Friday, September 16, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (16-9-11)
1)கனிமொழி மீதான ஜாமீன் மனு பற்றிய விசாரணையை தள்ளிவைத்தது குறித்து கலைஞர் கருத்து தெரிவிக்கையில்..இதில் அரசியல் நோக்கம் இருப்பது போல தெரிகிறது என்றுள்ளார்.
அப்படியாயின்..நில அபகரிப்பு கைதுகள் மாநில அரசால் பொய் வழக்குகள் என்னும் போது..கனிமொழி விவகாரம்..மத்திய அரசு..காங்கிரஸை மறைமுகமாக கழகத்தை அழிக்க சி.பி.ஐ., யை உபயோகப்படுத்துகிறது என்கிறாரோ?

2)திகார் ஜெயிலில் அரசியல்வாதிகள் அதிகரித்து வருவதைக் கிண்டல் செய்யும் நோக்கில் காஷ்மீர் முதல்வர் ஒமர்..டுவிட்டர் இணைய தளத்தில்'திகார் ஜெயிலில் உள்ளவர்கள் சேர்ந்து கட்சி ஆரம்பித்தால் அந்தக் கட்சிக்கு எந்த சின்னத்தை தேர்ந்தெடுப்பார்கள்?!" என கிண்டல் செய்துள்ளார்.

3)டெலி ஷாப்பிங் என்று கூறி..வழுக்கை தலையில் முடி வளர பிரேசிலில் தயாரிக்கப் பட்ட ஹேர் ஆயில் என்றும்..சனிப்பார்வையிலிருத்து தப்பிக்க தாயத்து,விளக்கு என்றும்..ஒரே வாரத்தில் தொப்பையைக் குறைக்க வழி சொல்வதாயும்,ஜாதகத்திற்கு தேவைக்கேற்ப கிரஹங்களை ஆக்டிவேட் செய்யலாம் என்றும்,அதிருஷ்டக் கல் என்றும் ஊரை ஏமாற்றும் விளம்பரங்கள் சமீபகாலமாக அதிகம் வர ஆரம்பித்து விட்டன.இவ் விளம்பரங்களுக்கு சேனல் பொறுப்பு அல்ல என்றாலும்..இது போன்றவற்றிற்கு சேனலில் ஏன் ஸ்லாட் அல்லாட் பண்ண வேண்டும்.

4)தமிழகத்தில் 1.36 கோடி வாகனங்கள் தெருவில் பயணிப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.அதற்கு தேவையான அளவு தெருக்கள் வசதி இல்லாததால் தான் டிராஃபிக் ஜாமும்..ஒரு இடத்தைக் கடக்க மணிக்கணக்கான நேரமும் ஆகிரது

5)கலைஞரை இளங்கோவன் 'செல்லாக் காசு என்றும்..அவர் பேசுவதை தமிழர்களும் நம்பவில்லை..சிங்களவர்களும் நம்பவில்லை என்றுள்ளார்

6)பரமக்குடியின் நிகழ்ச்சிகள் சாதிய மோதல் அல்ல..இரு சாதி மக்களா மோதிக் கொண்டார்கள்? காவல்துறையினரின் அராஜகப்போக்கே காரணம்.காவல்துறை சற்று ஜாகிரதையாக செயல்பட்டிருந்தால் துப்பாக்கி சூட்டையே தவிர்த்திருக்கலாம் என்றே தோன்றுகிறது

7)தமிழக சட்டசபையில் திருக்குறளை கேட்டுவிட்டு வெளிநடப்பு செய்துவிட்டோம் என்றனர் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்..
 அண்ணா முதல்வராய் இருந்த போது..பேருந்தில்..
 'யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
 சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு'..
இக்குறள் யாருக்காக எழுதப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அண்ணா..'யார் யாருக்கெல்லாம் நாக்கு இருக்கிறதோ..அவர்கள் அனைவருக்கும் இக்குறள் பொருந்தும்' என பதில் சொன்னார்.

8)1938 ஆம் ஆண்டு சென்னையில் மகளிர் மாநாடு நடந்தது.அதில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேறி..ஈ.வெ.ரா., விற்கு அளித்த பட்டமே 'பெரியார்'

9)முன்னோக்கி வருபவர்களை தோற்றவர்களாக ஆக்கும் ஒரே விளையாட்டு 'டக் ஆஃப் வார்' என்னும் கயிறு இழுக்கும் போட்டி.

10)தலைமுறை இடைவெளி என்கிறோமே..அப்படியென்றால் என்ன? ஒரு தலைமுறை என்பது 30 ஆண்டுகள் ஆகும்..

8 comments:

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

மொத்தமா ஒரு செய்தித்தாள் வாங்கி படித்த மாதிரி இருக்கு . உண்மைதானோ !?

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆம்..பத்திரிகைகளிலும்..செய்தித்தாள்களிலும் வந்த செய்திகள்/நிகழ்வுகளின் தொகுப்பே தேங்காய்..மாங்காய்..

Ponchandar said...

இது போன்றவற்றிற்கு சேனலில் ஏன் ஸ்லாட் அல்லாட் பண்ண வேண்டும்.---------------

சேனலின் வருமானம் அதில் உள்ளதே ! ! ! துட்டுப்பா துட்டு......

பித்தனின் வாக்கு said...

last two news are realy unknown. Thanks to share

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ponchamdar

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பித்தனின் வாக்கு

Kannan said...

மிகவும் அருமையான செய்தி தொகுப்பு.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Kannan