Monday, April 11, 2011

நான் தி.மு.க., தான் ..ஆனாலும் நான் இம்முறை வாக்களிக்கப் போவதில்லை...நான் தி.மு.க., அனுதாபி..

இது நாள் வரை தி.மு.க., விற்கே வாக்களித்து வந்துள்ளேன்.

இம்முறை..தி.மு.க., பல தவறுகள் இழைத்திருந்தாலும்... காமன் மேன் அதனால் பாதிக்கப் படவில்லை.

இலங்கைத் தமிழர் பிரச்னையில்...கலைஞரை..வரலாறு மன்னிக்காது..

ஆனாலும்...அவரைத்தவிர முதல்வர் பதவியில் யார் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள்.

பதவியில் தொடர்ந்து இருக்க காங்கிரஸ் கட்சியை விரோதித்துக் கொள்ள கலைஞர் தயாராய் இல்லை..ஏனெனில் அடுத்தக் கட்சி..வடையைக் கவ்வ வாயைத் திறந்து காத்துக் கொண்டிருந்தது.

காங்கிரஸ் மட்டுமே இலங்கைப் பிரச்னையில் தமிழர்களை காப்பாற்றி இருக்க வேண்டும்.காப்பாற்றி இருக்க முடியும்..

அவர்கள் செய்த துரோகத்தை மன்னிக்க முடியாது..

ஆகவே..காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் ..காங்கிரஸை தோற்கடிப்போம்..

வள்ளுவனின்..'குணம் நாடி..குற்றம் நாடி' குறள் படி பார்த்தால்..குற்றத்தைவிட குணம் தி.மு.க., பக்கம் சற்று அதிகமாகவே சாய்வதால்..தி.மு.க.,வையே நான் ஆதரிக்கிறேன்.

ஆனாலும் நான் இம்முறை வாக்களிக்கப் போவதில்லை..

காரணம்..

நான் சார்ந்துள்ள வேளச்சேரி தொகுதியில் பா.ம.க., நிற்கிறது..

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் தன் கலரை மாற்றிக்கொண்டிருக்கும் அக்கட்சிக்கு வாக்களிக்க மனம் ஒப்பவில்லை.

ஆகவே இம்முறை என் வாக்கு வீணாகப்போகிறது.

20 comments:

சி.பி.செந்தில்குமார் said...

சரி.. 49 ஓ வுல ஓட்டு போடுங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

நான் ஏன் ரிஜிஸ்டரில் எல்லாம் எழுதி கையெழுத்திட வேண்டும்.வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே வசதி செய்துக் கொடுத்திருக்கலாமே

nigdyn said...

SarathBabu nu oru candidate nikkiraaru....Try to read abt him...

T.V.ராதாகிருஷ்ணன் said...

nigdyn pl.visit

http://tvrk.blogspot.com/2009/04/blog-post_6874.html

udai said...
This comment has been removed by the author.
udai said...

வாக்கு பதிவு இயந்திரத்தில் 49O பொத்தான் வைப்பது அவங்களுக்கு அவங்களே ஆப்பு வெச்சிகரதுன்னு அவங்களுக்கு தெரியும்.

கோவி.கண்ணன் said...

//ஆகவே இம்முறை என் வாக்கு வீணாகப்போகிறது.//

தொடர்ந்து இரண்டாம் முறையாக ன்னு சொல்லுங்க
:)

MANO நாஞ்சில் மனோ said...

அடப்பாவமே.....பத்தாயியம் நஷ்டமாச்சே....

அமைதி அப்பா said...

இப்படி சொல்லிட்டா எப்படி? அவசியம் நீங்க ஓட்டுப் போடனும் சார். ஏன்னு கேட்டிங்கன்னா.... என்னுடைய பதிவ படிச்சுட்டு, அப்புறம் சொல்லுங்க சார்.

விவசாயம் செய்வோம், வாருங்கள்...!

நன்றி.

pozhthupoku said...

ellame.. vayila tharamattanga sir.. venumna nammathan eduthu pottu sapdanum...

கே.ஆர்.பி.செந்தில் said...

சுயேட்ச்சைக்கு வாக்களியுங்கள் ஐயா..

ராஜ நடராஜன் said...

நீங்க தி.மு.கன்னு பாராளுமன்றத் தேர்தல் நேரத்திலே தெரியுமே:)

திரவிய நடராஜன் said...

அப்ப நீங்களும் என்ன மாதிரியே ஓட்டு போடப்போவதில்லையா?

அருள் said...

பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html

ARUNMULLAI said...

தமிழில் நுட்பமான சொல்வளம்
அறிந்தவர் அறிவர். களவு,திருட்டு,
கொள்ளை என்ற சொற்களின் பொருள்
வேறுபாடு.திருட்டின் தீவிரத்தைப்
பொருத்து பொருள் வேறுபடும்.

தமிழ்நாட்டு அரசியலில் இம்மூவருமே
இருக்கின்றனர்.ஆனால் பொருளைப்
பறிகொடுப்பவர் என்னசெய்ய வேண்டும்,என்று திருடனே அச்சுறுத்திவிட்டுப் போகிறான்,
'மீண்டும் எனக்கே வாய்ப்புகொடு,

குறும்பன் said...

வேளச்சேரி என்றால் மக்கள் சக்தி கட்சியின் (விசில்) செந்தில் ஆறுமுகத்திற்கு வாக்களியுங்கள்.

கட்சி பார்த்து வாக்கு போடுவது தவறு. தொகுதியில் நிற்கும் நபரை வைத்து தான் வாக்கு போட வேண்டும்.

KARMA said...

"ஆனாலும்...அவரைத்தவிர முதல்வர் பதவியில் யார் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள்."

என்ன கொடுமை இது?
சீமான், வைகோ முதல்வராக இருந்தால் செய்திருப்பார்களா ? (சும்மா ஒரு பேச்சுக்காக சொல்லுங்க).


"பதவியில் தொடர்ந்து இருக்க காங்கிரஸ் கட்சியை விரோதித்துக் கொள்ள கலைஞர் தயாராய் இல்லை..ஏனெனில் அடுத்தக் கட்சி..வடையைக் கவ்வ வாயைத் திறந்து காத்துக் கொண்டிருந்தது."

வாழ்கையில் எதையுமே ஆண்டு அனுபவிக்காத ஒரு வயசு. பாவம் ....85 வயசுதான், எப்படி இந்த இழப்பை தாங்க முடியும் ?
ஓ.....ஒங்க வீட்ல எழவு, தாய் , தங்கச்சிய நாசம் பண்றாங்களா ? அதுக்கு இவர் என்ன பண்ணுவார் பாவம். யார் இருந்தாலும் இத தான் செய்வாங்க....

- இப்படி ஒரு விளக்கமும் இன்னொரு தமிழன்கிட்டேருந்து வரது-தான் இன்னும் பொறுக்கமுடியாத துர்-நாற்றம்.

ELANGOVAN said...

///என்ன கொடுமை இது?
சீமான், வைகோ முதல்வராக இருந்தால் செய்திருப்பார்களா ? (சும்மா ஒரு பேச்சுக்காக சொல்லுங்க). ///
definetly they both would have done.
1) Jaya is the one put VAIKO in POTA for LTTE support. but later Mr.vaiko has become her servant for 6 yrs. just for seats. for CM posts he can do anything.

2)Mr.Seeman - his campaigning for Jaya/Vijayakanth
ஜெயா: போர் என்றல் மக்கள் இறப்பர். பிரபாகரன் கொலை குற்றவழி, கைது செய்து இந்திய கொண்டு வர வேண்டும்.
விஜயகாந்த்: இந்திய இலங்கைக்கு ஆயுதம் தருவது வியாபாரம்.

இது போன்ற பொன்மொழி உதித்தவர்களுக்கு சப்போர்ட் சேயும் சீமான், CM அக இருந்தால் இன்னும் என்ன வெள்ளம் செய்வர்.
விஜய் ராகுலை சந்தித்ததை எல்லாம் மறந்து, ஒரு பட சான்சுக்காக, விஜய் போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு வரணும் என்று ஜால்ரா போட்ட சீமான். CM பதவிக்கு இன்னும் கூட கீழே போவர்.

ELANGOVAN said...

if you are a DMK supporter, you should vote for PMK. you have to be truthful to your alliance.

ஜெரி ஈசானந்தன். said...

ஐயா..நீங்க அடிக்கிற அடி அதிரடியாவுல இருக்கு...கலக்கல்ஸ்.உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு.