Sunday, November 22, 2009

மனிதா..எறும்பாய் இரு..


எறும்புகளிடமிருந்து நாம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.ஒருவரின் எடை 75 கிலோ என்றால் அவரால் அதிகப் பட்சம் 40 கிலோ எடையைத்தான் தூக்க முடியும்.ஆனால் எறும்புகள் தன்னைவிட பல மடங்கு எடையை சர்வ சாதாரணமாக தூக்கிக் கொண்டு ஓடும் வல்லமை வாய்ந்தவை.அவை அப்படி ஒடும் போது சிறு தடையை நாம் ஏற்படுத்தினாலும்..அதைப் பற்றிக் கவலைப் படாமல் அந்த தடையின் மீது ஏறியோ அல்லது தடையை சுற்றிக் கொண்டோ தன் இலக்கை நோக்கி செல்வதில் குறியாய் இருக்கும்.இச்சமயம் கவிஞர் மருதகாசியின் பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது..

எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே - உன்னை
இடற வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா - நீ
அஞ்சாமல் கடமையிலே கண் வையடா

தவிர எறும்புகளின் அணி வரிசை..அடடா..இவர்களுக்கு ஒழுக்கத்தை யார் கற்றுக் கொடுத்தார்கள்?

அவை வசிக்கக் கட்டும் புற்று..எறும்பில் கூட சிவில் எஞ்சினீயர்,ஆர்கிடெக்ட் உண்டா என அதிசய வைக்கும். வெளியே எத்தனை உஷ்ணமாய் இருந்தாலும் உள்ளே குளிமையாய் இருக்கும்.எறும்புகள்
திட்டமிடுவதிலும் கில்லாடிகள்.மழைகாலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே சேமித்து வைக்கும்.இப்படி திட்டமிடுதல் எவ்வளவு மனிதர்களிடம் இருக்கிறது? எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் ஊக்கம் வேண்டும் உயர்வுக்கு.இதையே வள்ளுவர்..

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய உயர்வு

என்கிறார்.தண்ணீர் எந்த அளவு குளத்தில் உள்ளதோ அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் அவ்வளவே இருக்கும்..அதுபோல மனிதரின் வாழ்க்கை உயர்வு அவர் மனதில் கொண்டுள்ள ஊக்கத்தின் உயர்வே இருக்கும்.

ஊக்கத்துடன் செயல்படும் போது..நடுவே சோம்பேறித்தனம் வரக்கூடாது.மனிதனுக்கு அதைவிட பெரிய வியாதி எதுவும் இல்லை எனலாம்.எந்த ஒரு காரியத்தையும் தள்ளிப் போடாமல் உடனே செய்ய வேண்டும்.முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பித் திரிபவர்கள் வாழ்வில் இகழ்ச்சிக்கு ஆளாவர்கள்.இதையே..வள்ளுவர்

இடிபுரிந் தெள்ளஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்

என்கிறார்.

எறும்பு பற்றி பாரதி என்ன சொல்கிறார்..

சிற்றெறும்பைப்பார் - எத்தனை சிறியது
அதற்குள்ளே கை கால் வாய் வயிறு எல்லா
அவயங்களும் கணக்காக வைத்திருக்கிறது
யார் வைத்தனர் - மகாசக்தி
அந்த உறுப்புகளெல்லாம் நேராகவே தொழில் செய்கின்றன
எறும்பு உண்ணுகிறது..உறங்குகின்றது
மணம் செய்துக் கொள்கிறது..குழந்தை பெறுகிறது
ஓடுகிறது..தேடுகிறது..போர்செய்கிறது..நாடு காக்கிறது
இதற்கெல்லாம் காற்றுதான் ஆதாரம்
மகாசக்தி காற்றைக் கொண்டுதான்
உயிர் விளையாட்டு விளையாடுகிறாள்

சரி..இப்பொது இடுகையின் தலைப்பிற்கு வருவோம். எறும்பைப் போல சுறுசுறுப்பும்,ஒழுக்கமும்,ஊக்கமும்,திட்டமிடுதலும் இருந்தால் ஒவ்வொருவரின் வாழ்விலும் முன்னேற்றம் உண்டு.

12 comments:

vasu balaji said...

அருமையான இடுகை. நன்றி சார்

சிநேகிதன் அக்பர் said...

அழகாக சொல்லியுள்ளீர்கள். வாழ்க்கைக்கு தேவையானபாடம்.

மங்களூர் சிவா said...

/
சுறுசுறுப்பும்,ஒழுக்கமும்,ஊக்கமும்,திட்டமிடுதலும் இருந்தால் ஒவ்வொருவரின் வாழ்விலும் முன்னேற்றம் உண்டு.
/

கண்டிப்பாக!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
அருமையான இடுகை. நன்றி சார்//

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
அழகாக சொல்லியுள்ளீர்கள். வாழ்க்கைக்கு தேவையானபாடம்.//

நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்களூர் சிவா said...
/
சுறுசுறுப்பும்,ஒழுக்கமும்,ஊக்கமும்,திட்டமிடுதலும் இருந்தால் ஒவ்வொருவரின் வாழ்விலும் முன்னேற்றம் உண்டு.
/

கண்டிப்பாக!//


வருகைக்கு நன்றி சிவா

பூங்குன்றன்.வே said...

ஒரு முறை படித்தாலே தன்னம்பிக்கை தரும் கட்டுரை இது. நல்ல பதிவிற்கு நன்றி !!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி பூங்குன்றன்.வே

goma said...

எறும்பைப் பற்றி யானை சைசில் விஷயம் தெரிவித்திருக்கிறீர்கள்.
ஒரு புதிர்:எறும்பு இல்லை என்றால் யானை இல்லை.......சொல்லுங்கள் பார்க்கலாம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
எறும்பைப் பற்றி யானை சைசில் விஷயம் தெரிவித்திருக்கிறீர்கள்.
ஒரு புதிர்:எறும்பு இல்லை என்றால் யானை இல்லை.......சொல்லுங்கள் பார்க்கலாம்//
சஸ்பென்ஸ் வேண்டாம்..அதையும் நீங்களே சொல்லிவிடுங்களேன்

goma said...

ELEPHANT
லிருந்து
ANT ஐ எடுத்துவிட்டால்
ELEPH...

அட்ரா சக்க அட்ரா சக்க

hi hi hi

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
ELEPHANT
லிருந்து
ANT ஐ எடுத்துவிட்டால்
ELEPH...

அட்ரா சக்க அட்ரா சக்க

hi hi hi//
அட்ரா சக்க அட்ரா சக்க
:-)))