Tuesday, November 23, 2010

திரைப்பட இயக்குனர்கள்-9 C.V.ஸ்ரீதர்

இந்தத் தொடரில் இன்று இயக்குநர் ஸ்ரீதர் அவர்களைப் பற்றி பார்ப்போம்.

ஸ்ரீதர்...கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் திரையில் மக்களை..குறிப்பாக இளைஞர்களை தன் படங்களின் மூலம் கட்டிப் போட்டவர்.

ஆகஸ்ட் 16, 1933 ல் மதுராந்தகம் அருகே ஒரு கிராமத்தில் பிறந்த இவர்..திரையுலகில் பிரவேசிக்க எண்ணி 'ரத்தபாசம்' என்னும் கதையை நாடகமாக்கி டி.கே.சண்முகத்திடம் எடுத்துச் சென்றார்.அந்த ஸ்கிரிப்டைப் படித்து அசந்த ஷண்முகம்..அதை நாடகமாகவும், பின் திரைப்படமாகவும் எடுத்தார்.பின் ஸ்ரீதர் பல படங்களுக்கு கதை,வசனம் எழுதினார்.அவ்ற்றில் குறிப்பிடத்தக்கவை..எதிர்பாராதது,அமர தீபம் ,புனர்ஜென்மம் ஆகியவை

பின் 1959ல் கல்யாணபரிசு மூலம் இயக்குநர் ஆனார்.அந்த நாளில் காதலை மிகவும் நளினமாகவும்..உன்னதமாகவும் காட்டிய பெருமை இவரையேச் சேரும்.ஆதலால் அன்றைய இளைஞர்கள் விரும்பிய இயக்குநராய் திகழ்ந்தார்.

1961ல் பின் தன் சொந்த நிறுவனமான 'சித்ராலயா'வைத் துவக்கி..தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி என பல படங்களை இயக்கினார்.

காதலிக்க நேரமில்லை..தமிழ்த்திரையுலகு இருக்கும் வரை பேசப்படப்போகும் நகைச்சுவைப் படம்..இது போன்ற படம் ஒன்று இதுவரை மீண்டும் வரவில்லை எனலாம்.பாலையா,நாகேஷ்,முத்துராமன்,ரவிசந்திரன் (அறிமுகம்),காஞ்சனா(அறிமுகம்) ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் இந்தியில் 'ப்யார் கியே ஜா' என்ற பெயரில் வந்து வெற்றி பெற்றது.ஹிந்தியில் கிஷோர்குமார் நடித்தார்.

பின் நெஞ்சில் ஓர் ஆலயம்,தேன்நிலவு,நெஞ்சம் மறப்பதில்லை என பல வெற்றிபடங்களை அளித்தார் ஸ்ரீதர்.அவரின் மற்றைய குறிப்பிடத்தக்க படங்கள்..

ஊட்டி வரை உறவு

சிவந்த மண்

அவளுக்கென்று ஒரு மனம்

போலீஸ்காரன் மகள்
கொடிமலர்

சுமைதாங்கி

வெண்ணிற ஆடை (ஜெ நடித்த முதல் தமிழ்ப் படம்)

விடிவெள்ளி

இளைமை ஊஞ்சலாடுகிறது

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

நினைவெல்லாம் நித்யா

துடிக்கும் கரங்கள்

ஓடை நதியாகிறது

ஆலய தீபம்

தென்றலே என்னைத் தொடு

கலைக்கோயில்

ஆகியவை
ஹிந்தியில் பியார் கியே ஜா,நஜ்ரானா,தில் ஏக் மந்திர்,தர்த்தி ஆகியவற்றை குறிப்பிடலாம்.
இவருக்கென்று ஒரு தனி டீமே இருந்தது...இசை விஸ்வனாதன்ராமமூர்த்தி,ஆர்ட் கங்காஒளிப்பதிவு வின்சென்ட்,எடிட்டிங் ஷங்கர்,பாட்ல்கள் கண்ணதாசன்,இவருக்கு வசன உதவியாளராக சித்ராலயா கோபு,துணை இயக்குனராக சி.வி.ராஜேந்திரன் (பின் ராஜேந்திரனும் பிரபல இயக்குனர் ஆனார்) ஆகியோரைச் சொல்லலாம்.எம்.ஜி.ஆரை வைத்து மீனவ நண்பன்,உரிமைக் குரல் ஆகிய படங்களை இயக்கினார்.
-

பின் கடைசி சில வருடங்கள் பக்கவாத நோயால் அவதிப் பட்டு வந்தவர்..ஒருமுறை ரஜினி உதவுவதாகக் கூறிய போதும்..உங்கள் உதவி வேண்டாம்..நான் மீண்டு வருவேன்..உங்கள் கால்ஷீட் கொடுங்கள் போதும்.. நானே தயாரித்து..இயக்குகிறேன் என்றார்.

ஆனால் குணம் அடையாமலேயே 2008ல் மறைந்தார்.
அவர் படத்திலிருந்து ஒரு பாடல்
23 comments:

nellai அண்ணாச்சி said...

தமிழ் திரைப்பட இயக்குநர்களின் முன்னோடி

vasu balaji said...

நன்றி சார்.

Unknown said...

கலைக்கோயில்...

Prasanna said...

A director ahead of his times :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பகிர்வு.. நன்றி டிவிஆர் சார்.

ராஜ நடராஜன் said...

நெஞ்சம் மறப்பதில்லை கறுப்பு வெள்ளையில் காமிரா கோணம்,பாடலின் வரிகளை ஒரே ஷாட்டில் எடுக்கும் நுட்பம் என பல புதுமைகளை ஸ்ரீதர் புகுத்தினார் என்று எங்கோ படித்ததாக நினைவு.கூடவே சிவந்தமண் கூட அந்தக்காலத்து பெரிய பட்ஜெட் படமென்றும் கேள்வி.

ஹேமா said...

நீங்கள் தந்த வரிசையில் சில படங்களை நானும் பார்த்து ரசித்திருக்கிறேன்.மனதில் நிற்கும் படங்கள்.நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்தோர்க்கும் கருத்து தெரிவித்தவர்களுக்கும் நன்றி

Chitra said...

He was a legend!

பூங்குழலி said...

இனிமையான படங்கள் பல தந்தவர் ஸ்ரீதர் .இவரின் படத்தின் பாடல்கள் அத்தனை அருமையாக இருக்கும் .பி.வாசு ,சந்தானபாரதி போன்றவர்கள் இவரிடம் பணியாற்றியவர்கள் என்று நினைக்கிறேன்

பிரபாகர் said...

தலைச்சிறந்த இயக்குனர்களுல் ஒருவர்... பகிர்வுக்கு நன்றி அய்யா!...

பிரபாகர்...

ஜி.ராஜ்மோகன் said...

இந்த வாரம் ஆனந்த விகடனில் ஸ்ரீதருடைய ஜெயலலிதா பற்றிய கடிதம் பொக்கிஷம் பகுதியில் வெளியாகி உள்ளது.
விக்ரமை "தந்து விட்டேன் என்னை" படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியதே ஸ்ரீதர் அவர்கள் தான் http://www.grajmohan.blogpot.com

ஈரோடு கதிர் said...

அழகான பகிர்வு!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
He was a legend!//

நன்றி chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பூங்குழலி said...
இனிமையான படங்கள் பல தந்தவர் ஸ்ரீதர் .இவரின் படத்தின் பாடல்கள் அத்தனை அருமையாக இருக்கும் .பி.வாசு ,சந்தானபாரதி போன்றவர்கள் இவரிடம் பணியாற்றியவர்கள் என்று நினைக்கிறேன்//

வருகைக்கு நன்றி பூங்குழலி..
சந்தான பாரதி,வாசு மட்டுமல்ல சி.வி.ராஜேந்திரன்,பி.மாதவன் ஆகியோரும் ஸ்ரீதருடன் இருந்தவர்களே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜி.ராஜ்மோகன் said...
இந்த வாரம் ஆனந்த விகடனில் ஸ்ரீதருடைய ஜெயலலிதா பற்றிய கடிதம் பொக்கிஷம் பகுதியில் வெளியாகி உள்ளது.
விக்ரமை "தந்து விட்டேன் என்னை" படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியதே ஸ்ரீதர் அவர்கள் தான் http://www.grajmohan.blogpot.com//

வருகைக்கு நன்றி ராஜ்மோகன்
ஸ்ரீதரால் அறுமுகப் படுத்தப் பட்டவர்கள் பட்டியல் ஏராளம்
முத்துராமன்,கல்யாண்குமார்(தமிழில்),ஜெ (தமிழில்),நிர்மலா,ஸ்ரீகாந்த்,மூர்த்தி,ஆஷா,மேஜர்,சேஷாத்ரி,காஞ்சனா,ராகவன்,ரவிசந்திரன் .விகரம் இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
ஆனால்..என்ன ஒன்று இந்த மாபெரும் கலைஞன் சரியான முறையில் கவுரவிக்கப்படவில்லை அரசால்.யார் யாருக்கோ பாத்மஸ்ரீயும்,பத்மபூஷனும் ,தாதாசாகேப் பால்கே விருதும் அளிக்கப்பட்டுவரும் நிலையில் ஸ்ரீதருக்குக் கிடைத்த ஒரே அரசு விருது கலைமாமணி மட்டுமே

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பிரபா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஈரோடு கதிர் said...
அழகான பகிர்வு!//

நன்றி கதிர்

Thenammai Lakshmanan said...

நல்ல பகிர்வு டி வி ஆர்.. ஸ்ரீதர் மிகச் சிறந்த படங்களைத் தந்தவர்.. அருமை..

T.V.ராதாகிருஷ்ணன் said...

// தேனம்மை லெக்ஷ்மணன் said...
நல்ல பகிர்வு டி வி ஆர்.. ஸ்ரீதர் மிகச் சிறந்த படங்களைத் தந்தவர்.. அருமை.//.

நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்

chandru2110 said...

அவரோட படங்கள் இந்த காலத்துக்கும் பொருந்தும்.
முதன் முதலில் வெளிநாட்டில் எடுக்கப் பட்ட தமிழ் படம் சிவந்த மண்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி chandru2110

Ravi said...

He has also directed Saathi,starring Rajendra kumar n Vyjayanthi mala,a remake of Paalum Pazhamum,another wonderful feather in his cap.