Sunday, November 21, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழல்..தி.மு.க., விற்கு பின்னடைவா

ஸ்பெக்ட்ரம் ஊழல் வரலாறு காணாத ஊழல் என்று சொல்லப் படுகிறது.அதே சமயம் அது நாட்டிற்கு உண்டான இழப்பு என்பதும்..அந்த இழப்பினால் கோடி கணக்கில் சம்பாதித்த தனி நபர்கள் விவரங்களும்..அவர்களுக்குக் கிடைத்த பங்கும் வெளிக்கொணர முடியுமா? எனத் தெரியவில்லை.சாதாரணமான மனிதன் சில நூறு ரூபாய் கட்டவில்லையென்றாலே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வருமானத் துறை.பல ஆண்டுகளூக்கு முன்னரே...ஒரு மத்திய அமைச்சராய் இருந்தவர் 10 லட்சத்திற்கு மேல் வருமானவரி கட்ட வேண்டியதிருந்தும்..அவர் அதை தான் மறந்து விட்டதாகக் கூறிய போதும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.மக்களும் அதை சட்டை செய்யாமல் அவரை துணை பிரதமராக்கினர்.அப்படி ஒரு நிலை நாட்டில் தொடரும் போது..இந்த ஊழலிலும் வருமானவரித் துறை செயல்படுமா எனத் தெரியவில்லை.அப்படியே செயல்பட்டாலும்..அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து..வருஷக்கணக்கில் தண்டனைக்குக் காத்திருக்க வேண்டியுள்ளது.நம் நாட்டு சட்ட திட்டங்கள் அப்படி.அதற்குள் அடுத்த தலைமுறை ஊழல் சாம்ராஜ்யத்தில் முடி சூட்டிக் கொள்ள தயாராய் விடும்.எனக்குத் தெரிந்து இது நாள் வரை ஊழல் செய்த அரசியல்வாதிகள் யாருக்கும் சட்டப்படி தண்டனைக் கிடைத்ததில்லை.சரி..தலைப்புக்கு வருவோம்..தமிழக சட்டசபைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில்..தி.மு.க.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜா மீது வரலாறு காணா ஊழல் குற்றச்சாட்டு.இது அக்கட்சியை பாதிக்குமா என்றால்..கண்டிப்பாக பாதிக்காது..ஏனெனில்..இன்று அனைத்து வாக்காளர்களுக்கும் தெரியும்..நாட்டில் ஊழல் இல்லாத கட்சியும்..ஊழல் செய்யா அரசியல்வாதியும் கிடையாது என்று.ஆகவே ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஊழல் பெரிய காரணமாய் அமையாது என்றே தோன்றுகிறது.என்ன..இந்த அளவில் வரலாறு காணா உழல்தானே தவிர நாட்டை அயலார்க்கு விற்றுவிடும் அளவு ஊழல் இல்லையே என மக்கள் ஆறுதல் அடைவர்.நம் நாட்டில் இன்று ஊழல் செய்பவர்,லஞ்சம் கொடுப்பவர்,லஞ்சம் வாங்குவோர்,பேராசைக்காரர்கள் ஆகியோர் பெரிகிவிட்டனர்.இவர்கள் செய்யும் காரியங்களைக் கண்டு..இவர்கள்தான் வெட்கப்படவில்லையென்றாலும்..அப்படிப்பட்டவர்களையே தேர்ந்தெடுக்கும் மக்களுக்கும் வெட்கமில்லை . என்ன செய்வது..காலப்போக்கில்..ஊழல் செய்யாத நபர் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டால்..அவர் பிழைக்கத் தெரியாதவர் என மக்களால் புறக்கணிக்கும் காலம் வந்துவிடும் போலயிருக்கிறது.ஊழல் வேட்பாளர்களின் பிரதான தகுதி ஆகிவிடும் போல இருக்கிறது.


ஆகவே..மக்களே..ஊழலில் அரசியல்வாதிகளின் பங்கு போக சிறிதளவு உங்கள் வாக்கிற்கு என அவர்கள் அளிக்கக் கூடும்.அதைப் பெற்றுக்கொண்டு..மனசாட்சிக்கு பயந்து,யார்  அதிகம் கொடுக்கிறார்களோ  அவர்களுக்கே நீங்கள்  வாக்களியுங்கள்.

14 comments:

goma said...

நாம் என்ன சொன்னாலும் யாரும் கேட்கப் போவதில்லை.....
எல்லாம் விதி என்று போய்க்கொண்டே இருப்போம்

vasu balaji said...

அசிங்கமா கேவலாமாத்தான் இருக்கு. ஆனா அதான் உண்மை:(

Ravi kumar Karunanithi said...

எல்லாம் விதி.....

ராஜ நடராஜன் said...

எழுதுவது எண்ணங்களையும் பொது புத்தியையும் மாற்றுவதற்கு.கொடுக்கிறத வாங்கிட்டு ஓட்டு போடுங்கன்னு சொல்வதற்கு ,இணையத்தின் பல பரிமாண கருத்துக்களை சந்திக்காத சராசரி மனிதனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்:(

My regrets for your pessimistic view.

bandhu said...

இவ்வளவு பெரிய ஊழல் கூட பின்னடைவு இல்லை என்றால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. ஆனால், தமிழனுக்கு என்று ஒரு தனி குணம் உண்டு. வயிற்றெரிச்சல். கருணாநிதி குடும்பத்தை பார்த்து மக்களுக்கு இருக்கும் வயிற்றெரிச்சல் பெரிய பின்னடைவாக இருக்கும்.

Unknown said...

இப்படியே போனால் நாம் இந்தியன் என்று சொல்வதற்கே வெட்கப்பட வேண்டியிருக்கும். இதற்கெல்லாம் வாக்கு இயந்திரத்தில் 49 ஓ போடுவதற்க்கு வசதி செய்தால்தான் விடிவு வரும் அதுவரை மக்கள் பொறுக்கிகளுக்கும், ரவுடிகளுக்கும் பயந்து போய்தான் வாக்குகளை பதிப்பார்கள். நம் மக்களயும் நாம் குறைச் சொல்லி பயனில்லை.

Unknown said...

வரும் தேர்தலில் தி.மு.க கூட்டணி ஜெயிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதை மறுக்க முடியாது என்றாலும்... இந்த ஊழல் பெருச்சாளிகளை ஒன்றுமே செய்ய முடியாதா? அடுத்தும் தி.மு.க வே வந்தால் மக்களின் நிலைமை கவலைக்கிடமாக மாறும்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ராஜ நடராஜன் said...
எழுதுவது எண்ணங்களையும் பொது புத்தியையும் மாற்றுவதற்கு.கொடுக்கிறத வாங்கிட்டு ஓட்டு போடுங்கன்னு சொல்வதற்கு ,இணையத்தின் பல பரிமாண கருத்துக்களை சந்திக்காத சராசரி மனிதனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்:(

My regrets for your pessimistic view.//

வருகைக்கு நன்றி ராஜ நடராஜன்
என் பதிவில்..இயலாமையும்,விரக்தியும்,இப்படித்தானே நடக்கப்போகிறது..அப்படியெல்லாம் செய்யாதீர்கள் என்ற மறைமுகப்பொருளும் தெரியவில்லையா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Ravi kumar Karunanithi said...
எல்லாம் விதி.....//

வருகைக்கு நன்றி Ravi kumar Karunanithi

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bandhu

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கிணற்றுத் தவளை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.பி.செந்தில்