சாதாரணமாக நமக்கு செருப்பு வாங்க வேண்டுமென்றால் பக்கத்தில் இருக்கும் காலணிகள் விற்கும் கடைக்குச் செல்வோம்..அல்லது அதிக பட்சம் ஆட்டோவில் பேட்டா இருக்குமிடம் செல்வோம்..
ஆனால் உத்தரபிரதேச முதல்வர் லக்னோ விலிருந்து மும்பைக்கு ஜெட் விமானத்தை அனுப்பி வாங்கியதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவ ரகசியங்கள் மற்றும் தூதரகங்கள் அந்நாட்டிற்கு அனுப்பிய தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது.உலகத் தலைவர்களைப் பற்ரி அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட தகவல்களும் வெளீயாகிவருகின்றன.
2007 முதல் 2009 வரைக்கான தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
அதில் உ.பி., முதல்வர் மாயாவதி பற்றி தெரிவித்துள்ள விவரம்..
மாயாவதி மிகவும் அகம்பாவமும் கர்வமும் மிக்கவர்.பிரதமர் பதவி மீது அவருக்குக் கண்.தன்னைப் போற்றுவோர்கள்,தொழிலதிபர்கள் ஆகியோரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடுகிறார்.பொதுக் கூட்டங்களில் 1000 ரூபாய்களால் அன மாலை அணிவிக்கப்படுகிறது.
தனக்குத் தானே சிலை வைத்துக் கொள்ளுதல் போன்றவற்றிற்கு அடிக்கடி விமரிசனத்திற்கு உள்ளாகிறார்.
ஒரு சமயம் தனக்குப் பிடித்த செருப்புகள் வாங்க உ.பி.யிலிருந்து மும்பைக்கு தனக்கு சொந்தமான ஜெட் விமானத்தை இதற்காகவே மும்பைக்கு அனுப்பி செருப்பை கொண்டுவர செய்தார்.தன்னை சுற்றி இருப்பவர்கள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை.உணவில் விஷம் வைத்துத் தன்னைக் கொல்வார்களோ என்னும் பயத்தில் தனது உணவை சாப்பிட்டு பரிசோதனை செய்ய சம்பளத்திற்கு ஆட்களை வைத்துள்ளார்.
இத் தகவல்களை 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் நாள் அமெரிக்க அரசுக்கு அனுப்பப்பட்டதாக விக்கிலீக்ஸ் கூறுகிறது.
அமைச்சர்கள் தனக்குக் கட்டுப்பட வேண்டும் என நினைக்கும் மாயாவதி அவர்களை தகுதிக்கு ஏற்ப நடத்துவதில்லை.சிறூ தவறுகள் செய்தாலும் கடுமையாகத் தண்டிப்பார்.அது..சிறு குழந்தைகளுக்கு பள்ளியில் கொடுக்கப் படும் தண்டனையைப் போன்றது.ஒரு முறை ஒரு சிறு தவறு செய்த அமைச்சரை தன் முன்னிலையில் தோப்புகரணம் போட வைத்து தண்டித்துள்ளார்.அமைச்சரும் அழுதுக் கொண்டே தோப்புகரணம் போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஸ்கி- நம்ம தலைவர் 60 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது ஜுஜுபி என்கிறார் ஒரு அதிமுக. தொண்டர்
5 comments:
உத்தரபிரதேச முதல்வர் லக்னோ விலிருந்து மும்பைக்கு ஜெட் விமானத்தை அனுப்பி வாங்கியதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.//
இது உண்மை என்றால், இதைவிட வெக்கக்கேடு வேறே இல்லை...!!!
அய் நான்தான் பஸ்ட் ஹே ஹே ஹே ஹே...
அட ..செருப்பு வாங்க தனி விமானமா..?
பல்லு இருக்கவ பகோடா திங்காள் - நசரேயன்:)))
பணம் பத்தும் செய்யும்.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Post a Comment