Sunday, September 18, 2011

இந்த வாரம் வைரமுத்துவை வாசித்தீர்களா...?




நான் இரு வாரங்களுக்கு முன் வைரமுத்து விகடனில் எழுதி வரும் 'மூன்றாம் உலகப் போர்' தொடரை வாசியுங்கள் என்று எழுதியிருந்தேன்.
எவ்வளவு பேர் அதைப் படிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
இப்பதிவைப் படிக்கும் நீங்கள் அத் தொடரை இதுவரை படிக்கவில்லை யெனில் ..உடனே படிக்க ஆரம்பியுங்கள்..
அதில்..வைரமுத்துவின் தமிழைப் படிக்கலாம்..நமது இலக்கிய தாகத்தை சிறிது அடைக்கலாம்.
இவ்வாரம் அத்தொடரிலிருந்து சில பகுதிகள்.

அறிவை மட்டும் கொண்டாடுவதில்லை நான்..அது தகவல் போதை அல்லது மூளைச் சாராயம்..
மனிதநேசம் இல்லாத அறிவு யாருக்கு வேண்டும்?மண்ணின் மீது விழாத மழையாலும் மனிதன் மீது விழாத கண்ணீராலும் யாது பயன்?
ஏரிகளைத் தலைக்கு வைத்து உறங்கும் காடுகளின் தலைநகரம் அது..(அட்லாண்டா பற்றி)
இந்தியா என் தூரத்துக் கனவு
எங்கள் அமெரிக்கா அறிந்தவரையில் வித்தியாசமான தேசம் இந்தியா
உயர்ந்த ஞானம் தொட்டது இந்தியா
அதிக மூட நம்பிக்கை கொண்டதும் அதுதான்
வறுமையில் வாடுவோர் அதிகம் உள்ளதும் இந்தியா
வெளிநாடுகளில் அதிகப் பணம் பதுக்கி வைத்திருப்பதும் அதுவே தான்
தனி மனிதனுக்கு அதிக நீதி சொன்னதும் இந்தியா
ஊழல் என்பதை ஒரு வாழ்க்கை முறை எனபழகி வைத்திருப்பதும் இந்தியா
இந்து-பௌத்தம்-சமணம் என்ற முப்பெரும் மதங்களை ஈன்று கொடுத்ததும் இந்தியா
மதச்சார்பற்ற தேசம் என்று மார் தட்டுவதும் இந்தியா
ஒழுக்கம் பற்றி அதிகம் வலியுறுத்துவதும் இந்தியா
எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் இருப்பதும் இந்தியா
காமத்தின் வழி கடவுளைக் கண்டதும் இந்தியா
கடவுளின் வழி காமத்தைக் காண்பதும் இந்தியா
இத்தனைக்குப் பிறகும் மனித வளத்தோடு,ஜீவ துடிப்போடு,உடல் வருந்தும் உழைப்போடு உலகப் போட்டியில் ஓயாது ஓடிக் கொண்டிருப்பதும் இந்தியா..

(இது போதும்...மேலும் அவரது எழுத்தை..படித்து ரசியுங்கள்)

8 comments:

shortfilmindia.com said...

ரெக்கமண்டேஷனுக்கு நன்றி.. நான் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். சரி.. நம்ம உடான்ஸுல சேர்த்து உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்.
http://www.udanz.com

பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் திரட்டி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

தமிழ்மணத்தில் இணைக்க இயலவில்லை..படிப்பவர் முயலவும்

aotspr said...

நானும் படித்தான்.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

J.P Josephine Baba said...

நல்ல சிந்தனைத் துளிகள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
shortfilmindia.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Kannan

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Kannan

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி J.P Josephine Baba