அநியாயமாய்
செத்துக் கிடக்கிறார்கள்
அப்படியா..!
தெரியவில்லையே..!
அப்பாவி மக்கள்
லட்சக்கணக்கில் ஊனமடைந்ததைப் பார்
அப்படியா..!
தெரியவில்லையே..!
தமிழ்ப் பெண்கள்
கற்பழிக்கப் பட்டுள்ளதையாவதுப் பார்
அப்படியா..!
தெரியவில்லையே..!
குழந்தைகள் பெற்றோரை இழந்து
பரிதவிப்பதைப் பார்
அப்படியா..!
தெரியவில்லையே..!
கூட்டணிக் கண்ணாடியைக்
கழட்டிவிட்டுப் பார்..
ஐயகோ..!!
என் மக்கள்
கொல்லப்பட்டனரே!
என் மக்களைக் கொன்றவனை
கூண்டில் ஏற்றுங்கள்..
இதுவே என் முடிவு..
என் மக்களை
கூண்டில் ஏற்றாமல் இருந்தால்
முடிவை
மறு பரிசீலனை
செய்கிறேன்..!!
7 comments:
கண்ணாடி நல்ல கலை அம்சமாக இருக்கிறது
பளார் பளார்..
:))))
//கூட்டணிக் கண்ணாடியைக்
கழட்டிவிட்டுப் பார்..
ஐயகோ..!!
என் மக்கள்
கொல்லப்பட்டனரே!
என் மக்களைக் கொன்றவனை
கூண்டில் ஏற்றுங்கள்..
இதுவே என் முடிவு..///
சரியான பளீர் சாட்டையடி.....
மிகச் சிறந்த வரிகள். ஆனால் அந்தக் (கருப்பு) கண்ணாடியை போட்டு தானே பலரை ஏமாற்றுகிறார்கள்
Nice
நல்ல பகடி. அருமையான கவிதை. நன்றி தோழர்.
Post a Comment