பயிரை பாதுகாக்க வேலிகள் அமைப்பதுண்டு..ஆனால்..அந்த வேலிகளே பயிருக்கு பகையானால்...
தவறு செய்பவர்களை விசாரித்து நீதி வழங்க வேண்டியது..நீதிபதிகள்..
அவர்களே தவறு செய்தால்..
யாரிடம் முறையிடுவது..
ஏற்கனவே ஒரு நீதிபதி பாராளுமன்றத்தில் ஆஜராகி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஒரு நீதிபதி ஊழல் புகாருக்கு ஆஜராகி..விசாரணையில் உள்ளார்.
இந்நிலையில் மாநிலங்களில் லோக் அயுக்தா என்னும் அமைப்பு.
அரசு பதவிகளில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்குவதையும்..ஊழலில் ஈடுபடுவதையும் விசாரித்து தண்டனை வழங்கும் பொறுப்பு அதற்கு.
ஆனால் அவ்வமைப்பில் அப்பொறுப்பில் இருந்த கர்நாடக மாநில பொறுப்பாளி சிவராஜ் பாட்டீல் ஊழல் செய்துள்ளதாகப் புகார்.
இவருக்கும், இவர் மனைவிக்கும் பெங்களுரில் 16000 சதுர அடிகளுக்கு மேல் மனைகள் உள்ளன.ஐகோர்ட்டிலும்,சுப்ரீம் கோர்ட்டிலும் நீதிபதியாய் இருந்தவர்க்கு சொந்த நிலம் ,வீடு இருப்பதில் தவறேதுமில்லை.
ஆனால் 1982ல் இவர் வசந்த நகரில் 2400 சதுர அடி நிலம் வாங்கியுள்ளார்.ஆகவே, வீட்டு வசதி சங்கம் மூலம் சலுகை விலையில் மனையோ, வீடோ வாங்கும் தகுதி இழந்துள்ளார்.ஆனால் 1994ல் சங்கம் மூலம் 9600 சதுர அடி நிலம் மனையைப் பெற்றுள்ளார்.காரணம் கேட்டால்..நீதிபதிகள் வேறு வீடோ,மனையோ இல்லை என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தேவையில்லையாம்..
நான் மட்டுமல்ல..நிறைய நீதிபதிகள் இப்படி வாங்கியுள்ளார்கள் என்கிறார் இவர்.
இத்துடன் நில்லாது 2006ல் மனைவி பெயரில் இன்னொரு சங்கம் 4012 அடி நிலம் ஒதுக்குகிறது.
இப்படிப்பட்ட செய்திகள் வெளீயானதும், மனைவி அந்த இடத்தை மீண்டும் சங்கத்திடம் கொடுத்து விட்டார்.
இவர் லோக் ஆயுக்தா தலைவராக சென்ற மாதம் தான் பதவி ஏற்றார்.
இந்நிலையில், இவர் நேற்று ஆளுநர் பரத்வாஜை சந்தித்து நேற்று தனது ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்தார்.
'என் மீது அவதூறு புகார்கள் கூறப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பதவி விலகியுள்ளேன்' என்றுள்ளார்.
ஒன்றல்ல..இரண்டல்ல..லோக்பால் மசோதாக்கள் ஆயிரம் வந்தாலும்..மனிதன் மாறப்போவதில்லை.
'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்..திருட்டை ஒழிக்க முடியாது' என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகள் காதுகளில் கேட்கிறது.
4 comments:
அன்பின் டி வி ஆர் - உண்மை உண்மை - திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது - லோக் ஆயுக்தாவி பொறுப்பில் உள்ள சிவ்ராஜ் பாட்டீல் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உயர நீதி மன்ற தலைமை நீதிபதி தினகரன் மீது குற்றச்சாட்டுகள் - ம்ம்ம் - என்ன செய்வது ......
உண்மை, மிகவும் சரி.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
வருகைக்கு நன்றி Cheena sir
வருகைக்கு நன்றி கண்ணன்
Post a Comment