Wednesday, September 14, 2011

பட்டினியில் வாடும் அமெரிக்கர்கள்..




வளம் கொழிக்கும் நாடு அமெரிக்கா..
அங்கு உள்ளவர்கள் அனைவரும் செல்வந்தர்கள்..என்றெல்லாம் நினைப்போர் உண்டு..
ஆனால் அமெரிக்காவின் சந்தை,வங்கி,பொருளாதாரம் ஆகியவை 2008ஆம் ஆண்டிற்கு பிறகு வெகுவான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
அதிலிருந்து அமெரிக்காவால் இன்னும் மீள முடியவில்லை.
வருமானம் குறைவு,வேலையின்மை ஆகியவற்றால் அமெரிக்காவில் வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பட்டினியில் வாடுவோர் எண்ணிக்கை 4.5 கோடி என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக பட்ச எண்ணிக்கை ஆகும்.
நாங்கு நபர் கொண்ட ஒரு குடும்பத்தின் வருமானம் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு குறைவாகவும், தனி நபர் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குக் குறைவாகவும் உள்ளவர்களை வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை  2009 ஆம் ஆண்டு 6.4 விழுக்காட்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு 7.1 விழுக்காடாக அதிகரித்துள்ளது.


8 comments:

Samantha said...

wooooo...didnt expect this..gud informative post

Unknown said...

அண்ணே இது எல்லாம் உண்மையா?

அப்ப அவங்க கணக்கு படி நான் எல்லாம் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கேனா அடப்பாவமே!!

MANO நாஞ்சில் மனோ said...

அட, இது ரொம்ப புது தகவலா இருக்கே....!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Samantha

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜ.ரா.ரமேஷ் பாபு

பித்தனின் வாக்கு said...

oru mayak kotai udaikinrathu. good news

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பித்தனின் வாக்கு