ஒவ்வொரு நாட்டிலும் ஊடகங்கள் ஆற்றும் பணி அளப்பறியது.
ஒரு நாட்டின் தலையெழுத்தையேக் கூட ஊடகங்களால் மாற்றியமைக்க முடியும்.
அப்படிப்பட்ட ஊடகங்கள் இன்று மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் செயல்படுகின்றனவா....
இன்றைய இரு தினசரிகளில் ஒரே செய்தி எப்படி..எப்படி வந்திருக்கிறது பாருங்கள்...
தமிழ் தினசரிகள் விற்பனையில் நம்பர் ஒன் என சொல்லிக் கொள்ளும் தினகரனில் வந்துள்ள ஒரு செய்தி..
"ஜாம்பஜாரில் பணப்பட்டுவாடா..அதிமுக. உறுப்பினர் சிக்கினார்
ஜாம்பஜாரில் வாக்காளர்களிடம் பணம் பட்டுவாடா செய்த அதிமுக உறுப்பினர் சிக்கினார்.அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
ஜாம்பஜார் பகுதியில் சிலர் வாக்காளர்களைக் கவர பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.அதன்படி அதிகாரி ராமானுஜம் தலைமையில் சென்ற தேர்தல் அதிகாரிகள் ஜாம்பஜார் முழுதும் அதிரடி சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது சிலர் ஜெஜே கான் தெருவில் மெழுகுவர்த்தி பெட்டியில் ரூ.500,1000 வைத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சிலர் பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தவர்களை பிடிக்க முயன்றனர்.4பேர் தப்பி ஓடிவிட்டனர்.ஒருவர் மட்டும் சிக்கினார்.அவரை ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், பிடிபட்டவர் பெயர் பாட்ஷா.இவர் அதிமுக வைச் சேர்ந்தவர் என்றும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.
இதே செய்தி
India's National Newspaper since 1878
என முகப்பில் போட்டுக் கொள்ளும்.."The Hindu" பத்திரிகையில் வந்த செய்தி
Held For distributing Money
Police on Friday detained a DMK functionary on charges of distributing money to voters.
election officials received information that a DMK funcionary was distributing money to voters in the Chepauk-Thiruvallikkeni assembly constituency on Friday.A flying squad team rushed there anad found Batcha in possession of some covers each containing Rs 1000 denomination meeting people of JJ khan Road.
On his information, police searched the office and residential premises of another DMK funcionary.Another person whose name was also Batcha who claimed to be a DMK funcionary was also detained for being in possession of some covers containing Money.
The two were taken away for interrogation
யாரை நம்புவது...
11 comments:
HAA HAA .... ALL R BUISNESS
தினத்தந்தில திமுகனு போடாம அண்ணாதிமுக உறுப்பினர்கள் கைது செய்யக் கோரி போராட்டம் நடத்தினர்னு வந்தது. புரிஞ்சிக்கணுமாம்:))
வருகைக்கு நன்றி Bala
வருகைக்கு நன்றி
சி.பி.செந்தில்குமார்
ரொம்ப கஷ்டம்..
நம்மளே இவ்வளவு குழம்பி போறேமே, அப்ப பாமரர்களின் கதி?
(ஓ ! இப்படி தேர்தல் சமயத்துல மக்களை குழப்பலாம்னு தான் டிவி கொடுத்தாங்களோ?)
யாரையும் நம்பாதீர்கள்....
அதிலும் தமிழக ஊடகங்கள்?????
வருகைக்கு நன்றி Nagasubramanian
வருகைக்கு நன்றி goma
வருகைக்கு நன்றி கே.ஆர்.பி.செந்தில்
தினகரன் பேப்பரையா இன்னமும் நம்பிகிட்டு இருக்கீங்க..... ஐயோ ...ஐயோ.... அண்டப் புளுகு, ஆகாச புளுகு, அப்புறம் தினகரன் செய்தி....இதெல்லாம் ஒண்ணுதான். நீங்க கொடுத்திருப்பதில் ஹிந்து செய்தி உண்மையாக இருக்குமென நினைக்கிறேன், என்னா, அம்மா ஆட்சி போயி ரொம்ப நாளாகுது, குடுக்குறது காசு இருக்குதோ இல்லையோ, ஆனா தி.மு.க. இப்பத்தான் நிறைய கொள்ளையடிச்சு வச்சிருக்கானுங்க, செலவும் பண்ணுவானுங்க. இன்னொன்னு இவனுங்க கொண்டு போகும் பணம் மாட்டிக் கொண்டால் விட்டுவிட்டு ஓடிப் போயிட்டு, அது ஜெயா கட்சியோடதுன்னும் வாய் கூச்சம சொல்லுவானுங்க. பொய்யை நிஜம் போல பேசிப் பேசியே ஏமாத்தி உருவான புலுகனுங்க, இவனுங்கலையோ இவனுங்க பேப்பர் எதையுமோ நம்ப வேண்டாம்.
Post a Comment