Friday, November 26, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(26-11-10)

பீகார் சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள M.L.A., க்களில் 141 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்.இதில் அனைத்துக் கட்சியினரும் அடக்கம்.ஒரு எம்.எல்.ஏ., வாக கிரிமினலாயிருந்தால் வரமுடியும் என தகுதி நிர்ணயம் செய்தால் என்ன? வாழ்க இந்திய ஜனநாயகம்.
2)ஒரு அரசு ஊழியன் கிரிமினல் என்றால் அவன் வேலை பறி போகும்..பாவம் அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்?
3)புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவரா நீங்கள்? அப்படியாயின் அதனால் விளையும் கெடுதல் உங்களுக்கில்லை என மகிழாதீர்கள்.புகைப்பிடிப்பவர் அருகில் நீங்கள் நின்றாலே..அந்தக் கேடு உங்களை வந்து அடையும்.ஆண்டு ஒன்றுக்கு 51 லட்சம் நபர்கள் புகை பழக்கத்தால் உயிரிழக்கின்றனராம்.அதில் பிறர் புகைப் பிடிப்பதால் ..அவர்கள் அருகில் உள்ளவர்கள் 6,03,000 நபர்கள் இறக்கின்றனராம்.
4)அரசியல்வாதிகள் மட்டுமல்ல ஊரை கெடுப்பவர்கள்.ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிலும் கறுப்பு ஆடுகள் உண்டு.இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி மாதுரி இந்திய ரகசியங்களை பாகிஸ்தானின் உளவு ஏஜென்சியான ஐ.எஸ்.ஐ., க்கு விற்றதாக கைது செய்யப்பட்டது பழைய கதை.இப்போது உள்துறை ரகசியங்களை விற்றதாக ரவீந்தர் சிங் என்னும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.பாவம் பாரத அன்னை..இப்படி
எத்தனைப் பேரைத்தான் தாங்குவாள்?
5) இந்த ஆண்டும் தமிழகத்திற்குத் தேவையான மழை பெய்துள்ளது.அண்டை மாநிலம் தண்ணீர் தரவில்லை என்றால் என்ன? நான் இருக்கிறேன் உனக்குத் தேவையானதைத் தர என்கிறது இயற்கை.அந்த நீரை சரியானமுறையில் தேக்கி வைக்கும் சக்தி அரசுக்கு இல்லை..மழைநீரை சரியான முறையில் தேக்கி வைத்தால் நாம் தண்ணீருக்காக பிறரிடம் கை ஏந்தும் நிலையைத் தவிர்க்கலாம்
6)இந்தியாவில் 30 கோடியே 60 லட்சம் பேருக்கு மட்டுமே சுகாதாரமான கழிவறை உள்ளதாம்.65 கோடிக்கு மேல் இன்னும் திறந்தவெளியையே கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனராம்.
7) ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராகத் என்னும் 37 வயது பெண்ணிற்கு அபிதாப் நடத்தும் சோனி ஹிந்தித் தொலைக்காட்சியில் கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் 1 கோடி பரிசு கிடத்துள்ளதாம்.வாழ்த்துகள் ராகத்..பெண்களே முன்னேறுங்கள்.

12 comments:

goma said...

நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்
அருமையான 'NEWS IN NUTSHELL ரகம்

koodalnagar said...

:)))))))) Thanks for your information Sir

ராஜ நடராஜன் said...

//பீகார் சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள M.L.A., க்களில் 141 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்//

போன பதிவுக்கு சிரிப்பான் போட்டு விட்டுட்டு இங்கே வந்தா பலூன்ல காத்தை புடுங்கி விட்டுட்டீங்களே.

ராஜ நடராஜன் said...

//மழைநீரை சரியான முறையில் தேக்கி வைத்தால் நாம் தண்ணீருக்காக பிறரிடம் கை ஏந்தும் நிலையைத் தவிர்க்கலாம் //

நமக்கு இயற்கையா மழை,மலைகளினால் ஆறுகள்,சென்னையை சுற்றிய இடங்களுக்கு கடல் என்று இத்தனையும் இருந்தும் நாம் அழுதுகிட்டு இருக்கோம்ன்னா நமது திறமையின்மையே என்பேன்.

கல்லணை கட்டிய கரிகாலன் வாரிசுகளா நாம்?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Goma
kOOdalnagar
ராஜ நடராஜன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//போன பதிவுக்கு சிரிப்பான் போட்டு விட்டுட்டு இங்கே வந்தா பலூன்ல காத்தை புடுங்கி விட்டுட்டீங்களே.//

வேட்பாளர்களைத்தானே சொல்லியுள்ளேன்..வாக்காளர்களை அல்லவே
:))

பிரபாகர் said...

//மழைநீரை சரியான முறையில் தேக்கி வைத்தால் நாம் தண்ணீருக்காக பிறரிடம் கை ஏந்தும் நிலையைத் தவிர்க்கலாம் //

மிகச்சரி அய்யா!... ராஜ நடராஜன் சொன்னதையே நானும்...

Chitra said...

நல்ல தொகுப்பு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பிரபாகர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
chitra

அருள் said...

இந்த முறையும் பீகாரில் சாதிதான் வென்றது!

http://arulgreen.blogspot.com/2010/11/blog-post_28.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அருள்