஆமாம் என்றார் கம்பர்.

உடன் மன்னன் ஒரு பணியாளிடம் அதைக்கொடுத்து உரக்க படிக்கச் சொன்னான். பணியாளும் 'தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை' என உரக்கப் படித்தான்.இதைப்பார்த்து கம்பன் அவமானத்தால் கூனிக் குறுகுவார் என எதிர்ப்பார்த்த மன்னன் ஏமாற்றம் அடைந்தான்.

'கம்பரே..நீர் தாசி பொன்னிக்கு அடிமையா?' என்றான் மன்னன்.

ஆமாம்..அதில் என்ன ஐயம்...-கம்பர்.

"பார் புகழும் புலவன் நீர்..கேவலம்..ஒரு தாசிக்கு அடிமை என எழுதிக்கொடுத்துள்ளீர்களே' என ஏளனமாக மன்னன் வினவ..கம்பனோ...

'நான் ஏன் வெட்கப்பட வேண்டும்...அதற்காக பெருமை அல்லவா பட வேண்டும்...அதன் உண்மைப் பொருள் அறிவீரா?' என்றார்.

மன்னா! தா-தாயாகிய , சி- அழகிய. பொன்னிக்கு-திருமகளுக்கு ...அதாவது தாயாகிய அழகிய திருமகளுக்குக் கம்பனாகிய நான் அடிமை..என்று விளக்கம் தந்தார்.

கம்பனை..அவமானப் படுத்த நினைத்த மன்னன் தலை கவிழ்ந்தான்.

(மீள்பதிவு )

16 comments:

dondu(#11168674346665545885) said...

பார்க்க: http://dondu.blogspot.com/2008/07/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
டோண்டு சார்..
என்.கே.அஷோக்பரன்

vasu balaji said...

கம்பரைப் பற்றி புதியதாக அறிந்துகொண்டேன். நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மொழி விளையாட்டு பிரமாதம்..,

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி SUREஷ்

மங்களூர் சிவா said...

ஓ தாசிக்கு இப்பிடி ஒரு அர்த்தமா?

நல்லது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிவா

அத்திரி said...

ஆஹா ஐயா நல்ல அர்த்தம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அத்திரி

ஷைலஜா said...

கம்பன் என்றதும் ஓடிவந்தேன். நல்ல இடுகை இது பாராட்டுக்கள் ராதா க்ருஷ்ணன்.

Prathap Kumar S. said...

கம்பர் வீட்டு கட்டுதறியும் கவிபாடும்...
சுவாரஸ்யமாக இருந்தது பகிர்வுக்கு நன்றி ராதாகிருஷ்ணன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஷைலஜா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நாஞ்சில் பிரதாப்

velji said...

சுவராஸ்யமான,நயமான தகவல்..நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி velji