Friday, September 2, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (2-9-11)
1) சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த சர் சி.வி.ராமனும்,சுப்பிரமணியம் சந்திரசேகரும் பௌதிகத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்.ராமன், 'வானம் ஏன் நீல நிறமாக இருக்கிறது' என்பதற்கான காரணத்தைக் கண்டு பிடித்தார்.நட்சத்திரங்கள் குறிப்பிட்ட அளவிற்குத்தான் அடர்த்தியைத் தாங்கும், அதற்கு மேல் போனால் அணுகுண்டு போல பலமாக வெடித்துவிடும் என சந்திரசேகர் கண்டுபிடித்தார்.
2) எப்போதும் வெண்மை நிற ஆடைகளை அணிபவர்கள் சாந்த குணமுடையவர்களாக இருப்பார்களாம்.(அரசியல்வாதிகள் பெரும்பாலும் வெண்ணிற ஆடையைத்தானே அணிகிறார்கள்..ஆனால் சாந்தத்திற்கும் அவர்களுக்கும் காத தூரமாயிற்றே..
3)சென்னை ஜி.எச். தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவ மனையாம்.தினமும் 10000 க்கும் மேல் புற நோயாளிகளும்,சுமார் 3000 பேர் உள் நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்களாம்.
4)இந்தியாவிலேயே அதிக அளவு விதவைகள் உள்ள மாநிலம் தமிழ் நாடு தான்..என்கிறது ஐ.நா.வின் ஒரு அறிக்கை.37 லட்சம் பெண்கள் கணவனை இழந்த நிலையில் உள்ளனர்.இவர்களில் 50 விழுக்காட்டிற்கு மேல் 35 வயதிற்குக் குறைவானவர்கள்.இளம் வயதில் இறந்த கணவன்மார்களில் 90 விழுக்காடு மரணத்திற்கு குடியே காரணமாகும்.
5)  சென்னையில் பல பேருந்து நிற்கும் இடங்களில் ஷெல்டர் இல்லை..இருந்த இடங்களிலும் இடிக்கப்பட்டன.மழை வந்துவிட்டாலோ,உச்சி வெயிலிலோ பல பிரயாணிகள் படும் அவதி சொல்லி மாளாது.உடன் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்..உள்ளாட்சி தேர்தல் வருகுது ..அரசியல் கட்சிகள் இதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
6)பேருந்தில் சொகுசு வண்டியில் பயணக் கட்டிணம் ,,கிட்டத்தட்ட ஷேர் ஆட்டோ கணக்கில் வந்துவிட்டது என பயணிகளின் புலம்பல் அடிக்கடி கேட்கிறது இப்போதெல்லாம்.
 7)உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாம்.
8)'தமிழக மக்கள் யாரிடத்திலேயும் கையை நீட்டிப் பெறுகின்ற நிலைமை இருக்கக்கூடாது.இந்த நிலையை எனது வாழ் நாளில் நான் காண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.அதுதான் என் லட்சியம்' என்றுள்ளார் முதல்வர் ஜெ.(யாரும் என் காலில் விழாத் நிலை வர வேண்டும் என்ற லட்சியத்தையும் அவர் கடை பிடிக்கலாமே என்கிறார் அமைச்சர் ஒருவர்)
9)Stones-They come in our way as Hurdles.But, once we pass them, they automatically become our MILESTONES.
10)தென்னிந்தியாவில் தான் அண்ணா பெயரைச் சொல்லி அரசியல் ஆதாயங்களும்..அரசியலும் நடக்கிறது என்றால்...வட இந்தியாவிலும் Anna பெயரில் குளிர் காய ஆரம்பித்துவிட்டார்கள்.

3 comments:

காந்தி பனங்கூர் said...

//தென்னிந்தியாவில் தான் அண்ணா பெயரைச் சொல்லி அரசியல் ஆதாயங்களும்..அரசியலும் நடக்கிறது என்றால்...வட இந்தியாவிலும் Anna பெயரில் குளிர் காய ஆரம்பித்துவிட்டார்கள்.//

நம் மக்களுக்கு எப்பவுமே உழைக்காமல் சாப்பிடத்தான் பிடிக்கிறது. அதனால் தான் இப்படியெல்லாம் நடக்கிறது.

சிநேகிதன் அக்பர் said...

நல்ல கருத்துகள் சார்.

Kannan said...

மிகவும் நல்ல கருத்து.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com