Tuesday, November 16, 2010

சவால் சிறுகதைப் போட்டியும்..பேட்டியும்..

சவால் சிறுகதைப் போட்டியில் கலந்துக் கொண்ட என்னை ..பேட்டி எடுப்பதில் சர்ச்சையைக் கிளப்பும் பதிவர் ஒருவர் பேட்டி கண்டார்.அவர் கேட்ட கேள்விகளும்..என் பதிலும்..



கேள்வி- உங்கள் கதை 'வெல்டன் காமினி' ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை

பதில்-'வெல் டன்' ஆக இல்லாததால்

கேள்வி- அதற்கான விமரிசனத்தைப் பாருங்கள்..

(ஒரு துண்டுச் சீட்டைக் காட்டுகிறார்)

"துப்பறியும் கதைக்கான கரு என்ற அளவில் ஒகே.நடை மிகவும் தொய்வாக இருக்கிறது.இன்னும் விறுவிறுப்பாக இருக்கலாம்.முதலில் நடிகரைப் பற்றி சொல்லிவிட்டு பிறகு கிளைமாக்ஸில் காமினி கதையுடன் இணைத்திருப்பது நன்றாக இருக்கிறது.நல்ல முயற்சி'

இதைப் பற்றி..

பதில்-நடிகர் வேறு செய்தி..காமினி கதை வேறு அல்ல..காமினிக் கதையில் நடிகரும் ஒரு பாத்திரம்..இதை நீதிபதிகளுக்கு புரியவைக்காதது என் குற்றம் என்றே தோன்றுகிறது

கேள்வி-உங்கள் கதை சிறந்த 15ல் கூட வரவில்லையே

பதில்-கடைசியிலிருந்து பாருங்கள்..கண்டிப்பாக மூன்றுக்குள் இருக்கும்

கேள்வி-மிகவும் தொய்வாக இருக்கிறது என்று..

பதில்-அதற்குத்தான் அதை எழுதும் போதே தொய்வு வீழாமல் சாய்த்து பிடிக்க நாயகியின் பெயரை சாயாசிங் என வைக்கலாமா? எனக் கேட்டேன் பரிசலிடம்.ஆனால் அவர் கண்டிப்பாக காமினி என்றிருக்க வேண்டும்.உங்களுக்காக விதிமுறையை மாற்ற முடியாது என்று சொல்லி விட்டார்

கேள்வி-விறுவிறுப்பு பற்றி

பதில்-விறுவிறுப்பாய் இருக்க வேண்டும் என்றுதான் 420 ஜர்தா பீடாவை வாயில் குதப்பிக் கொண்டே எழுதினேன்..420 தன் 420 ஐக் காட்டிவிட்டது

கேள்வி-நல்ல முயற்சி என்று சொல்லியுள்ளார்களே ..அது பற்றி

பதில்-கெட்ட முயற்சி என்று ஒன்று இருந்தால் ..அதைப் பற்றிச் சொன்னால்..இது பற்றி சொல்கிறேன்

கேள்வி- நீதிபதிகள் பற்றி..

பதில்-அப்துல்லா..அதிர்ஷ்டசாலி...அருகிலேயே அகர்வால் கண் மருத்துவமனை இருக்கிறதே

கேள்வி-கடைசியாக ஏதேனும் போட்டி பற்றி சொல்ல வேண்டுமா?

பதில்-போட்டியை நடத்தியவர்கள்,நீதிபதிகள்,வெற்றி பெற்றோர்,கலந்துக் கொண்ட அனைத்து பதிவர்கள் அனைவருக்கும் நன்றி..(ஏனெனில் நானும் இதில் கலந்துக் கொண்டதால்..எனக்கும் அவர்கள் நன்றி சொல்லியுள்ளதால்..ஹி..ஹி..கிவ் அண்ட் டேக் தான்)

6 comments:

எல் கே said...

பேட்டி சூப்பர்

கார்க்கிபவா said...

போட்டியும் சூப்பர்.. பேட்டியும் சூப்பர்.. பார்ட்டி எப்போ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி LK

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கார்க்கி
பார்ட்டி எப்போ?

Thamira said...

கடைசியிலிருந்து பாருங்கள்..கண்டிப்பாக மூன்றுக்குள் இருக்கும்//

படித்துக்கொண்டே வருகையில் வெடிச்சிரிப்பு சிரிக்கவைத்த இடம். ஸ்போர்டிவாக எடுத்துக்கொண்டமைக்கு நன்றிகள் ஸார்.!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஆதி