Friday, November 19, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (19-11-10)

இன்று தேவையான அனைத்து செய்திகளையும் கூகுளாண்டவரிடம் தேடிப் பெறாலாம்.கூகுள் கம்பெனியின் worth 2010 ஜனவரி 1ஆம் நாள் அன்ரு 220 பில்லியன் டாலர்களாம்.
2)பயங்கரவாதிகளால் மிகவும் மோசமாக தாக்குதலுக்குள்ளாகும் நாடுகளில் முதலிடத்தை சோமாலியாவும், இரண்டாம் இடத்தை பாகிஸ்தானும் பிடித்துள்ளன.196 நாடுகளில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வில் இந்தியா 15ம் இடத்தில் உள்ளதாம்
3)2G ஸ்பெக்ட்ரம் அலைக்காற்று ஒதுக்கீடு பெற்ற 122 நிறுவனங்களில் தகுதி குறைந்த 85 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் ரத்து செய்யப் படுகின்றன
4)இந்தியா சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் கருப்புப் பணமாக வெளிநாடுகளில் 20 லட்சம் கோடிக்கு மேல் டிபாசிட் செய்யப்பட்டுள்ளதாம்.இதை பொருளாதார நிபுணர் தேல்கர் என்பவர் வெளியிட்டுள்ளார்.இதை எண்ணால் எழுதினால் 20,556,848,000,000
5)ஊழல் புகார்கள் வந்தாலும்..அதில் ஈடுபட்டவர்களைத் தெரிந்தாலும்..அவர்கள் பதவி இழந்து..மீண்டும் பதவியில் அமர்கிறார்கள்.வருமானவரித்துறை இவர்களிடம் விசாரித்து..பயானாளிகள் வசமிருந்த கணக்கில் வராத பணத்தை வெளிக்கொண்டுவந்துள்ளதா.ஊழலில் மாட்டிய அரசியல்வாதிகள் இதுவரை சிறைதண்டனை அனுபவித்துள்ளார்களா? உண்மைத் தமிழன் மாதிரி ஆட்கள் விவரம் தெரிவிக்கவும்.
6)ஏர்டெல் நிறுவனம் 19நாடுகளில் செயல்படுகிறது.இந்நிறுவனத்திற்கு உலகளவில் 20 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனராம்.இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 3Gவழங்க உள்ளனராம்
7)ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையதளங்களைப் பயன்படுத்தும் போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அமெரிக்க விமானப்படை அதன் வீரர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளதாம்.இந்த இணையதளத்தில் தற்போது சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்களின் மூலம் எதிரிகள் போர்பகுதிகளில் விமானப் படை வீரர்கள் இருக்கும் இடத்தை சரியாகக் கண்டுபிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
8)கொசுறு ஒரு ஜோக்
காமென்வெல்த் போட்டியில் ஊழல் நன்கு விளையாடியுள்ளதாம்..
அப்படியா.. எவ்வளவு தங்கப் பதக்கம் வென்றது

16 comments:

வானம்பாடிகள் said...

சுண்டல் மாதிரியே கொசுறுதான் டேஸ்ட் அதிகம்:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
சுண்டல் மாதிரியே கொசுறுதான் டேஸ்ட் அதிகம்:)//

:)))

stoxtrends said...

rajeevdesai.blogspot.com/2010/11/462000000000that-is-462-bn-mother-of.html

சங்கவி said...

சுண்டல் நல்லாயிருக்கு...

ஜோதிஜி said...

இதுபோல் தொடர்ந்து தருக

கே.ஆர்.பி.செந்தில் said...

முன்னாடி வெள்ளைக்காரன் சுரண்டிட்டுப் போனான், இப்ப நாமளே அவன்கிட்டே கொடுக்கிறோம் ...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஊழல் புகார்கள் வந்தாலும் அதில் ஈடுபட்டவர்களைத் தெரிந்தாலும் அவர்கள் பதவி இழந்து மீண்டும் பதவியில் அமர்கிறார்கள். வருமான வரித் துறை இவர்களிடம் விசாரித்து பயானாளிகள் வசமிருந்த கணக்கில் வராத பணத்தை வெளிக்கொண்டு வந்துள்ளதா? ஊழலில் மாட்டிய அரசியல்வாதிகள் இதுவரை சிறைதண்டனை அனுபவித்துள்ளார்களா? உண்மைத்தமிழன் மாதிரி ஆட்கள் விவரம் தெரிவிக்கவும்.]]]

இது மாதிரியான சந்தர்ப்பங்களில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்களே துரதிருஷ்டவசமா அதிகாரத் தலைமைக்கு வந்து உட்கார்ந்துவிடுவதால் தாங்கள் தப்பிக்க என்ன வழியோ அதைச் செய்து தப்பித்து விடுகிறார்கள். அதிகாரமற்றவர்கள்தான் மாட்டிக் கொள்கிறார்கள்..!

மாதேவி said...

தகவல்கள் நன்று.

கொசுறு :)அசத்தல்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி stoxtrends

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சங்கவி said...
சுண்டல் நல்லாயிருக்கு...//

நன்றி சங்கவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜோதிஜி said...
இதுபோல் தொடர்ந்து தருக//

நன்றி ஜோதிஜி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.பி.செந்தில்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி உண்மைத் தமிழன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மாதேவி said...
தகவல்கள் நன்று.

கொசுறு :)அசத்தல்.//

நன்றி மாதேவி

சே.குமார் said...

சுண்டல் நல்லாயிருக்கு...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சே.குமார்