Thursday, November 18, 2010

அவளின்றி நானில்லை (கவிதை)

மனதைக் கவர்ந்தவள்

சிவந்த மேனியாள்

அன்றன்று

அலுவலகம் செல்கையில்

தரிசனம் தருபவள்

நேரம் தவறினால்

போக்குக் காட்டிடுவாள்

கிளம்பும் முன்

அழகாக குரல் கொடுப்பாள்

வாழ்வில்

அவளின்றி நானில்லை

நானின்றி அவளுண்டு

தொடர்வண்டி

பெண்பாலாமே

6 comments:

நசரேயன் said...

//பெண்பாலாமே//

ம்ம்ம்

'பரிவை' சே.குமார் said...

ம்ம்... நல்லாயிருக்கு.

vasu balaji said...

தொடர்வண்டி கோச்சுக்கப் போறது..பச்சை, மஞ்சள், நீலத் தொடர்வண்டியும் நானு சார்னு:))

Unknown said...

தொடர் வண்டி கண்டிப்பாக பெண்பால்தான் ...

ஹேமா said...

கொண்டிழுப்பவள்...
அதனால் பெண்பாலோ !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
நசரேயன்
சே.குமார்
Bala
கே.ஆர்.பி.செந்தில்
ஹேமா