மரணம் நிச்சயமெனத் தெரிந்தும்
மனதில் ஆசையும் தேவையும்
அதிகம் கொண்ட பதராய்
மரணம் நிச்சயமெனத் தெரிந்தும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்
சுற்றமும், நட்புமாய்
மரணம் நிச்சயமெனத் தெரிந்தும்
ஈகையும், அன்பும் இரக்கமுமின்றி
கல்மனம் கொண்டவனாய்
மரணம் நிச்சயமெனத் தெரிந்தும்
ரத்த உறவுகள் அவதிப்படுவதுக் கண்டு
கலங்காது வாளாயிருப்பவனாய்
மண்ணில் வாழ்ந்தென்ன பயன்
6 comments:
மண்ணில் வாழ்ந்தென்ன பயன//
சும்மா நச்சின்னு சொல்லிட்டீங்க மக்கா....
முதல் மழையும் நானே...
இரண்டாவது மழையில் குடை பிடித்துக்கொண்டு நிற்பவளும் நானே
வருகைக்கு நன்றி Mano
வருகைக்கு நன்றி Goma
சூப்பர் கவிதை.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Post a Comment