Friday, November 20, 2009

காளமேகமும்..நகைச்சுவையும்..


காளமேகப்புலவர்.நகைச்சுவை மன்னர்.

ஒரு நாள் வெயில் நேரம்.புலவருக்கோ தாகம்.அப்போது மோர் விற்று வருகிறாள் ஒரு பெண்.அவளிடம் மோர் வாங்கிகிறார்.அவளோ..காசு வேண்டாம்..என் மீது ஒரு கவி பாடுங்கள் என்கிறாள்.

உடன் கவி'அம்மையே..உன் மகத்துவத்தைக் காட்டிலும்..உன் மோரின் மகத்துவம் மிகப்பெரிது.அதைப்பாடுகிறேன்..என்கிறார்.

மோரே..நீ இம்மண்ணுலகப் பிறவியா..இல்லை..இல்லை..நீ தேவலோகப் பிறவி.திருமால் 10 அவதாரம் எடுத்தார்..நீ மூன்று அவதாரம் எடுத்தாய்.திருமாலுக்கு உவமை கூறும் வகையில் பெருமை மிக்க கருமை நிற வானில் சஞ்சரித்தாய்.உனக்கு கார் என பெயர் சூட்டி மண்ணுலகிற்கு அழைத்தோம்.திருமால் மண்ணுலகில் தேவகி வயிற்றில் அவதரித்தது போல் நீயும் மண்ணுலகில் நீராய் பொழிந்தாய்.
கண்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்தாலும்..யசோதை என்ற இடையர் குல பெண்ணிடம் புகுந்தான்.நீயும் நீராய் பொழிந்து பிறந்த இடத்தில் நில்லாமல்..இந்த ஆச்சியின் குடத்தில் புகுந்தாய்.உடனே இவளும் உனக்கு மூன்றாவது பெயர் 'மோர்" என சூட்டி விட்டாள்.உன் திருநாமத்தை 'மோரோ..மோர்..'என பன்முறை ஓதி பாராட்டுகிறாள்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகிப் பிறவுமாகி நிற்கும் இறைவனை எப்படிப் பாராட்டுவேன் என்கிறார் மணிவாசகர்.காராகி,நீராகி,மோராகி நிற்கும் உன்னை எப்பேரால் வாழ்த்துவேன் என்கிறார் காளமேகம்.அம்மையே..பிடியுங்கள் உங்கள் மோர் மீது என் ஆசுகவி என்கிறார்.

கார் என்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது
நீர் என்று பேர்படைத்தாய் நீணிலத்தில் வந்ததற்பின்
வார் ஒன்று பூங்குழலார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே

16 comments:

vasu balaji said...

காளமேகம் காலத்துலயே கலப்படமா. சபாசு. அருமையான பாடலுக்கு நன்றி உங்களுக்கு,

சிநேகிதன் அக்பர் said...

வஞ்சப்புகழ்ச்சி அணியில் அழகான பாடல்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
வஞ்சப்புகழ்ச்சி அணியில் அழகான பாடல்.//

நன்றி அக்பர்

Jawahar said...

காளமேகம் ரசிகர் மன்றத்தின் சார்பில் நன்றி.

http://kgjawarlal.wordpress.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Jawahar

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல பகிர்வு..

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி முனைவர்.இரா.குணசீலன்

SHALINIPRIYAN said...

இதை நான் ஈர்கனவே 10 ம வகுப்பில் படித்து விட்டேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி SHALINIPRIYAN

மங்களூர் சிவா said...

ஓ.

Subramanian said...

மூன்றாவது அடியானது"வாரா மென்முலை ஆய்ச்சியர் கை வந்தற்பின்"என்றுதான் நான் படித்திருக்கிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மங்களூர் சிவா said...
ஓ.
//

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...
மூன்றாவது அடியானது"வாரா மென்முலை ஆய்ச்சியர் கை வந்தற்பின்"என்றுதான் நான் படித்திருக்கிறேன்//

தனிப்பாடல் திரட்டு..காளமேகப் புலவர் பாடல் 134ல் நான் எழுதியுள்ளவாறுதான் உள்ளது.
வருகைக்கு நன்றி திண்டுக்கல் சர்தார்

பத்மநாபன் said...

காளமேகப் புலவரின் கவிதை நன்று.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பத்மநாபன்