காலை அலுவலகம் கிளம்பும் வரை குழந்தை அனு எழுந்திருக்கவில்லை .
குழந்தைக்குத் தேவையான பால்,டயப்பர்,மாற்று உடை எல்லாம் எடுத்து வைத்தாள் கீதா.
சேகர்..அவளையையும், தூங்கும் அனுவையும் காரில் அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
கிரச் சில் குழந்தையை விட்டு விட்டு..வந்த கீதாவை அவள் அலுவலகத்தில் இறக்கிவிட்டு தன் அலுவலகம் சென்றான் சேகர்
மாலை தான் அலுவலகத்திலிருந்து திரும்ப நேரம் ஆகும் என்ப
தால்..கீதாவை மாலை ஒரு ஆட்டோ பிடித்து கிரச் சிற்குப் போய் அனுவையும் தூக்கிக் கொண்டு வீடு செல்லச் சொல்லிவிட்டான்.
அனுவும்..மாலை கிரச் சில் ஆட்டோவை நிறுத்திவிட்டு..குழந்தையை அழைத்துவரச் சென்றாள்.
குழந்தை ஆயாவின் மடியில் படுத்து விளையாடிக் கொண்டிருந்தது.இவள் கூப்பிட்ட போது வர மறுத்து அழுதது.
"அனுகுட்டி..இது உன் அம்மாடா..சமர்த்தா அம்மா கிட்ட போ' என கொஞ்சினாள் ஆயா..
கீதாவிற்கு விழியோரம் நீர்..
'அப்பாவையே..அம்மாதான் குழந்தைக்கு அறிமுகம் செய்கிறாள்..என்பார்கள்..ஆனால்..இன்று கிரச் ஆயா குழந்தைக்கு அதன் அம்மாவை அறிமுகப் படுத்துகிறாளே'என்று மனதிற்குள் விம்மினாள்.
(மீள் பதிவு)
14 comments:
arumai sir
நல்ல கதை
அருமையான கதை,,
ஆயா மடியில் ,உறங்கி ,ஆத்தாவை மறந்த குழந்தை ,கண்டு கொண்டது ஒரு ’ஆயாத்தா ’
வருகைக்கு நன்றி Bala
வருகைக்கு நன்றி Riyas
வருகைக்கு நன்றி Goma
வருகைக்கு நன்றி ரமேஷ் பாபு
அருமையான கதை...
பாராட்டுகள்....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
வருகைக்கு நன்றி kannan
அன்பின் டிவிஆர்கே - இக்கால கட்டத்தில் தவிர்க்க இயலாத ஒன்று - வழியில்லை. ம்ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வருகைக்கு நன்றி Cheena sir.
இக்கால கட்டத்தில் தவிர்க்க இயலாத ஒன்று - வழியில்லை. ம்ம்ம்ம்ம்
We too experienced with Baby Care!
வருகைக்கு நன்றி KOMATHI JOBS
Post a Comment