Monday, April 4, 2011

வடிவேலு பிரச்சாரம் செய்ய தகுதியானவரா....

இன்று..இல்லை..இல்லை..
திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு..கலைஞர்களின் கட்சி பங்கு அதிகரித்துள்ளது குறித்து மகிழ்ச்சியே..
இவர்கள் கட்சியில் ஈடுபடலாமா? என்ற வினாவிற்கு..இவர்களும் இந்திய குடிமகன்களே..ஆகவே..அதற்கான தகுதி கண்டிப்பாக இவர்களுக்கு உண்டு என்பதே பதில்..
அந்த நாளில்..தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன்...கே.ஆர்.ராமசாமி.எஸ்.எஸ்.ஆர்., எம்.ஜி.ஆர்., போன்றோர் கட்சி வளர்ச்சியில் ஆர்வம் காட்டி உழைத்தனர்.எம்.ஆர்.ராதா..கடைசிவரை பெரியார் கொள்கைகளை பின்பற்றியதுடன்..தி.மு.க., விற்கும் ஆதரவாய் இருந்தார்.என்.எஸ்.கிருஷ்ணனும்..படங்களிலும்..மேடைகளிலும் தி.மு.க., வை ஆதரிப்பது போல பேச்சுகளை வைத்தார்.
இவ்வளவு கலைஞர்கள் இருந்தாலும்..அவர்கள் பேச்சில்..கண்ணியம் இருந்தது..தனி நபர் தாக்குதல் இல்லை..ஆபாசம் இல்லை..
ஆனால் இன்று...
சிரிப்பு நடிகர்கள் கட்சிக்கு ஆதரவு கூட்டத்தில் பேசினால்..கண்ணியத்தைக் காணமுடியவில்லை..ஆபாசத்தை அவர்களால் தவிர்க்க முடியவில்லை.தனிநபர் தாக்குதல்..தனி நபர் விரோதம் என கட்சியை தன் தனி நபர் விரோத போக்கிற்கு பயன் படுத்திக் கொள்கின்றனர்.
இந்த கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தவர் மறைந்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரன்..இவர் பேசுகையில் கலைஞரை தனிப்பட்டமுறையில் கேவலமாக பேசியுள்ளார்.
இன்றைய நிலையில்...
வடிவேலு பேசுகையில்...விஜய்காந்தை தனிப்பட்ட விரோதம் காரணமாக மனம் போன போக்கில் பேசி வருகிறார்.எல்லோரும் சேர்ந்து விஜய்காந்தை ஒரு குடிகாரன் என்ற அளவிற்கு முத்திரை குத்தி விட்டார்கள்.
வடிவேலுவிற்கு எதிராக அ.தி.மு.க., அணியில் சிங்கமுத்து என்ற நடிகரை களம் இறக்கியிருக்கிறார்கள்.இவர் நகைச்சுவை நடிகர் எனத் தெரியும்..ஆனால் வடிவேலுவிடம் பகை ஏற்பட்ட பின்னரே இவர் பெயர் சிங்கமுத்து என மக்களுக்குத் தெரியும். வடிவேலு சொல்வதற்கு பதில் சொல்லவே இவரை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.இவரும் மற்ற எதையும் பேசாது..வடிவேலு படத்தில் விஜய்காந்த் காலை அமுக்கினார்...இவர் மாலை 6 மணிக்கு என்ன செய்வார் எனத் தெரியும்..11 மணிக்கு என்ன செய்வார் தெரியும்..அதை அம்பலப்படுத்துவேன் என்ற ரேஞ்சில் பேசி வருகிறார்.
சமீபத்தில் கட்சியுல் இணைந்த பூ நடிகை..முன்னாள் முதல்வராய் இருந்த ஜெ வை ப் பற்றி உனக்கு என்ன தெரியும் என்ற அளவில் பேசி வருகிறார்.
தமிழ் பேசக்கூடத் தெரியாத இவர் இன்று நான் ஒரு தமிழச்சி என்கிறார்.
மொத்தத்தில் இன்று தேர்தல் கூட்டம் எல்லாவற்றிலும்..சாதனைகளைப் பற்றியும்..சாதிக்கப் போவதைப் பற்றியும் மட்டுமே பேசி வந்த நிலைப் போய் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையை கேவலமாக பேசும் நிலை ஏற்பட்டதை எண்ணினால் ..
இன்றைய பேச்சாளர்கள் பிரச்சாரம் செய்ய தகுதியானவர்களா? என்ற ஐயம் அதிகரிக்கிறது.

16 comments:

Chitra said...

மொத்தத்தில் இன்று தேர்தல் கூட்டம் எல்லாவற்றிலும்..சாதனைகளைப் பற்றியும்..சாதிக்கப் போவதைப் பற்றியும் மட்டுமே பேசி வந்த நிலைப் போய் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையை கேவலமாக பேசும் நிலை ஏற்பட்டதை எண்ணினால் .........இந்த நிலையை சகஜமாக மக்களும் ஏற்று கொள்வது இன்னும் வேதனைக்குரியது.

Prakash said...

For people like Vijaykant, Vadivel is needed

goma said...

மொத்தத்தில் வடிவேலு நல்ல நகைச்சுவை நடிகர் என்ற தன் மரியாதையை இழந்துவிட்டார்.

Unknown said...

மேடை கிடைத்தால் எவ்வளவு கேவலமாக வேண்டுமாலும் பேசலாம் என நினைக்கும் வடிவேலு போன்றவர்கள் தகுதியற்றவரே...

Anonymous said...

அவையடக்கம் இல்லாதவர்கள் தான் இந்த சினிமாக் காரர்கள் என்பதை வடிவேலு, குசுப்பூ, விசயகாந்த ஆகியோர் நிரூபித்துவிட்டனர்........ இந்த நாட்டினைப் பிடித்துக் கொண்ட புதிய பீடைகள் .........

MANO நாஞ்சில் மனோ said...

//சமீபத்தில் கட்சியுல் இணைந்த பூ நடிகை..முன்னாள் முதல்வராய் இருந்த ஜெ வை ப் பற்றி உனக்கு என்ன தெரியும் என்ற அளவில் பேசி வருகிறார்.
தமிழ் பேசக்கூடத் தெரியாத இவர் இன்று நான் ஒரு தமிழச்சி என்கிறார்.//

என்னத்தை சொல்லி அழ வேதனையா இருக்குது...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//எம்.ஆர்.ராதா..கடைசிவரை பெரியார் கொள்கைகளை பின்பற்றியதுடன்..தி.மு.க., விற்கும் ஆதரவாய் இருந்தார்//

துவக்கத்தில், நடுவில், முடிவில் எப்போதுமே அவர் திமுகவை எதிர்க்கவில்லையா ஐயா, நீங்கள் சொல்வதை அப்படியே நம்ப நாங்கள் தயாராக இருக்கிறோம்.

Unknown said...

தனிநபர் தாக்குதரை முதலில் தொடங்கியது திமுக தான் ... எம்.ஜி.ஆரை முதலில் அட்டைகத்தி என்று தொழில் ரீதியாக மட்டமாக விமர்ச்சித்தனர். மிக மட்டமான பேச்சளார்கள் அனைவரும் கருணாநிதி வாயிலிருந்தே புறப்பட்டார்கள். இவர் பரவி விட்ட வைரஸ்களே இப்படி பல்பெருகி இருக்கிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Prakash

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.பி.செந்தில்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இக்பால் செல்வன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Kama

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வீராங்கன்