Monday, November 29, 2010

வந்தாரை வாழவைக்கும்..வந்தாரிடம் இடிபடும் தமிழன்..

தமிழனுக்கு என்று ஒரு குணம் உண்டு..

அது..தன்னை நாடி வருபவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுதல்.அதே நேரம் தன்னை மிதிப்பவர்களை சகித்துக் கொள்வது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும்..அந்த மாநிலத்தைச் சேர்ந்த, அந்த மொழி தெரிந்தவரே முதல்வராக முடியும்.

ஆனால்..தமிழகத்தில்..யார் வேணுமானாலும் முதல்வர் ஆகலாம்.

அதுபோல..தமிழ்த் திரைப்பட உலகில் அனைத்து திராவிட மொழிகாரர்களும் உள்ளனர்.

அவர்கள் திறமையை ஊக்குவிப்பவன் தமிழன்.அவனைப் பொறுத்தவரை கலைக்கு மொழி பேதம் பார்க்கக் கூடாது என்று எண்ணுபவன்.தமிழ் தெரிந்த நடிகையைவிட..பிற மொழி நடிகைகளை ஆதரிப்பவன் அவன்.

ஆனால்..மற்ற மொழிக்காரர்கள் அப்படியா இருக்கிறார்கள்...இல்லையே..

மலையாளப் படங்களில்..அசட்டுப் பாத்திரங்கள் ஏதேனும் வருமானால்..அவன் தமிழ் பேசுபவனாக வருவான்..ஆனால் நாமோ..மதிப்பு மிக்க ஒரு போலீஸ் அதிகாரி பாத்திரமானாலும்..பொருத்தமானால்..ஒரு மலையாளி நடிகரை நடிக்க வைப்போம்.

ஆனால்..அவர்கள் அப்படி இல்லையே..

50 ஆண்டுகள் கமல் திரைவாழ்க்கையைப் பாராட்ட கேரள அரசு முன் வந்தது.ஆனால் அதை மலையாளத் திரைப்படத்தினர் புறக்கணித்தனர்.

தற்போது கிளம்பியிருக்கும் அடுத்த சர்ச்சை..ஆர்யாவின் தமிழ்ப்படங்கள் பேச்சைப் பற்றிய சர்ச்சை..

அதை கண்டித்த குகநாதனைப் பாராட்டும் அதே நேரத்தில்..நடிகர் சங்கம் அப்படி நடந்துக் கொள்ளவில்லையே என மன வருத்தம் ஏற்படுகிறது..அதே நேரம் அவர்கள் செயலும் சரியே..ஏனெனில்..அது தென்னிந்திய நடிகர் சங்கம்.

ஆனால்..தனி மனிதனான நாம்..என்ன செய்ய வேண்டும்..

கலைஞர்களுக்கு நாவடக்கம் வேண்டும்..அவர்கள் எதை வேணுமானாலும் பேசுவார்கள்..அப்படிப்பட்டவர்களை நாம் ஆதரிக்க வேண்டுமா?

கண்டிப்பாக உப்பைத்தின்ற ஆர்யா..தண்ணீர் குடித்தாக வேண்டும்...அவர் படங்களை புறக்கணிப்பதே தமிழனான நாம் செய்யும் எதிர்ப்பாகும்.அதை விடுத்து..அவர் உருவப் படத்திற்கு செருப்பு மாலை போடுவதுடன் திருப்தியடைந்துவிடக் கூடாது.

19 comments:

Chitra said...

மலையாளப் படங்களில்..அசட்டுப் பாத்திரங்கள் ஏதேனும் வருமானால்..அவன் தமிழ் பேசுபவனாக வருவான்..ஆனால் நாமோ..மதிப்பு மிக்க ஒரு போலீஸ் அதிகாரி பாத்திரமானாலும்..பொருத்தமானால்..ஒரு மலையாளி நடிகரை நடிக்க வைப்போம்.


...... நாங்க நல்லவங்க..... வெளுத்ததெல்லாம் பாலு என்று நம்புறவங்க...... ஹி,ஹி,ஹி,ஹி.....

சிவராம்குமார் said...

வந்தாரை வாழ வெச்சு வாழ வெச்சு என்னத்த கண்டோம்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சித்ரா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிவா

Prasanna said...

அது அப்படியே பழகி போச்சு ஹிஹி :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Prasanna

வருண் said...

எந்த மொழிபேசுபவர்களிலும், முட்டாள்களும் உண்டு பெரிய அறிவாளிகளும் உண்டு. இவர்கள் இரண்டு முனையில் இருப்பார்கள். இடையில் ஆவெரேஜ் மூளையுள்ள மற்றவர்கள். இதுதான் இயற்கை.

ஆனால் இந்த மலையாளிகளில் மட்டும் முட்டாள்களும் கெடையாதாம், இடையில் உள்ள ஆவெரேஜ் மக்களும் கிடையாதாம், எல்லாருமே அறிவாளிகள்தானாம், அதுவும் உயர் தரமானவர்கள்னு நெறைய மலையாளிகள் நெனச்சுக்கிறாங்க, அசிங்கமா அதை வெளியே சொல்லிக்கிறாங்க!

இவங்களுக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி ஒரு புதுமையான வியாதி வருதுனு எனக்குப் புரியலை!

Philosophy Prabhakaran said...

// மலையாளப் படங்களில்..அசட்டுப் பாத்திரங்கள் ஏதேனும் வருமானால்..அவன் தமிழ் பேசுபவனாக வருவான்..ஆனால் நாமோ..மதிப்பு மிக்க ஒரு போலீஸ் அதிகாரி பாத்திரமானாலும்..பொருத்தமானால்..ஒரு மலையாளி நடிகரை நடிக்க வைப்போம். //

நம் படங்களில் கூட பலமுறை மலையாளிகளை கேவலப்படுத்தியிருக்கிறோம்... எத்தனை படங்களில் டீக்கடை நாயரின் மனைவியை ஒரு மாதிரியான பெண்ணாக சித்தரித்திருக்கிறோம்...

Karthick Chidambaram said...

Great Quality of Tamils.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
varun
philosophy prabhakaran
Karthick Chidambaram

Thenammai Lakshmanan said...

உண்மை டி வி ஆர்.. நாம் எல்லோரையும் மதிப்பவர்கள்..

Jerry Eshananda said...

நாம அனுப்புற "மாட்டை அடுச்சு தின்னுபுட்டு,நம்ம மேலேயே பாயுறான்." மலையாளத்தான்.

நவன் said...

TVR,

பேச்சு சுதந்திரம் இல்லை என்பதே நாம் அனைவரும் சொல்லும் பொது குறை. ஆர்யா ஏதோ சொன்னால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பெரிய ஆளாக்காமல், இதை அவர் பேச்சு சுதந்திரத்திற்கு அளிக்கும் மதிப்பாக்குங்கள்.

//பாத்திரமானாலும்..பொருத்தமானால்..ஒரு மலையாளி நடிகரை நடிக்க வைப்போம்.//
யாரு கேட்டா?

பொதுப்புத்தி சார்ந்த stereo type characters உலகெங்கும் உண்டு (மாராப்பு இல்லாத, காம வெறி பிடித்த சேச்சிகளை காட்டும் தமிழ் படத்திலும்).

இது போன்ற வெட்டி இடுகையால் வன்மத்தை பரப்பாமல், ஆக்க பூர்வமான பணிகளை செய்யுங்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
தேனம்மை லெக்ஷ்மணன்
ஜெரி ஈசானந்தன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

தங்களது அறிவுரைக்கு நன்றி navan

Anonymous said...

tell from ur heart? What is meaning of TamilS? Do we treat all people as same.No.We have no unity and self esteem.We always running beyond the people who is strangers.Thats why Malayalee MGR and Marathi Rajnini become our fav people.This is a serious issue of Tamils.We have no unity.So...Arya will talk like that only.I hate that fellow from the day one since i knew him as mallu.Finally he showed.This is problem with all Mallus.Superiority complex.Its a mental disorder.

ஹேமா said...

வந்தாரை வாழவைத்தோம்...இன்று !

Avargal Unmaigal said...

மலையாளிகளைப்பற்றி ஒன்றும் சொல்லாதிர்கள் இல்லையென்றால் சாரு நிவேதாவுக்கு கோபம் வந்து தமிழனை கண்ண பிண்ன என்று திட்டிதித்துவிடுவார் அவரின் அடுத்த வலைப் பதிவில்...பாவம் வயசான ஆளை வம்புக்கு இழுக்க வேண்டாம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ஹேமா
sworks
avarkal unmaigal