Wednesday, November 17, 2010

மலையும்..மடுவும் (கவிதை)

மஞ்சள்


மஞ்சள் முகம்

மஞ்சள் மங்கல நீராட்டு

மஞ்சக்காணி என

மங்கலகரமானது

வேலி தாண்டும்

செய்தித்தாள்களை

மஞ்சள் பத்திரிகை

என்பதேன்..

மலையளவு உயர்த்தி

மடுவில் போடுவதேன்

8 comments:

R. Gopi said...

நல்ல பாம்புன்னு சொல்றோம் இல்லையா அது மாதிரிதான்னு நினைக்கிறேன்.

ஹிட்லர் மகானுபாவர் அப்படின்னு கூட எங்க ஊர்ப் பக்கம் பேசுவோம்.

ஹேமா said...

நல்ல சந்தேகம்தான் உங்களுக்கும் !

vasu balaji said...

இது போங்கு சார். மஞ்சக் காமாலை, மஞ்சக் கடுதாசி,மஞ்சள் பத்திரிகைன்னு மடு மூணு, மலை மூணுன்னு கூட்டிக்கழிச்சி கணக்கு சரியாத்தான் வச்சிருக்கான் டமிலேன். நீங்க அதுல ஒன்னை மட்டும் ஓரம் கட்டி மீன்பாடி வண்டில ஏத்தினது தப்பு சார். அவ்வ்வ்வ்:))

goma said...

நான் நினைக்கிறேன்.....மஞ்சளுக்கும் மஞ்சப் பத்திகைக்கும் சம்பந்தம் இருக்காது.
காமாலைக் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்......என்பதுபோல் அவரவர்களுக்குத் தோன்றுவதை...எழுதுவதால் இருக்குமோ....
[இன்றைக்குத்தான் கண்டு பிடித்தேன் .தமிழா தமிழாவுக்கு நன்றி]

மங்குனி அமைச்சர் said...

அட............. ஆமால்ல ????????

Thenammai Lakshmanan said...

கவிதை நல்லா இருக்கு.. வானம் பாடி சாரோட விமர்சனமும் நல்லா இருக்கு..:))

Prasanna said...

இது ஒரு நல்லா கேள்வி :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Gopi Ramamoorthy
Hema
bala
Goma
மங்குனி அமைச்சர்
தேனம்மை லெக்ஷ்மணன்
Prasanna