Tuesday, November 17, 2009

கேபிளாரின் பதிவும்..அதற்கான பதிலும்..

இணையதள பதிவாளர்கள் அனைவருக்குள்ளும், அடுத்த பதிவர்கள் மீது இனம் புரியா நட்பு உள்ளது..இந்த நட்பு எப்படி ஏற்பட்டது என்பதை சற்று சிந்தித்தோமானால்..ஒவ்வொருவர் முகம் கூடப் பார்த்ததில்லை..ஆனால் அவரவர் எழுத்துத் திறமை மற்றவர்களை நட்பு பாராட்ட வைத்தது.ஒவ்வொருவர் மீதும் பாசம்,நட்பு கொள்ளச் செய்து விட்டது.

எழுத்து நம்மிடம் மனித நேயத்தை வளரவைத்து விட்டது.அதனால்தான் தொடர்ந்து பதிவிடுபவர்கள் ஒரிரு நாட்கள் பதிவிடவில்லையெனில் ..அவருக்கு என்ன ஆயிற்றோ என மனம் பதைக்கிறது.ஒருவருக்கு ஏதேனும்சிரமம் என்று பதிவு வந்தால்..ஆறுதல் கூறி பல பின்னூட்டங்கள்.

என்னே எழுத்தின் மகிமை..

அதனால்தான் சிங்கை நாதன் உடல்நிலைக் குறித்து தெரிந்ததும்..நர்சிம் மணிக்கட்ட தொடர்ந்தனர் பதிவர்கள்.'இளா' அவர்களிடம் இது பற்றி ஒரு முறை பேசிய போது அவர் என்னிடம் சொன்னார் 'சொன்னால் நீங்க நம்பமாட்டீங்க..சிங்கைநாதன் பற்றிக் கேள்விபட்டதுமே..பதிவுலகிற்கு சம்பந்தமில்லா ஒரு நண்பர்..தன்னை வெளிக்காட்டாமல் ஆயிரம் டாலர் உதவினார்' என்றார்.(என் வலைப்பூவில் ஆன்லைனிலேயே என்னால் முடியாத ஒரு மாற்றத்தைச் செய்துக் கொடுத்தார் இளா)

ஆம் மனித நேயம் சாகவில்லை.

இனி கேபிள் சங்கர் பற்றி..அவர் தந்தை அமரர் ஆனதும் பதிவுலக நண்பர்கள் வந்திருந்து..அவருக்கு ஆறுதல் சொன்னதையும்..உதவியதையும் இந்த பதிவில் எழுதி இருந்தார்.சற்று யோசித்தால் அப்பதிவே தேவையற்றது என்றே தோன்றுகிறது.நண்பர்களிடையே இது தங்களது கடமை என்று எண்ணியதின் வெளிப்பாடே இது..இதற்காக அவர் உணர்ச்சிவசப்படத் தேவையில்லை.

அவருக்கு மட்டுமன்றி 'நட்பு' பற்றி வள்ளுவன் சொன்ன பத்துக் குறள்களின் உரையை அனைவருக்கும் இவ்வேளையில் நினைவூட்டுகிறேன்

1.நட்பு கொள்வது போல அருமையானது இல்லை.நம் பாதுகாப்புக்கும்
அது ஏற்ற செயலாகும்.

2.அறிவுடையார் நட்பு வளர்பிறை போல வளர்ந்து முழு நிலவாகும்.
அறிவற்றவர் நட்பு தேய்பிறையாய் குறைந்து மறையும்.

3.படிக்கப்படிக்க நூல் இன்பம் தரும்...பழகப்பழக பண்புடையார்
நட்பு இன்பம் தரும்.

4.நட்பு என்பது சிரித்து மகிழ மட்டும் அல்ல..நண்பர்கள் வழி மாறும் போது
இடித்து திருத்துவதற்கும் ஆகும்.

5.நட்புக்கொள்ள ஒருவருடன் தொடர்பும்..பழக்கமும் இருக்க வேண்டும் என்பதல்ல..
அவருடைய ஒத்த மன உணர்ச்சியே போதுமானது.

6.முகமலர்ச்சி மட்டும் நட்பு அல்ல..நெஞ்ச மலர்ச்சியும் உண்மையான நட்புக்கு தேவை.

7.அழிவைத் தரும் தீமையை நீக்கி..நல்ல வழியில் நடக்கச்செய்து அழிவு காலத்தில் உடனிருந்து
துன்பப்படுவதே நட்பாகும்.

8.அணிந்திருக்கும் உடை நெகிழும்போது..கைகள் உடனடி செயல்பட்டு சரி செய்வதுபோல
நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கிக் களைவதே சிறப்பு.

9.மன வேறுபாடு கொள்ளாது தன்னால் முடியும் போதெல்லாம் உதவி செய்து நண்பனை
தாங்குவதே நட்பின் சிறப்பாகும்.

10.நண்பர்கள் ஒருவருக்கொருவர்..இவர் இப்படி..நான் அப்படி என செயற்கையாக புகழும்போது
நட்பின் பெருமை குறையும்.

22 comments:

இராகவன் நைஜிரியா said...

நல்ல இடுகை.

அவரின் நிலையில் இருந்து அவரின் உணர்ச்சிகளை கொட்டி விட்டார்.

நீங்கள் சொல்லியது போல், முன் பின் அறியாமலேயே, நமக்குள் ஒரு பாசப் பிணைப்பு ஓடிக் கொண்டுதான் இருக்கின்றது.

நன்றி TVR

செ.சரவணக்குமார் said...

பதிவு பிடித்திருந்தது நண்பரே. வாழ்க நம் நட்பு..

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல பதிவு

நீங்கள் சொல்லியது போல், முன் பின் அறியாமலேயே, நமக்குள் ஒரு பாசப் பிணைப்பு ஓடிக் கொண்டுதான் இருக்கின்றது.

repeatee ....

vasu balaji said...

நன்றி சொல்வது அவர் பண்பு. நீங்கள் சொன்னபடி இருப்பது நம் பண்பு இல்லையா சார்? எங்கள் எல்லோர் சார்பிலும் இன்னும் இறுக்கி விட்டீட்கள் நட்பை.

நசரேயன் said...

உண்மை

ramalingam said...

நல்ல பதிவு.

பா.ராஜாராம் said...

fantastic tvr!

பீர் | Peer said...

அதனாலதான் சார், எத்தனைபேர் அடிச்சுக்கிட்டாலும் இத விட்டு போக முடியல.

சூப்பர்

iniyavan said...

அருமையான பதிவு சார் உங்களின் இந்த பதிவு.

அதே சமயம் அதே திருவள்ளுவர்தான், "நன்றி மறப்பது நன்றன்று" ன்னும் சொல்லி இருக்கார். அதனால கேபிள் இந்த குறள் போல பதிவு எழுதி நன்றியை தெரிவிச்சுருக்கார்னு நினைச்சுக்கலாம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இராகவன் நைஜிரியா said...
நல்ல இடுகை.

அவரின் நிலையில் இருந்து அவரின் உணர்ச்சிகளை கொட்டி விட்டார்.

நீங்கள் சொல்லியது போல், முன் பின் அறியாமலேயே, நமக்குள் ஒரு பாசப் பிணைப்பு ஓடிக் கொண்டுதான் இருக்கின்றது.

நன்றி TVR//

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி ராகவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// செ.சரவணக்குமார் said...
பதிவு பிடித்திருந்தது நண்பரே. வாழ்க நம் நட்பு..//
வாழ்க..வளர்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்ல பதிவு

நீங்கள் சொல்லியது போல், முன் பின் அறியாமலேயே, நமக்குள் ஒரு பாசப் பிணைப்பு ஓடிக் கொண்டுதான் இருக்கின்றது.

repeatee ....//

வருகைக்கு நன்றி

கோவி.கண்ணன் said...

:)

நாம கூட பார்க்காமல் நட்பு கொண்டோம் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
நன்றி சொல்வது அவர் பண்பு. நீங்கள் சொன்னபடி இருப்பது நம் பண்பு இல்லையா சார்? எங்கள் எல்லோர் சார்பிலும் இன்னும் இறுக்கி விட்டீட்கள் நட்பை.//

நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
நசரேயன்
ramalingam
பா.ராஜாராம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பீர் | Peer said...
அதனாலதான் சார், எத்தனைபேர் அடிச்சுக்கிட்டாலும் இத விட்டு போக முடியல.

சூப்பர்//

உண்மை Peer

T.V.ராதாகிருஷ்ணன் said...

//என். உலகநாதன் said...
அருமையான பதிவு சார் உங்களின் இந்த பதிவு.

அதே சமயம் அதே திருவள்ளுவர்தான், "நன்றி மறப்பது நன்றன்று" ன்னும் சொல்லி இருக்கார். அதனால கேபிள் இந்த குறள் போல பதிவு எழுதி நன்றியை தெரிவிச்சுருக்கார்னு நினைச்சுக்கலாம்.//

உண்மைதான் உலகநாதன் நன்றியை மறக்கக்கூடாது..ஆனால் அந்த நன்றிக்கு மறு நன்றி சொல்வது ..நட்பின் இறுக்கத்தை சற்று குறைக்கும் என்றே எண்ணுகிறேன்
வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
:)

நாம கூட பார்க்காமல் நட்பு கொண்டோம் !//

இதற்கு என்ன பதிலை எதிர்பார்க்கிறீர்கள் கோவி
:-)))

velji said...

நல்ல இடுகை.வள்ளுவரையும் சபைக்கு அழைத்து வந்து விட்டீர்கள்.பெரியவர் இருக்கும் போது யார் என்ன பேச.
உறவுகளுக்கிடையில் சரியான நேரத்தில் பேசுவது அவசியமானது.அவ்விதத்தில் இப்பதிவு முக்கியமாகிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//velji said...
நல்ல இடுகை.வள்ளுவரையும் சபைக்கு அழைத்து வந்து விட்டீர்கள்.பெரியவர் இருக்கும் போது யார் என்ன பேச.
உறவுகளுக்கிடையில் சரியான நேரத்தில் பேசுவது அவசியமானது.அவ்விதத்தில் இப்பதிவு முக்கியமாகிறது.//

நன்றி velji

ஆரூரன் விசுவநாதன் said...

அருமையான பதிவு......மனித உறவுகளைப் அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்...


அருமை.................

T.V.ராதாகிருஷ்ணன் said...

///ஆரூரன் விசுவநாதன் said...
அருமையான பதிவு......மனித உறவுகளைப் அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்...


அருமை.................//

நன்றி ஆரூரன் விசுவநாதன்