Saturday, November 20, 2010

சென்னை நகரில் காணாமல் போன திரையரங்குகள்

சென்னையில் மவுண்ட் ரோட் என அழைக்கப் பட்ட அண்ணாசாலையில் ஒரு காலத்தில் தனித்திரையரங்குள் எவ்வளவு இருந்தன.காலப்போக்கில், அவை எல்லாம் மறைந்து, வர்த்தக நிறுவனங்களாகவும்,அலுவலங்களாகவும் மாறிவிட்டன.ஆயினும் அத்திரையரங்குகளும்..அவற்றுள் நான் பார்த்த திரைப்படங்களும் இன்றும் நினைவை விட்டு அகலாதவை.

சென்னையில் மறைந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்

நியூ எலிஃபின்ன்ஸ்டன்..

இந்த திரையரங்கு அண்ணா சிலை அருகே அண்ணாசாலையில் இருந்தது.இங்கு சாதாரணமாக ஆங்கிலப் படங்களும்,மலையாளப் படங்களுமே வெளியாகும்.

Sleeping beauty,absent minded professor ஆகிய படங்களை இத்திரையரங்கில் பார்த்திருக்கிறேன்.மலையாளப் படமான 'செம்மீன்' இங்குதான் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது

பாரகன்-

வாலாஜா சாலையில் அமைந்திருந்தது.பல தமிழ்ப்படங்களை இத் திரையரங்கில் பார்த்துள்ளேன்.அவற்றில் பசுமையாய் என் நினைவில் உள்ள படம் 'புதிய பறவை'.இந்தப் படம் வெளியான போது..அந்த தியேட்டரில் அனைத்து இருக்கைகளும் சிவாஜி அவர்களாலேயே புதுப்பிக்கப் பட்டு புதுப் பொலிவுடன் திகழ்ந்தது.தொடர்ச்சியாக 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் ஓடியது.இப்போது அந்த இடத்தில் அரிகந்த் பில்டர்ஸ் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் வந்து விட்டதுபிளாஸா..

அண்ணாசாலையில் சுகுண விலாச சபா இருக்குமிடத்தின் அருகில் இருந்த திரையரங்கு...சாதாரணமாக எம்.ஜி.ஆர்., படங்கள் பல இங்கு வரும்.தவிர்த்து அவ்வப்போது குறைந்த முதலீட்டு படங்கள் இங்குதான் வெளியிடப்படும். நான் இங்கு பார்த்த படங்களில் ஒன்று 'பணத்தோட்டம்"நியூகுளோப்/அலங்கார்

அண்ணாசாலையில் எல்.ஐ.சி.,அருகே நியூகுளோப் திரையரங்கு இருந்தது.இங்கு ஆங்கிலப் படங்கள் வெளியாகும்.'House of wax' இங்குதான் பார்த்தேன்.பின் அத்திரையரங்கு இடித்துக் கட்டப்பட்டு 'அலங்கார்;'என்ற திரையரங்கு வந்தது.இதில் நான் பலபடங்கள் பார்த்திருந்தாலும் நினைவில் நிற்கும் படம் 'மெல்லத் திறந்தது கதவு'வெலிங்டன்

இன்று ஜெனரல் பேட்டர்ஸ் தெரு ஆரம்பத்தில் உள்ள வெலிங்டன் பிளாசா இருந்த இடத்தில் வெலிங்டன் திரையரங்கு இருந்தது.ஏ.வி.எம்., படங்கள் இங்கு பெரும்பாலும் வெளியாகும்.ஜெமினியின் ஔவையார்,வாழ்க்கைப்படகு ஆகியவை இங்கு வெளியானது.ஏ.வி.,எம்.,மின் சர்வர் சுந்தரம்,அன்னை ஆகிய படங்களும்..கலைஞரின் பூம்புகாரும் இத் திரையரங்கில் நான் பார்த்த நினைவில் நின்ற படங்கள்

சித்ரா
அண்ணாசாலையிலிருந்து புதுப்பேட்டை போகையில் பாலம் தாண்டி அமைந்திருந்த திரையரங்கம் சித்ரா..M.G.R., படங்கள் இங்குதான் வெளியாயின.தேவர் தயாரித்த படங்களில் பெரும்பான்மை இங்குதான் வரும்.தவிர்த்து பாசமலர் இந்த திரையரங்கில் தான் ஓடியது.இதயக் கமலம் இங்குதான் வெளியாகியது.தேவரைப் பொறுத்தவரை இது ஒரு ராசியான திரையரங்காய் அமைந்திருந்தது.இன்று பெரிய வர்த்தகக் கட்டிடம் இந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளதுஆனந்த், லிட்டில் ஆனந்த்சமீப காலத்தில் மூடப்பட்ட திரையரங்கம்.சாந்தி திரையரங்கை உருவாக்கிய உமாபதி..அதை சிவாஜியிடம் ஒப்படைத்தபின் கட்டிய திரையரங்கு இது.ஆரம்ப காலங்களில் ஆங்கிலப் படம் மட்டுமே திரையிடப்பட்டது.குட்,பேட்,அக்லி., ஃபைவ் மேன் ஆர்மி ஆகியவை இங்கு பார்த்தேன்.ராஜ ராஜ சோழன் ..உமாபதியால் தயாரிக்கப் பட்ட முதல் சினமாஸ்கோப் படம் இங்கு திரையிடப் பட்டது.

லிட்டில் ஆனந்த் என்னும் மினி தியேட்டர் ஆனந்தின் மாடியில் இருந்தது.ஆராதனா என்னும் ஹிந்தி படம் சக்கைப் போடு போட்ட படம் இத் திரையரங்கில்தான்சஃபைர்,புளு டைமண்ட்,எமெரால்ட்கிட்டத்தட்ட இதுதான் முதல் மல்டிபிள் தியேட்டர்காம்ப்ளக்ஸ்

எனலாம்.கிளியோபாட்ரா, லாரென்ஸ் ஆஃப் அரேபியா ஆகிய படங்கள் சஃபைரில் வந்தன.எமெரால்டில் ஹிந்தி படங்களும்,தமிழ் படங்களும் வெளியாகும்.புளு டைமண்ட் திரையரங்கில் ஆங்கிலப் படங்கள்..இதில் ஷோ டைம் எனக் கிடையாது..எப்போது வேணுமானாலும் போகலாம்.தொடர்ந்து படம் ஒடும்..எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம்.இந்த இடம் இப்போது தரைமட்டம்.அ.தி.மு.க., அலுவலகத்திற்காக வாங்கப்பட்டு..பின் ராசியில்லா இடமாகக் கருதப்பட்டு வீணாய் கிடக்கிறது.

கெயிட்டி
இத்திரையரங்கம் பழமையான ஒன்று.தியாக பூமி,போன்ற படங்கள் இங்கு வெளியாகியுள்ளன.எஸ்.பாலசந்தரின் பொம்மை இங்குதான் ஓடியது.இத்திரையரங்கு சமீபத்தில் மூடப்பட்டு...வர்த்தகக் கட்டிடம் வர உள்ளது

(தொடரும்)

12 comments:

ஸாதிகா said...

ராஜகுமாரி,நாகேஷ்,பிராட்வே,பிரபாத்,ராக்சி இப்படி இன்னும் எத்தனையோ இருந்தன.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நான் சொல்லியிருப்பவை அண்ணாசாலையில் மட்டும்..மற்ற இடங்கள் அடுத்த இடுகையில்
வருகைக்கு நன்றி

எஸ்.கே said...

இப்போதெல்லாம் பல திரையரங்குகள் திருமண மண்டபங்களாகவும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களாவும் மாறி வருகின்றன!

vasu balaji said...

கொசுவத்தி:)

Thamizhan said...

ஆரதனா படம் புளூ டயமண்டில் ஓடியதாக நினைக்கின்றேன். சின்ன இடம் ஆனால் படம் நீண்டநாள் ஓடியது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//எஸ்.கே said...
இப்போதெல்லாம் பல திரையரங்குகள் திருமண மண்டபங்களாகவும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களாவும் மாறி வருகின்றன!//
உண்மை
வருகைக்கு நன்றி எஸ்.கே.,

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
கொசுவத்தி:)

//

:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Thamizhan said...
ஆரதனா படம் புளூ டயமண்டில் ஓடியதாக நினைக்கின்றேன். சின்ன இடம் ஆனால் படம் நீண்டநாள் ஓடியது.//
வருகைக்கு நன்றி தமிழன்
ஆராதனா லிட்டில் ஆனந்தில்தான் ஓடியது.
நீங்கள் சொல்வது கயாமத் சே கயாமத் தக்

சகாதேவன் said...

சஃபைர்தான் முதல் 70எம்.எம் திரையரங்கு. SOUND OF MUSIC, MY FAIR LADY இரண்டும் அங்கு பார்த்தேன். இரண்டாவது 70எம்.எம் அரங்கு ஆனந்த். அங்கு EL SID.
சகாதேவன்

Simulation said...

மயிலாப்பூர் காமதேனு மற்றும் கபாலி.

அடையார் ஈராஸ்.

- சிமுலேஷன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சகாதேவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நான் சொல்லியிருப்பவை அண்ணாசாலையில் மட்டும்..மற்ற இடங்கள் அடுத்த இடுகையில்
வருகைக்கு நன்றி Simulation