கோஷ்டிப் பூசல் தமிழக காங்கிரஸ் கட்சியில் நாளும் இருந்து வருவதுதான்..
ஆனால்..தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவருக்கு இவ்வளவு எதிர்ப்பு இருப்பது இதுவே முதன்முறை என எண்ணுகிறேன்.
ஆம்...மயிலை திடீர் வேட்பாளராக மாறிய தங்கபாலு வைத்தான் சொல்கிறேன்.
அவருக்கு எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில்..நேற்று மட்டும் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து 19 பேரை நீக்கம் செய்துள்ளார்.
நீண்ட நாளாக காங்கிரஸில் இருந்து வரும் மூப்பனாரின் விசுவாசியாய் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., கராத்தே தியாகராஜன் அவற்றில் ஒருவர்.இவரும் மயிலை தொகுதியில் வேட்பாளராக விருப்பம் தெரிவித்தவர்.
அடுத்தவர் எஸ்.வீ.சேகர்..நாடகம் நடத்திக் கொண்டிருந்த இவர் சுயேச்சையாய் போட்டியிட்டு டிபாசிட் இழந்தவர் ஒரு காலத்தில்.இவரை எம்.எல்.ஏ.,வாக்கினார் ஜெ.பின் இவர் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட பின்..தி.மு.க., வை நெருங்கினார்..பின் என்ன நடந்தது எனத் தெரியாது..தில்லிச் சென்று ராகுல் காந்தியைச் சந்தித்தார்.பின்னர் தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டார்.இவரும் மயிலையில் வேட்பாளர் ஆக முயற்சித்தார்.
இவரைத்தவிர இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த விஜயசேகர், மற்றும் 17 பேரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் பாலு.
ஒருபுறம் ராகுல் இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் நிலையில்..தங்கபாலுவின் இந்த நடவடிக்கை அவரின் எதேச்சாதிகார போக்கையேத் தெரிவிக்கிறது.
காங்கிரஸிலிருந்து இவர் தூக்கி எறியப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை
13 comments:
ஹா ஹா உங்க வாய்க்கு சர்க்கரைதான் போடனும் எஸ் வி சேகரை கட்சியை விட்டு நீக்கீட்டாங்க..
//அடுத்தவர் எஸ்.வீ.சேகர்..நாடகம் நடத்திக் கொண்டிருந்த இவர் சுயேச்சையாய் போட்டியிட்டு டிபாசிட் இழந்தவர் //
பானை சின்னம், 288 ஓட்டுகள் கிடைத்தது என்று நினைக்கிறேன்
//ஹா ஹா உங்க வாய்க்கு சர்க்கரைதான் போடனும் எஸ் வி சேகரை கட்சியை விட்டு நீக்கீட்டாங்க..//
ஹா...ஹா...
//ஹா ஹா உங்க வாய்க்கு சர்க்கரைதான் போடனும் எஸ் வி சேகரை கட்சியை விட்டு நீக்கீட்டாங்க..//
ஹா...ஹா...
/ அடுத்தவர் எஸ்.வீ.சேகர்.// எல்லாமே நாடகம் தான்.
மிக மிக அவசரம்.. முகநூல் மற்றும் மின்னஞ்சல் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.. தயை கூர்ந்து மேற்கண்ட இணைப்பில் கொடுங்கோலன் இராஜபக்சேவுக்கு எதிராக அனைவரும் வாக்களிக்கவேண்டும்...அவன் தான் ஒரு நல்ல உலகத்தலைவர் போர்வையில் நுழைய வாக்கு கேட்டு டைம் இதழில் பங்கேற்கிறான்... வாக்களிப்பீர் அவனுக்கு எதிராக குழந்தைகளை கொன்ற கொடூரன் ஒழந்து போக நல்ல உலகை விட்டு.
http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html?xid=fb-time100
தங்கபாலுவை இத்தனை நாள் விட்டுவைத்திருப்பதே தவறு தான் ...கட்சி மேலிடம் ஏனோ சும்மா இருக்கிறது .எஸ் வி சேகர் சுயேச்சையாக போட்டியிட்டு அவரை எதிர்த்து நின்ற நாவலர் நெடுஞ்செழியனை விட அதிகம் வாக்குகள் பெற்றார் .
வருகைக்கு நன்றி செந்தில்குமார்
வருகைக்கு நன்றி
கோவி.கண்ணன்
வருகைக்கு நன்றி கே.ஆர்.பி.செந்தில்
வருகைக்கு நன்றி kama
வருகைக்கு நன்றி ஜெரி ஈசானந்தன்.
வருகைக்கு நன்றி பூங்குழலி
Post a Comment