180 உலகநாடுகளில் 120 சத்யசாய் பாபா மையங்களை அறக்கட்டளை நிர்வாகத்தில் நிர்வகித்து வருகிறது.இரண்டு பள்ளிகள்,மருத்துவ மனைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
40000 கோடி அளவிளான சொத்துக்களைக் கொண்டுள்ள சாய்பாபாவிற்கு சொந்தமான சத்யசாய் அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.அந்த நிர்வாகத்தை ஆந்திர மாநில அரசு எடுத்துக் கொள்ள பரிசீலித்து வருகிறது.
சாய்பாபா குடும்பத்திற்கும்,ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த முடிவுக்கு ஆந்திர அரசு வந்துள்ளது.
சாய்பாபாவின் உடநிலைக் குறித்தும் அறக்கட்டளை தெளிவான அறிக்கையும் வெளியிடுவதில்லை.
இந்நிலையில்தான் ஆந்திர அரசு அதிகாரிகள்,மருத்துவர்கள் கொண்ட ஐந்து பேர் கொண்ட குழுவை புட்டபர்த்திக்கு அனுப்பியுள்ளது.இவர்கள் அறக்கட்டளையின் சொத்துக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த அறக்கட்டளை நிர்வகிக்கும் நிறுவனங்கள்..
புட்டபர்த்தி,பெங்களூரு ஆகிய இடங்களில் மருத்துவமனைகள்
பல்கலைக்கழகம்
பிளானட்டேரியம்
ரயில்வே நிலையம்(பராமரிப்பு)
கிரிக்கெட் ஸ்டேடியம்
இசைக்கல்லூரி
விமானநிலையம் (பராமரிப்பு)
உள்ளரங்க விளையாட்டுஅரங்கம்
திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளையையும் 1966ல் அரசு இப்படித்தான் கையகலப்படுத்தியது
9 comments:
உண்மைதாங்க...
இவரை நாம எப்பவும் நினைக்கனும்
கிருஷ்ணா நீர் தமிழகம் வர இவர் நிறை உதவியிருக்கார்..
மாநில அரசு எடுத்துக் கொள்வது தான் சரி ! இல்லாவிடின் தேவையில்லாத குற்றங்களின் கூடாரமாய் அது மாற வாய்ப்புள்ளது
நம்ம தமிழ்நாட்டுலயும் இப்பிடி பண்ணுனா நல்லா இருக்குமே...
ஆண்டி போனாலும் திண்ணை மட்டும்
காலிஆகாதுாப்பே.
வருகைக்கு நன்றி
பாட்டு ரசிகன்
வருகைக்கு நன்றி இக்பால் செல்வன்
வருகைக்கு நன்றி இக்பால் செல்வன்
வருகைக்கு நன்றி Mano
வருகைக்கு நன்றி வலிபோக்கன்
Post a Comment