Friday, September 23, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (23-9-11)




1) விஜய் டீ.வி.சூபர் சிங்கர் ஜூனியர் புகழ் ஏழு வயது ஸ்ரீகாந்த் 7 மணி நேரம் தொடர்ந்து பாடி உலக ரிகார்ட்,ஏசியா புக் ஆஃப் ரிகார்ட்,லிம்கா புக் ஆஃப் ரிகார்ட் ஆகியவற்றில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

2)ஏர்டெல் சூபர் சிங்கர் 3ந் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.சாய் சரண் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.அவருக்கு வாழ்த்துகள்.ஆனால் நமது சந்தேகம் எல்லாம்..உண்மையாகவே முடிவுகள் மக்கள் அனுப்பும் எஸ்.எம்>எஸ்., கணக்கைக் கொண்டுதான் எடுக்கப்படுகிறதா? அப்ப்டியானல் ஒவ்வொருவருக்கு வந்துள்ள எஸ்.எம்.எஸ்., எவ்வளவு..விவரங்களை தெரிவிக்கலாம்.(ஒருவேளை..ஏர்டெல்லிற்கு இதன் மூலம் வரும் வருமானம் வெளியில் தெரிந்துவிடும் என்பதற்காக இருக்குமோ)..எது எப்படியோ..முடிவுகள் சற்று ஆச்சரியத்தையும், கேள்விக்குறியையும் எழுப்பத்தான் செய்தது.

3)சி,மஹேந்திரன் விகடனில் எழுதும்  'வீழ்வேனென்று நினைத்தாயோ?'கட்டுரைத் தொடரில் படித்தது.
 இலங்கையின் தேசியக்கொடியில் சிங்கம் கையில் வாளேந்தி நிற்கிறது.சிங்கம் தூக்கிய வாள் யாருக்கு எதிரானது?தமிழர்களுக்கு எதிரானது என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

4)'ஆட்டுவிப்பவன் ஆட வரக்கூடாது'என்பார்கள்.ரெட்டைச் சுழி ஞாபகப் பிசகு...என்கிறார் கே.பாலசந்தர்..  'ரெட்டைச் சுழியில்' தனது நடிப்பைப் பற்றிய கேள்விக்கான பதிலில்.

5)தூக்கத்தில் கனவு வராது..கனவு காண்பவர்களால் தூங்க முடியாது என்றுள்ளார் அப்துல் கலாம்

6) வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட சம்பளம்..வேலை செய்ய ஓவர் டைம்..என்று சாதாரணமாக அரசு ஊழியர்கள் பேசுவர்..அதை நினைவூட்டுகிறது.
 எம்.எல்.ஏ., க்களின் சம்பளம் 55000 ஆக உயர்ந்துள்ளது என்னும் செய்தி.
 சட்டசபைக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு வெளிநடப்பு செய்ய 55000...

7) இந்தியாவில் ஒரு நாள் தனி நபர் வருமானம் 31க்கு மேல் இருந்தால் அவர்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களாம்.அவர்களுக்கு அரசு வழங்கும் இலவச மருத்துவம் போன்ற சலுகைகள் கிடைக்காதாம்.
(ஆறாவது செய்தி படித்துவிட்டு..7 வது படித்து விட்டு..அதற்கும்..இதற்கும் முடிச்சு போடக்கூடாது)

8)மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம்.

9) சாய் சரண் பாடிய பாடல் http://youtu.be/mKM9IJK_Kxs
 

7 comments:

அமைதி அப்பா said...

நல்ல தொகுப்பு!
நன்றி.

******************
நேரம் கிடைத்தால் இதையும் படித்துப் பாருங்களேன்.

பொறுமையை சோதித்த விஜய் டிவி!

நன்றி.

Mohamed Faaique said...

சுவாரஸியமான ஒரு பதிவை படித்த திருப்தி.

cheena (சீனா) said...

அன்பின் டி.வி.ஆர்.கே - சூப்பர் சுண்டல் - எல்லாமே அளவா - தேங்கா மாங்கா பட்டாணி எல்லாமே - ரசிச்சுப் படிச்சேன் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அமைதி அப்பா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mohamed Faaique

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Cheena sir

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Kannan